என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    அசத்தல் அம்சங்கள் கொண்ட ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

    குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களுக்கென பிரத்யேக தளமான ஆண்ட்ராய்டு கோ எடிஷன் உருவாகி வருகிறது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் 2018 ஆம் ஆண்டு முதல் வெளியாகி வருகிறது. 

    அந்த வரிசையில் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. புதிய கோ எடிஷன் அதிவேக செயல்பாடு, மேம்பட்ட பெர்மிஷன்கள், ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு உள்ளது. 

    ஆண்ட்ராய்டு 11 தளத்தில் இருக்கும் மூன்று அம்சங்கள் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷனிலும் வழங்கப்பட்டு உள்ளது. இவை கான்வெர்சேஷன்களுக்கு தனி பகுதி, செயலிகளுக்கு மேம்பட்ட பெர்மிஷன் கண்ட்ரோல் மற்றும் சிஸ்டம் வைடு ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் ஆகும்.  

     ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன்

    கோ எடிஷனில் உள்ள பெர்மிஷன்கள் ஆண்ட்ராய்டு 11 தளத்தில் உள்ளதை போன்றே இயங்குகிறது. பயனர்கள் ஒருமுறை பெர்மிஷன்களை வழங்கினால் அவை அந்த செயிலியில் ஆட்டோ-ரீசெட் செய்யப்பட்டுவிடும். அடுத்த முறை இதே பெர்மிஷன் தானாக செயல்படுத்தப்பட்டு விடும்.

    இத்துடன் ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வசதியும் கோ எடிஷனில் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் ஹோம் ஸ்கிரீன், பின்புறமாக நேவிகேட் செய்தால் செயலிகளுக்கிடையே ஸ்விட்ச் செய்ய முடியும். 

    இதேபோன்று கூகுள் ஃபைல்ஸ் சேவையில் புதிதாக சேஃப் ஃபோல்டர் வழங்கப்படுகிறது. இதை கொண்டு தனிப்பட்ட தரவுளை 4 இலக்க பின்-என்க்ரிப்ட்டெட் ஃபோல்டரில் வைத்துக் கொள்ளலாம். 

    ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் அதிகபட்சம் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதை கொண்டு செயலிகளை 20 சதவீதம் வேகமாக லான்ச் செய்ய முடியும். ரேம் வசதி நீட்டிக்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் மூன்றில் இருந்து நான்கு செயலிகளை பேக்கிரவுண்டில் இயக்க முடியும்.
    பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 49 விலையில் 2 ஜிபி டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 49 விலையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகை முதற்கட்டமாக 90 நாட்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்சமயம் இந்த சலுகை சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    90 நாட்களுக்கு கிடைக்கும் புதிய சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ரூ. 49 சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் பயனர்களுக்கு 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. 

     கோப்புப்படம்

    இதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால்களுக்கு நிமிடம் ஒன்றுக்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாய்ஸ் கால் மட்டுமின்றி இந்த சலுகையில் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 29 ஆம் தேதி வரை கிடைக்கும் என பிஎஸ்என்எல் அறிவித்து இருக்கிறது.

    முன்னதாக இதே வட்டாரங்களில் பிஎஸ்என்எல் ரூ. 1499 விலையில் வருடாந்திர சலுகையை அறிமுகம் செய்தது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 250 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இத்துடன் 24 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை திடீர் குறைப்பு.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுகமான சில மாதங்களில் இவற்றின் விலை ஜிஎஸ்டி  வரி உயர்வு காரணமாக ஏப்ரல் மாத வாக்கில் உயர்த்தப்பட்டன. 

    இந்நிலையில், இந்தியாவில் அறிமுகமாகி ஏழு மாதங்களுக்கு பின் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 என இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

     கேலக்ஸி ஏ71

    விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ51 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 23999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 25,999 என மாறி உள்ளது. முன்னதாக இவற்றின் விலை முறையே ரூ. 25,250 மற்றும் ரூ. 27,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி ஏ71 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 32999 இல் இருந்து ரூ. 30,999 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. குறைக்கப்பட்ட புதிய விலை சாம்சங், ப்ளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. ஆஃப்லைன் தளங்களிலும் இவை மாற்றப்படும் என தெரிகிறது.
    நிலவில் உள்ள வளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய நாசா தனியார் நிறுவனங்களை தேடி வருகிறது.


    சந்திரனில் உள்ள பாறைகள் மற்றும் பாறை படிவங்களை எடுத்து வர உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களை நாசா தேடுகிறது. விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் நாசா களமிறங்கி இருக்கிறது.

    இந்த திட்டம் 2024 க்கு முன் சந்திரனில் உள்ள வளங்களை மீட்டெடுப்பது மற்றும் மாற்றுவதை நிறைவு செய்வதே நோக்கம் என நாசா கூறியுள்ளது.

     நாசா வரைபடம்

    2024 ஆம் ஆண்டு வாக்கில் முதல் அமெரிக்கப் பெண்ணையும் அடுத்து ஒரு ஆணையும் சந்திரனில் தரையிறக்க நாசா இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் நாசா சந்திர வளங்களை கைபற்ற வேண்டும் என நினைக்கிறது.

    நாசா கோடிட்டுக் காட்டிய தேவைகளின்படி, ஒரு நிறுவனம் சந்திர மேற்பரப்பில் உள்ள எந்த இடத்திலிருந்தும் ஒரு சிறிய அளவு சந்திரன் கன்மம் அல்லது பாறைகளை சேகரிக்கலாம். பின்னர் அதன் உரிமையை நாசாவுக்கு மாற்ற வேண்டும். உரிமை பரிமாற்றத்திற்குப் பிறகு, சேகரிக்கப்பட்ட பொருள் அதன் பயன்பாட்டிற்கான நாசாவின் ஒரே சொத்தாக மாறும்.

    நாசாவின் கட்டணம் சந்திர பாறைபடிவங்களுக்கு மட்டுமே, முன் தொகை 10 சதவிகிதம், அறிமுகம் செய்யப்பட்டதும் 10 சதவிகிதம் மற்றும்  வெற்றிகரமாக முடிந்தவுடன் மீதமுள்ள 80 சதவிகிதம் கொடுக்கப்படும் அதற்கான மீட்டெடுப்பு முறைகளை நாசா தீர்மானிக்கும்.
    அசத்தல் அம்சங்கள் கொண்ட ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒப்போ நிறுவனம் எஃப்17 மற்றும் எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. ஒப்போ எஃப்17 ப்ரோ விலை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, இரு 2 எம்பி மோனோ கேமராக்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     ஒப்போ எஃப்17

    ஒப்போ எஃப்17 சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் 2400×1080 பிக்சல் 20:9 FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர் ஒஎஸ் 7.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
    - 8 எம்பி 119.9° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
    - 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4015 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் வூக் ஃபிளாஷ் சார்ஜ் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ எஃப்17 ஸ்மார்ட்போன் நேவி புளூ, கிளாசிக் சில்வர் மற்றும் டைனமிக் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,990 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
    டிக்டாக் செயலியின் தடை விவகாரத்தில் அதற்கு துளியும் வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.


    சீன நிறுவனமான பைட்-டேன்ஸ் தனது டிக்டாக் செயலியை விற்பனை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். டிக்டாக் தடை உறுதியாவது, செயலியை விற்பனை செய்வது தவிர அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்தார். 

    அதிபர் டிரம்ப் கருத்து டிக்டாக் சார்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பைட்-டேன்ஸ் நிறுவனம் தனது டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

     டிக்டாக்

    டிரம்ப்பின் முந்தைய உத்தரவின் படி டிக்டாக் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்  விற்பனை செய்ய வேண்டும். இதுவரை டிக்டாக்கை வாங்குவது பற்றி எந்த நிறுவனமும் இறுதியான முடிவை அறிவிக்கவில்லை. 

    இதுவரை வெளியான தகவல்களின் படி டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற  நிறுவனங்கள் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ இ சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இதுவரை மோட்டோ இ சீரிஸ் பிராண்டிங்கில் பல்வேறு மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் புதிய மோட்டோ இ சீரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் மோட்டோ இ7 பிளஸ் எனும் பெயரில் உருவாகி வருகிறது. இது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்றும் இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

     மோட்டோ இ7 பிளஸ்

    மோட்டோ இ7 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 48 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 10 வாட் சார்ஜிங் வசதி
    - மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்களை பார்ப்போம்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல்கள் நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளது. 

    கடந்த சில ஆண்டுகளாக வீடியோ கேம் கன்சோல்கள் வெளியாகாமல் இருந்தது. முந்தைய எக்ஸ்பாக்ஸ், எக்ஸ்பாக்ஸ் ஒன் உள்ளிட்டவை 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. 

     எக்ஸ்பாக்ஸ்

    இந்திய சந்தையில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மாடல் விலை ரூ. 49,990 என்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல் விலை ரூ. 34,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு கன்சோல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 22 ஆம் தேதி துவங்குகிறது. 

    இதன் விற்பனை நவம்பர் 10 ஆம் தேதி துவங்குகிறது. எக்ஸ்பாக்ஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் 24 மாதங்களுக்கான எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் அல்டிமேட் இலவசமாக வழங்குகிறது. இத்துடன் இஏ பிளே எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.

    புதிய கன்சோல்களுடன் அசாசின்ஸ் கிரீட் வல்ஹாலா, கியர்ஸ் டேக்டிக்ஸ், டர்ட் 5 மற்றும் வாட்ச் டாக்ஸ் லீஜியன் போன்று புது வீடியோ கேம்களும் வெளியாகின்றன.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போன் வெளியீட்டு விவிரங்களை பார்ப்போம்.


    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை ஆண்ட்ராய்டு போன் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பயன்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த ஜியோ முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 கோடி யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. விலை குறைந்த போனுடன் ஜியோவின் டேட்டா சலுகைகளும் வழங்கப்பட இருக்கிறது.

     ரிலையன்ஸ் ஜியோ

    ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன் ஒஎஸ் உருவாக்கி வருகிறது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் என்ட்ரி லெவல் 4ஜி ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் முதல் ஸ்மார்ட்போன் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்யேக முகக்கவசத்தை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொறியியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக முகக்கவசம் ஒன்றை வடிவமைத்து இருக்கின்றன. இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் ஊழியர்களுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது.

    புதிய முகக்கவசங்களின் புகைப்படங்களை ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. எனினும், இவை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருப்பதால் வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஆப்பிள் முகக்கவசம்

    மூன்று லேயர்களை கொண்டிருக்கும் ஆப்பிள் முகக்கவசங்களை அதிகபட்சம் ஐந்து முறை துவைக்க முடியும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முகம் தெளிவாக தெரியும் படியான முகக்கவசங்களையும் வழங்குகிறது. 

    இந்த முகக்கவசங்கள் ஆப்பிள் கார்ப்பரேட் மற்றும் ரீடெயில் பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இந்த முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.
    7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

    3டி கிளாஸ்டிக் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்51 மாடலின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 7000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது. 

     கேலக்ஸி எம்51

    சாம்சங் கேலக்ஸி எம்51 சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஓ சூப்பர் AMOLED பிளஸ்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 ஜிபியு
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 12 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில்  கேமரா, f/2.2
    - 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2
    - 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 7000 எம்ஏஹெச் பேட்டரி
    - 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் செலஸ்டியல் பிளாக் மற்றும் எலெக்ட்ரிக் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ரீடெயில் குழுமத்தில் மற்றொரு அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனமான சில்வர் லேக் பார்ட்னர்ஸ் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் 1.75 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் தெரிவித்து உள்ளது. 

    இதற்காக ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் சில்வர் லேக் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 7500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தனது ரீடெயில் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. 

     ரிலையன்ஸ் ரீடெயில்

    இதன் காரணமாக அடுத்த சில காலாண்டுகளில் மேலும் சில நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவில் முதலீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்வர் லேக் முதலீடு நடவடிக்கை ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் மதிப்பை ரூ. 4.21 லட்சம் கோடி என கணக்கிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. 

    இந்திய சந்தையில் ரீடெயில் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் ஃபியூச்சர் குழுமத்தின் சில்லறை வியாபார பிரிவை ரூ. 24 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியது.
    ×