என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சியோமியின் ரெட்மி பிராண்டு குறைந்த விலையில் மற்றொரு ரெட்மி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9, ரெட்மி 9ஏ, ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் போன்ற சாதனங்களை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
அந்த வரிசையில், ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஐ எனும் பெயரில் அறிமுகமமாகிறது. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை ரெட்மி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கென பிரத்யேக மைக்ரோசைட் ஒன்று துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி புதிய ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனில் டாட் டிராப் ஸ்கிரீன், 4 ஜிபி ரேம், பெரிய பேட்டரி, எம்ஐயுஐ 12 உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ மாடலின் மற்றொரு வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.
புதிய ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரெட்மி 9ஐ மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.
கூகுள் நிறுவனம் மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகளை தனது பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் அடங்கிய ஆறு செயலிகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிளே ஸ்டோரில் இருந்து அவை உடனடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஜோக்கர் என அழைக்கப்படும் இந்த மால்வேர் ஏற்கனவே ஜூலை மாத வாக்கில் 11 செயலிகளில் கண்டறியப்பட்டது.
தற்சமயம் ஆறு செயலிகளில் இந்த மால்வேர் இருப்பதாக பிரேடியோ எனும் சைபர்செக்யூரிட்டி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து கூகுளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது. மால்வேர் கண்டறியப்பட்ட செயலிகள் பிளே ஸ்டோரில் சுமார் 2 லட்சம் டவுன்லோட்களை பெற்று இருந்தன.

ஜோக்கர் என்ற மால்வேர் பிலீஸ்வேர் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் பாட் ஆகும். இந்த மால்வேர் மொபைல்களில் தேவையற்ற க்ளிக்களை மேற்கொண்டு கட்டணம் வசூலிக்கும் பிரீமியம் சேவைகளில் சேர்க்கும் தன்மை கொண்டது.
சேஃப்டி ஆப்லாக், கன்வீனியன்ட் ஸ்கேனர் 2, புஷ் மெசேஜ் - டெக்ஸ்டிங் மற்றும் எஸ்எம்எஸ், எமோஜி வால்பேப்பர், செப்பரேட் டாக் ஸ்கேனர் மற்றும் ஃபிங்கர்பிட் கேம்பாக்ஸ் என்ற செயலிகளில் ஜோக்கர் மால்வேர் கொண்டிருந்ததால், பிளே ஸ்டோரில் நீக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த செயலிகளை ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்கள் இவற்றை அன்-இன்ஸ்டால் செய்வதே சிறந்தது என பிரேடியோ அறிவுறுத்தி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் ரக நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2020 ஐஎஃப்ஏ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இது நடைபெறவில்லை.
புதிய நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

அந்த வகையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் தெளிவாக காட்சியளிக்கும் ரென்டர்கள் இடம்பெற்றுள்ளன. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் வட்ட வடிவ கேமரா பம்ப் மற்றும் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் பெசல் லெஸ் டிஸ்ப்ளே மற்றும் பன்ச்-ஹோல் கட்அவுட் வழங்கப்படுகிறது.
இத்துடன் பக்கவாட்டில் பட்டன்கள், ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் வழக்கமான பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் ஒருபுறமும், மற்றொரு பக்கம் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது.
இதுவரை வெளியான தகவல்களின் படி நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு ஒன் திட்டம் சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு ஒஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 11 ஸ்டேபில் வெர்ஷனை பிக்சல் போன்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு 11 புதிய அம்சங்களை ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது. இதில் புதிய யுஐ, டிஸ்ப்ளே செட்டிங், டார்க் மோட், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

ஆக்சிஜன் ஒஎஸ் 11 பீட்டா சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை பயன்படுத்த விரும்புவோர் அதற்கேற்ற டவுன்லோட் லின்க்குகளை ஃபோரம் தளத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
இது ஓபன் பீட்டா பதிப்பு என்பதால், இந்த வெர்ஷனில் அதிக பிழைகள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
சியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் 1.08 இன்ச் சதுரங்க வடிவம் கொண்ட டச் டிஸ்ப்ளே, அதிகபட்சம் 14 நாட்கள் பேட்டரி பேக்கப், பில்ட் இன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ளது.
இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஆக்டிவிட்டி டிராக்கர், ஸ்லீப் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைன்டர் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் சிறப்பம்சங்கள்
- 1.08 இன்ச் 128x220 பிக்சல் எல்சிடி கலர் டிஸ்ப்ளே
- 2டி டெம்பர்டு கிளாஸ்
- ப்ளூடூத் 5.0
- அழைப்புகள், செயலிகளின் நோட்டிபிகேஷன்
- 24/7 இதய துடிப்பு சென்சார்
- செடன்ட்டரி ரிமைண்டர்
- 5 ஸ்போர்ட் மோட்
- டிரை-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
- 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸடண்ட்
- 130 எம்ஏஹெச் பேட்டரி
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் பிளாக் நிறத்திலும் புளூ, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்த புதிய பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனங்களின் ஒருங்கிணைந்து பிராண்டிங் அறிமுகம் செய்யப்பட்டது. புது பிராண்டு வி என அழைக்கப்படுகிறது.
இது வோடபோன் மற்றும் ஐடியா என இரு பெயர்களின் முதல் எழுத்துக்களை கொண்டது. இது இரு நிறுவனங்களையும் குறிக்கிறது. இதனால் இரு எழுத்துகளை இணைத்து புது பிராண்டின் பெயராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பிராண்டு அறிவிப்பு ஆன்லைன் நேரலை நிகழ்வின் மூலம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரு நிறுவனங்கள் இணைந்தன. தற்சமயம் இரு நிறுவனங்கள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக புது பிராண்டு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத் தொடர்ந்து புதிய பிராண்டிங் வலைதளம், செயலி உள்ளிட்டவற்றில் மாற்றப்பட்டு விட்டது. விரைவில் இது புதிய சிம் கார்டு, பில், விளம்பர போர்டு போன்றவற்றிலும் வி பிராண்டிங் பயன்படுத்தப்பட இருக்கிறது. இரு நிறுவனங்கள் கூட்டு, உலகின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களின் இணைப்பு ஆகும்.
புதிய பிராண்டு பல கோடி இந்தியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7 மற்றும் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
புதிய விலை குறைப்பின் படி ரியல்மி 6 6ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என மாறி உள்ளது. முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 15,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இதேபோன்று 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16999 இல் இருந்து ரூ. 15999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17999 இல் இருந்து ரூ. 16999 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரியல்மி 6 அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது.
ரியல்மி 6ஐ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 6ஐ 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.
ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் நிகழ்வு நடைபெறும் தேதி மற்றும் இதர விவரங்களை அறிவித்து உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் டைம் பிளைஸ் விர்ச்சுவல் நிகழ்வு செப்டம்பர் 15 ஆம் தேதி (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் புதிய வாட்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
டைம் பிளைஸ் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 6, புதிய ஐபேட் மாடல்கள் மற்றும் சில அக்சஸரீக்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தற்போதைய நிகழ்வில் ஐஒஎஸ் 14, மேக்ஒஎஸ் 11, வாட்ச்ஒஎஸ் 7 மற்றும் டிவிஒஎஸ் 14 உள்ளிட்டவைகளின் வெளியீடு பற்றிய தகவல்களும் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஐபேட் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேம்பட்ட எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது.
அக்டோபர் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் OLED டிஸ்ப்ளேக்கள், 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன்களில் இரு மாடல்கள் 5.4 இன்ச், 6.1 இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதன் ப்ரோ மாடல்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் LIDAR சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ14 பிராசஸர் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன்களில் ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்படாது என கூறப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய எம்2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 10999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ எம்2 மாடலில் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

போக்கோ எம்2 சிறப்பம்சங்கள்
- 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 ஜிபியு
- 6 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
- 8 எம்பி 118.2° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ப்ரிக் ரெட், பிட்ச் பிளாக் மற்றும் ஸ்லேட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என்றும், 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹானர் பிராண்டின் புதிய ஹண்டர் கேமிங் லேப்டாப் மாடல் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை ஹானர் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறது.
இதே நிகழ்வில் கேமிங் லேப்டாப் மட்டுமின்றி இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களையும் ஹானர் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை அந்நிறுவனம் 2020 ஐஎஃப்ஏ நிகழ்வில் அறிமுகம் செய்த ஹானர் வாட்ச் ஜிஎஸ் ப்ரோ மற்றும் ஹானர் வாட்ச் இஎஸ் மாடல்களாக இருக்கும் என தெரிகிறது.
புதிய ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கான விளம்பர படத்தின் படி லேப்டாப் ஸ்கிரீனின் பின்பறம் மிளிரும் படியாக லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் பேக்லிட் ரக கீபோர்டு வழங்கப்படுகிறது.
ஹானர் ஹண்டர் கேமிங் லேப்டாப் முழு விவரங்கள், விற்பனை தேதி உள்ளிட்டவை செப்டம்பர் 16 ஆம் தேதி நிகழ்வில் அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மோட்டோரோலா நிறுவனத்தின் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட மோட்டோ ஜி9 பிளஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் இந்த ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இதில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமரா சென்சார்கள், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் விவரங்கள் எஃப்சிசி வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.
எனினும், இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர், கேமரா சென்சார்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறவில்லை.

மோட்டோ ஜி9 பிளஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.81 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+LTPS LCD டிஸ்ப்ளே
- 4 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- அல்ட்ரா வைடு சென்சார்
- மேக்ரோ விஷன் சென்சார்
- டெப்த் கேமரா
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
புதிய மோட்டோ ஜி9 பிளஸ் ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறத்திலும் கிடைக்கும் என தெரிகிறது.
விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பம் கொரோனாவுக்கு சவால் விடும் திறன் கொண்டது என தகவல் வெளியாகி உள்ளது.
மனித வாழ்வில் பயணம் மேற்கொள்வது ஒவ்வொருத்தருக்கும் மறக்க முடியாத நினைவுகளையும், புதுமையான அனுபவத்தையும் கொடுக்கும். மனித இனம் தோன்றியது முதல் பயணம் செய்யும் முறை மாறி வந்த போதிலும், பயணம் செய்தது போதும் என நினைப்போர் யாரும் இல்லை.
இந்த காலக்கட்டத்தில் பயணம் செய்ய பஸ், ரெயில், கார், மோட்டார்சைக்கிள் என சாலை வழி துவங்கி, விமானம் வரை அனைத்துவித பயணங்களும் அனைவருக்கும் ஏற்ற வகையில் கிடைக்கிறது. இவற்றில் வான்வழி செல்லும் விமான பயணம் மற்ற போக்குவரத்துகளை விட அபாயகரமானது என்ற எண்ணோட்டம் பரவலாக இருந்து வருகிறது.
பொதுவாக விமானங்களில் சிறு இடத்தினுள் பலர் மிக அருகில் அமர வைக்கப்படுவர். இத்துடன் விமானத்தினுள் காற்றோட்டத்திற்கான வசதி இருக்காது. இதனால் விமான பயணம் செய்யும் ஒருவருக்கு சளி, இருமல் போன்றவை இருந்தாலும், மிக எளிதில் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் அதிகம் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் இந்த கூற்றில் துளியும் உண்மையில்லை என்பதை விவரிக்கிறது இந்த பதிவு.

விமானங்களின் கேபின்களில் 3 நிமிடங்களுக்கு ஒரு முறை சுத்தமான காற்றால் நிரப்பப்படுகிறது என அறிவீர்களா? ஆம், விமானம் பறக்கும் போது, வெளிப்புறத்தில் இருக்கும் சுத்தமான காற்று விமானத்தினுள் கலக்கப்படுகிறது. வெளிப்புற காற்று பயணிகள் அமரும் பகுதியான கேபினை வந்தடையும் முன் அதிக வெப்பநிலை கொண்ட கம்ப்ரெசர், ஓசோன் ப்யூரிபையர் உள்ளிட்ட சாதனங்களை கடந்து சுத்தமாக்கப்படுகிறது.
வெளிப்புற காற்று சுத்தப்படுத்தப்பட்டு அதன்பின்பே அது கேபினுள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த வழிமுறை தான் ஒவ்வொரு 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இவ்வாறு காற்றை சுத்தப்படுத்த ஹெச்.இ.பி.ஏ. அதாவது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுவதற்கு இணையான தரம் கொண்ட ஏர் பில்ட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிப்புற காற்று ஹெச்.இ.பி.ஏ. பில்ட்டர் கொண்டு சுத்தப்படுத்தப்படுவதால், காற்றில் இருக்கும் அனைத்து விதமான வைரஸ் மற்றும் கிருமிகள் 99.97 சதவீதம் வரை கொல்லப்படுகிறது. இத்தகைய தரமுற்ற காற்று மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அறைகளில் இருப்பதற்கு இணையானவை ஆகும். இத்தனை சுத்தமான காற்று விமான பயணிகளுக்கு ஏன் அச்சுறுத்தலை ஏற்படுத்த போகிறது.

கேபின்களில் சுத்தமான காற்று எந்நேரமும் வந்து போக செய்வதுடன், விமான நிறுவனங்கள் விமானத்தை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து செய்கின்றன. அந்த வகையில், மற்ற போக்குவரத்து முறைகளை விட விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது ஆகும்.
என்ன தான் தொழில்நுட்ப வசதிகள் நம் பாதுகாப்பை உறுதி செய்தாலும், தனிமனித ஒழுக்கம், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, முகக்கவசம் அணிவது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதே நம் பாதுகாப்பிற்கு சிறந்த பலனை தரும்.






