search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ
    X
    போக்கோ

    குவாட் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் போக்கோ எம்2

    போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கான புது டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
     

    போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தகவல் ப்ளிப்கார்ட் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    போக்கோ எம்2 ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் திறக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய போக்கோ எம்2 மாடல் வாட்டர்டிராப் நாட்ச், பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்தது. முந்தைய போக்கோ எம்2 ப்ரோ மாடலில் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.

    போக்கோ எம்2

    புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட இருக்கிறது. போக்கோ எம்2 விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய போக்கோ எம்2 ப்ரோ சீரிஸ் விலை ரூ. 13999 முதல் துவங்குகிறது. இதனால் புதிய போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.
    Next Story
    ×