என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஏர்டெல் நிறுவனம் அனைத்து எக்ஸ்-ஸ்டிரீம் சலுகைகளிலும் அன்லிமிட்டெட் டேட்டா வழங்குவதாக அறிவித்து உள்ளது.


    பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது அனைத்து எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் சலுகை பலன்களையும் மாற்றி அமைத்துள்ளது. அந்த வகையில் எக்ஸ்-ஸ்டிரீம் ரூ. 499 சலுகையில் துவங்கி அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஏர்டெல் நிறுவனம் எக்ஸ்-ஸ்டிரீம் ஃபைபர் இணைப்பில் தற்சமயம் ஐந்து சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் துவக்க விலை சலுகை ரூ. 499 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. இதில் நொடிக்கு 40 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து ரூ. 799 சலுகையில் நொடிக்கு 100 எம்பி வேகத்தில் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரூ. 999 சலுகையில் நொடிக்கு 200 எம்பி வேகத்திலும், ரூ. 1499 மற்றும் ரூ. 3999 விலை சலுகைகளில் நொடிக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. 

    அனைத்து சலுகைகளுடன் ரூ. 3999 மதிப்புள்ள ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் 4கே ஆண்ட்ராய்டு பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதில் 10 ஆயிரம் திரைப்படங்கள், நேரலை டிவி, ஒடிடி செயலிகளின் ஒரிஜினல் சீரிஸ் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.
    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கான புது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
     

    போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் வாட்டர்டிராப் நாட்ச், பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்தது. முந்தைய போக்கோ எம்2 ப்ரோ மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.

    போக்கோ எம்2

    புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. போக்கோ எம்2 விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய போக்கோ எம்2 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 13999 முதல் துவங்குகிறது. இதனால் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
    ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.


    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்சமயம் ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 17 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ஸ்கிரீன், குவாட் கேமராக்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் பிரத்யேக டூ-டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இவற்றுடன் ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்களும் வெளியாகி உள்ளது.

     ரியல்மி 7ஐ

    ரியல்மி 7ஐ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
    - அட்ரினோ 610 ஜிபியு
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    சவுண்ட் ஒன் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் ரூ. 990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
     

    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனமான சவுண்ட் ஒன் புதிய வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போன் வி11 என அழைக்கப்படுகிறது. இது முந்தைய வி10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    அப்டேட் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய வடிவமைப்பு, நீண்ட பேட்டரி பேக்கப், பேசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     சவுண்ட் ஒன் வி11

    சவுண்ட் ஒன் வி11 வயர்லெஸ் ஹெட்போன்களில் 40 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தரமான ஆடியோ அனுபவம் மற்றும் டீப் பாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மடிக்கக்கூடிய வடிவமைப்பு, ஹெட்பேண்ட் மற்றும் இயர்கப்களில் மிக மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டுள்ளது. இதில் பேட்டரி தீர்ந்து போனால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொண்டு வயர்டு மோடிலும் பயன்படுத்த முடியும். பேட்டரியை பொருத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேர பேக்கப் வழங்கும் என சவுண்ட் ஒன் தெரிவித்துள்ளது.
    சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    சியோமி நிறுவனம் புதிய எம்ஐ  டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி சீரிசை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இவை 32 இன்ச் ஹெச்டி ரெடி, 43 இன்ச் ஃபுல் ஹெச்டி மாடல்களில் கிடைக்கிறது.

    இரு மாடல்களிலும் ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் விவிட் பிக்ச்சர் என்ஜின், மென்பொருள் மற்றும் ஹார்டுவர் அப்டேட்களை கொண்டுள்ளது. இவை டிவி பார்ப்பவர்களுக்கு தலைசிறந்த அனுபவத்தை வழங்குகின்றன.

    இவற்றில் பேட்ச் வால், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்த யுஐ வழங்கப்பட்டுள்ளது. இது 16-க்கும் அதிக மொழிகளில் இருந்து சுமார் 23-க்கும் அதிக சேவை வழங்கும் தளங்களில் இருந்து பொழுதுபோக்கு தரவுகளை பரிந்துரை செய்கிறது. இதற்கு ஏஐ மற்றும் டீப் லேர்னிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.

    சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் சிறப்பம்சங்கள்

    - 43 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
    - 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
    - 750MHz மாலி-450 MP3 ஜிபியு
    - 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - எம்ஐ குவிக் வேக்
    - வைபை, ப்ளூடூத் 4.2
    - 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட்
    - 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD

     எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன்

    சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் சிறப்பம்சங்கள்

    - 32 இன்ச் 1366x768 பிக்சல் HD எல்இடி டிஸ்ப்ளே
    - 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் -ஏ53 பிராசஸர்
    - மாலி-450 MP3 ஜிபியு
    - 1.5 ஜிபி ரேம்
    - 8 ஜிபி மெமரி
    - எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
    - எம்ஐ குவிக் வேக்
    - வைபை, ப்ளூடூத் 4.2
    - 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட்
    - 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD

    புதிய எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 32 இன்ச் மாடல் விலை ரூ. 13,499 என்றும் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் மாடல் விலை ரூ. 22,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் கெபாப் எனும் பெயரில் உருவாகி வருகிறது. இதில் 6.55 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் ஒன்பிளஸ் 8டி மாடலில் குவாட் கேமரா செட்டப், 48 எம்பி பிரைமரி லென்ஸ், 16 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஒன்பிளஸ் 8டி

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆக்சிஜன் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8டி சீரிஸ் மாடல் இம்மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மாடல்கள் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட சிறிதளவு மேம்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
    பேஸ்புக் மெசஞ்சரில் புது அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மெசஞ்சரில் அப்படி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தை பாதுகாப்பான ஒன்றாக உருவாக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பேஸ்புக் மெசஞ்சர் செயலிக்கு புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. 

    இந்த அப்டேட் ஒரு குறுந்தகவலை அதிகபட்சம் ஐந்து பேருக்கு மட்டுமே ஃபார்வேர்டு செய்ய அனுமதிக்கிறது. இவ்வாறு செய்யும் போது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்ட போலி விவரங்கள் மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை குறைக்க முடியும் என பேஸ்புக் மெசஞ்சரின் ஜே சலிவன் தெரிவித்து இருக்கிறார்.

     பேஸ்புக் மெசஞ்சர்

    புது நடவடிக்கை விரைவில் நடைபெற இருக்கும் அமெரிக்க மற்றும் நியூசிலந்து தேர்தல் மற்றும் தற்போதைய கொரோனாவைரஸ் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.

    மேலும் கொரோனாவைரஸ் பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்ள கொரோனாவைரஸ் கம்யூனிட்டி ஹப் பயன்படுத்தவும் பயனர்களுக்கு பேஸ்புக் கேட்டுக் கொண்டுள்ளது. இதில் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய விவரங்களை கொண்டுள்ளது.
    பப்ஜி மொபைல் கேமிற்கு மாற்றாக இந்திய கேம் தயார் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இது வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

    இதனிடையே சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை அடிமையாக்கி வைத்திருக்கும் பப்ஜி எனப்படும் செல்போன் விளையாட்டு செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

    இதையடுத்து, பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தது.  இதனை தொடர்ந்து கூகுளின் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

    இந்நிலையில், பப்ஜிக்கு பதிலாக அதற்கு இணையான புதிய கேம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தி திரையுலகின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் தலைமையில், முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் இணைந்து பப்ஜிக்கு பதிலாக புதிய கேம் ஒன்றை அறிமுகமாக இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    பாஜி

    பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் என்கோர் கேம்ஸ் நிறுவனம் விரைவில் ஒரு புதிய பாஜி (பியர்லெஸ் அண்டு யுனைட்டெட்  கார்ட்ஸ்) என்ற கேமை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் தொண்டு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படும் என கூறியுள்ளார். இதன்படி, தேச பாதுகாப்பு பணியில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்த நிதி பயன்படும்.

    புது கேம் பற்றி அதிகளவு தகவல்கள் இல்லாத நிலையில், பெரும்பாலும் இது பப்ஜி போன்றே இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. பப்ஜி மொபைலுக்கு மாற்றான புதிய பாஜி கேம் டீசர் படமும் இதையை உணர்த்துவதாக அமைகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை கேலக்ஸி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் நிறுவனம் தனது குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாட் கேமரா சென்சார்கள், AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. தற்சமயம் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

    எனினும், புதிய கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது கேலக்ஸி ஏ51 5ஜி மாடலை விட விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி ஏ42 5ஜி மாடல் விலை ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    அந்த வகையில் விலையை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஒன்பிளஸ் நார்டு மற்றும் ரியல்மி வி3 போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

     சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி

    சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர்
    - 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள்
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
    பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அம்சங்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட மை பிஎஸ்என்எல் செயலியை வெளியிட்டு உள்ளது.

    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ செயலியை புது அம்சங்களுடன் அப்டேட் செய்து இருக்கிறது. புதிய மை பிஎஸ்என்எல் செயலியில் மிக எளிமையான யூசர் இன்டர்பேஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    அப்டேட் ஆன புது செயலியில் ரிவார்ட்ஸ், 4ஜி ஹாட்ஸ்பாட், ஸ்பெஷல் ஆஃபர் மற்றும் ஃபேன்சி நம்பர் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பாரத் ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்வதற்கான வசதியும் புதிய செயலியில் வழங்கப்பட்டு உள்ளது. 

     பிஎஸ்என்எல்

    மேலும் ஒன் க்ளிக் பில் பே ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பில் கட்டணம் செலுத்துவது, தங்களின் சலுகையை மாற்றிக் கொள்வது போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.

    புதிய பலன்களை பெற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ், மை பிஎஸ்என்எல் டியூன்ஸ், பிஎஸ்என்எல் வைபை, பிஎஸ்என்எல் 4ஜி பிளஸ் ணற்றும் மொபிக்விக் செயலியை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.

    - இதற்கு முதலில் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும். 

    - பின் பெயர், மொபைல், மின்னஞ்சல், வாட்டார மற்றும் பயனர் குறியீடு உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு பின் நெக்ஸ்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    - இனி லாக்-இன் செய்து மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

    - அடுத்து ஃபேன்சி நம்பர், ஒன் க்ளிக், பே பில்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.
    சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.


    சியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவில் அறிமுகமானது முதல் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் சேல்ஸ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய அறிவிப்பை தொடர்ந்து ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் எந்நேரமும் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுமட்டுமின்றி விரைவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    ஓபன் சேல் விற்பனையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 16,999 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 298 மற்றும் ரூ. 398 சலுகைகளை தேர்வு செய்யும் போது இருமடங்கு டேட்டா பெற முடியும். இத்துடன் அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாதம் ரூ. 800 எனும் எளிய மாத தவணையில் கிடைக்கிறது.

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

    ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் 20:9 FHD+ LCD டாட் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜி.பி. / 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
    - 64 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.89
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 5 எம்.பி. மேக்ரோ லென்ஸ்
    - 2 எம்.பி. டெப்த் சென்சார்
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் மைக்ரோபோன்
    - ஸ்பிலாஷ் ப்ரூஃப் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோ வைபை, ப்ளூடூத் 5
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 5020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
    மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    மோட்டோரோலா நிறுவனம் இரண்டாம் தலைமுறை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரேசர் ஸ்மார்ட்போன் 5ஜி வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சீன சந்தையில் 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய ரேசர் ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. 5ஜி மட்டுமின்றி புது ரேசர் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் வடிவமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம்.

     2020 மோட்டோ ரேசர் ரென்டர்

    புது ரென்டர்களின் படி 2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் தோற்றத்தில் முந்தைய வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த மாட் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முந்தைய மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    2020 மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் உள்புறம் 20 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய மாடலில் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மோட்டோரோலா ரேசர் மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 2845 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்52 மோடெம் மூலம் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
    ×