என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த மோசடி நோக்கம் கொண்ட பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோர் மிகவும் பாதுகாப்பான தளம் என அவ்வப்போது தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப் ஸ்டோரில் நடைபெற இருந்த சுமார் 150 கோடி டாலர்கள் மதிப்பிலான மோசடி பண பரிமாற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

     ஆப்பிள் ஆப் ஸ்டோர்

    இவ்வாறு செய்ததில் ஆப்பிள் வாடிக்கையாளர்களின் பணம், தகவல்கள் மற்றும் நேரம் காப்பாற்றப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான புது செயலிகள் சரியான தகவல்களை வழங்காததால் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

    மேலும் பத்து லட்சத்திற்கும் அதிக அப்டேட்கள் நிராகரிக்கவோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. செயலிகளை ஆய்வு செய்யும் குழு சுமார் 48 ஆயிரம் செயலிகளில் தவறான அம்சங்களை கொண்டிருந்ததால், நீக்கப்பட்டுள்ளன. இத்துடன் பயனரின் பிரைவசி விதிகளை மீறியதாக 2.15 லட்சம் செயலிகள் நீக்கப்பட்டன. 
    சோனி நிறுவனம் தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் பிஎஸ்5 கன்சோல்கள் மீண்டும் விற்பனைக்கு வருவது சற்றே சவாலான விஷயம் தான் என சோனி நிறுவன அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பிஎஸ்5 முன்பதிவு மீண்டும் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சோனி தனது பிஎஸ்5 கன்சோல்களுக்கான முன்பதிவை மே 17 ஆம் தேதி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முறையும் மிக குறைந்த யூனிட்களே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் இந்த விற்பனை ஊரடங்கு அமலில் இல்லாத பகுதிகளில் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

     சோனி பிஎஸ்5

    இந்தியாவில் பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலை சோனி அறிமுகம் செய்யாமல் இருந்தது. இந்த நிலையில், பிஎஸ்5 டிஜிட்டல் எடிஷன் மாடலும் மே 17 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை சோனியின் சொந்த வலைதளத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது.
    நத்திங் நிறுவனத்தின் முதல் சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    கார்ல் பெய் துவங்கி இருக்கும் நத்திங் நிறுவனம் தனது முதல் சாதனத்தை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயர் 1 எனும் பெயரில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை நத்திங் தனது முதல் சாதனமாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் வடிவமைப்பு விவரங்கள் இதுவரை ரகசியமான ஒன்றாகவே இருக்கிறது. 

     நத்திங் இயர் 1

    நீண்ட பயணத்தின் முதல் படியாக இயர் 1 அறிமுகமாகிறது என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார். தலைசிறந்த வடிவமைப்பு, நம்பகத்தன்மையை உருவாக்கும் பல்வேறு சாதனங்கள் மற்றும் சேவைகளின் துவக்கம் தான் இது என அவர் மேலும் தெரிவித்தார்.

    இயர்போன்கள் சந்தையில் கிடைக்கும் மாபெரும் வளர்ச்சி கொண்டு நிறுவனம் பல்வேறு புது சாதனங்கள் பிரிவில் களமிறங்க முடியும் என கார்ல் பெய் தெரிவித்து இருக்கிறார்.
    அசுஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    அசுஸ் நிறுவனம் தனது சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முந்தைய தகவல்களின் படி சர்வதேச அறிமுக நிகழ்வின் போதே புது ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அசுஸ் திட்டமிட்டு இருந்தது.

     அசுஸ் சென்போன் 8

    எனினும், சென்போன் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டை மாற்றுவதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வினியோகம் செய்ய அரசாங்கங்கள் அனுமதி அளித்துள்ளன. முன்னதாக ரியல்மி நிறுவனமும் மே 4 ஆம் தேதி புது சாதனங்களை அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், வெளியீட்டை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
    முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் முக்கிய முடிவை எடுத்துள்ளது.


    இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இதனை அமேசான் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

    நாட்டில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

     அமேசான் பிரைம் டே சேல்

    தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.

    வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.
    மத்திய அரசின் கொரோனாவைரஸ் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்போருக்கு பிரத்யேக செக்யூரிட்டி கோட் அனுப்பப்படுகிறது.

    மத்திய அரசு செயல்படுத்தி வரும் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி முறையை பாதுகாப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள இந்த முறை பின்பற்றப்படுகிறது.

    இந்த நிலையில், CoWIN தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு நான்கு இலக்க பாதுகாப்பு குறியீடு அனுப்பப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் தீயவர்கள் சதி செய்து பணம் பறிக்கும் முயற்சியை தடுக்க முடியும். தடுப்பூசி மையங்களில் இந்த நான்கு இலக்க குறியீட்டை தெரிவித்ததும், தடுப்பூசி சான்று உருவாக்கப்படும். 

     கோவின் வலைதள ஸ்கிரீன்ஷாட்

    குறியீட்டு முறையை கொண்டு தடுப்பூசி சான்று உருவாக்குவதில் ஏற்படும் தவறுகளை குறைக்க முடியும். தனிப்பட்ட முறையில் தடுப்பூசி திட்டம் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்வோரிடம் இருந்து மக்களை காப்பாற்றவும் புதிய குறியீட்டு முறை பயன்தரும்.

    பொது மக்கள் CoWIN தளத்தில் முன்பதிவு செய்யும் போது, அவர்களுக்கான தடுப்பூசி மையம் உறுதி செய்யப்பட்டதும், நான்கு இலக்க குறியீடு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் தினத்தன்று இந்த குறியீட்டை தடுப்பூசி மையத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.

    பின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதும், CoWIN தளம் சென்று தடுப்பூசி சான்றிதழை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
    வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் புது பிரைவசி பாலிசியை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ளது.


    புது பிரைவசி பாலிசி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை வாட்ஸ்அப் எதிர்கொண்டது. பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு பயனர்கள் மே 15 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வாட்ஸ்அப் காலக்கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், பிரைவசி பாலிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் அழிக்கப்படாது என வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது. 

    மே 15 ஆம் தேதிக்கு பின்பும் பிரைவசி பாலிசி அப்டேட் செய்யாதவர்கள் அக்கவுண்ட்  அழிக்கப்படாது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனினும், புது அப்டேட் செய்யக் கோரி பயனர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

     வாட்ஸ்அப்

    பெரும்பாலான பயனர்கள் புது மாற்றத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். முன்பு புது மாற்றத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் அக்கவுண்ட்களை அழிப்பதாக கூறிய நிலையில், தற்போது வாட்ஸ்அப் தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என இதுவரை அறிவிக்கவில்லை.

    புது அப்டேட் செய்வோரின் தகவல்கள் பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஒருபோதும் ஏற்படுத்தாது என வாட்ஸ்அப் அதன் பயனர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இதுதவிர புது அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை பிப்ரவரியில் இருந்து மே 15 ஆக அதிகப்படுத்தியது.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முதல் விற்பனை சமீபத்தில் நடைபெற்றது.


    சியோமி எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புடன் பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வித்தியாச வடிவமைப்பு, தலைசிறந்த அம்சங்கள், அதிக விலை கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நடைபெற்றது.

     சியோமி எம்ஐ11 அல்ட்ரா

    முதல் விற்பனையில் எம்ஐ 11 அல்ட்ரா விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிக விலை கொண்டிருந்த போதும், விற்று தீர்ந்ததற்கான காரணம் அறியப்படவில்லை. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 ப்ரோ, கேலக்ஸி எஸ்21 சீரிஸ், ஐபோன் 12 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் விற்பனைக்கு வருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல்களில் கேலக்ஸி ப்ளிப் மாடல்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    அதன்படி சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 துவக்க விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 73 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும். தற்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    விலை மட்டுமின்றி கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுடன் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அவ்வப்போது புது அம்சங்களை வழங்கி வருகிறது.


    முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது முதல், ஒன்பிளஸ் நிறுவனம் மெல்ல புது அம்சங்களை அதில் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் புது அப்டேட் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

     ஒன்பிளஸ் வாட்ச்

    புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் :

    - ஆட் ஆல்வேஸ் - ஆன் டிஸ்ப்ளே டையல்
    - ரிமோட் கண்ட்ரோல் கேமரா வசதி
    - ஆட் மாரத்தான வொர்க்-அவுட்
    - சிஸ்டம் யுஐ மேம்படுத்தல்கள்
    - பிழை திருத்தங்கள்

    ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் என்றாலும், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே பயன்படுத்தும் போது பேட்டரி விரைவில் தீர்ந்து போகும். இந்த அம்சம் பயன்படுத்தினால் பேட்டரி பேக்கப் அளவு தற்போது இருப்பதை விட பாதியாக குறைந்துவிடும்.

    புது அப்டேட் இன்ஸ்டால் செய்ய ஒன்பிளஸ் ஹெல்த் ஆப் பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்யும் முன் வாட்ச் குறைந்த பட்சம் 40 சதவீத பேட்டரி கொண்டிருக்க வேண்டும்.

    சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் வெற்றிகர மாடலாக அமைந்துள்ளது. இதுதவிர ரெட்மி நோட் 10 சீரிசில் மேலும் சில புது மாடல்கள் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருகிறது. 

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாக இருக்கிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரெட்மி டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

    டீசரின்படி புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாடலில் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 750G 5ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாகும் பட்சத்தில் புது மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி மாடலாக இருக்கும். 
    கூகுள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    கூகுள் I/O 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய பிக்சல் பட்ஸ் ஏ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது இயர்பட்ஸ் பற்றிய விவரங்கள் கூகுள் வலைதளம் மற்றும் ட்விட்டரில் தவறுதலாக இடம்பெற்று பின், அவசர அவசரமாக நீக்கப்பட்டு இருக்கிறது.

     கூகுள் பிக்சல் பட்ஸ்

    புது இயர்பட்ஸ் கூகுள் நிறுவனத்தின் பாஸ்ட் ப்ளூடூத் பேரிங் அனுபவத்தை வழங்கும் என தெரியவந்துள்ளது. இந்த அம்சம் 2018 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதே அம்சம் புதிய பிட்பிட் லூக்ஸ் சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்கும் பின் வெளியான மாடல்களுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    தற்போதைய தகவல்களில் இந்த இயர்பட்ஸ் லைட் கிரே நிறம் மற்றும் வைட் நிற கேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர புது இயர்பட்ஸ் பாரஸ்ட் கிரீன் நிறத்திலும் கிடைக்கும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
    ×