search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எப்41
    X
    கேலக்ஸி எப்41

    6000 எம்ஏஹெச் பேட்டரி, 64 எம்பி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
     

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது சாம்சங்கின் முதல் கேலக்ஸி எப் சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும். இது அக்டோபர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் இன்பினிட்டி யு டிசைன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இது கேலக்ஸி எம்31 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.  இதில் சாம்சங்கின் சிங்கிள் டேக் அம்சம் வழங்கப்படுகிறது.

     கேலக்ஸி எப்41

    இதுதவிர 6000 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் இருக்குமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    முந்தைய தகவல்களின் படி கேலக்ஸி எப்41 ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×