search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பேடிஎம்
    X
    பேடிஎம்

    பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம்

    பேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மினி ஆப் ஸ்டோர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது டிஜிட்டல் பேமன்ட்ஸ் செயலியினுள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    முன்னதாக பேடிஎம் நிறுவனம் தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடுவதற்கு இந்திய டெவலப்பர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய மினி ஆப் ஸ்டோர் துவங்கப்பட்டு இருக்கிறது.

     பேடிஎம் மினி ஆப் ஸ்டோர்

    செயலிகள் மற்றும் டெவலப்பர் டூல்களை வெளியிடுவதற்கு மாற்றாக பேடிஎம், ப்ரோகிரசிவ் வெப் ஆப் (PWA) வழங்குகிறது. இவை பிரவுசர்களில் இயங்கும் லைட் ஆப்கள் ஆகும். மேலும் இவற்றை இன்ஸ்டால் செய்யாமலேயே இயக்க முடியும். தற்சமயம் மினி ஆப் ஸ்டோரில் சில செயலிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.

    புதிய பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவை சேர்ந்த சிறு டெவலப்பர்கள் மற்றும் வியாபாரங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என பேடிஎம் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

    இந்த ஆப் ஸ்டோரில் குறைந்த செலவில், ஹெச்டிஎம்எல் மற்றும் ஜாவா ஸ்க்ரிப்ட் மூலம் செயலிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்ய முடியும். இதில் உள்ள செயலிகள் பேடிஎம் செயலியினுள் திறக்கும். இதில் செயலிகளை பட்டியலிட எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.
    Next Story
    ×