என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ட்விட்டர் தளத்தில் சமீப காலங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புளூ டிக் அம்சம் மீண்டும் வழங்கப்படுகிறது.


    சமூக வலைதள சேவைகளில் வெரிபைடு அக்கவுண்ட் பெற ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி வழிமுறைகளை கொண்டிருக்கின்றன. முன்னதாக ட்விட்டர் தளத்தில் வெரிபிகேஷன் சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும், சில பிரச்சினைகள் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

     ட்விட்டர்

    தற்போது இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை வெரிபைடு அக்கவுண்ட் பெறுவதற்கான வழிமுறைகளை ட்விட்டர் மாற்றி அமைத்து இருக்கிறது. அதன்படி ட்விட்டரில் புளூ டிக் பெற கீழே கொடுக்கப்பட்ட அக்கவுண்ட்களில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

    - அரசாங்கம்
    - நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் அமைப்புகள்
    - செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள்
    - பொழுதுபோக்கு
    - ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்
    - செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர ஆளுமைகள்

    இதுபோன்ற அக்கவுண்ட்கள் மட்டுமின்றி ப்ரோபைல் பெயர், புகைப்படம், உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பர் வைத்திருக்க வேண்டும். மேலும் கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். இத்துடன் ட்விட்டர் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.


    வாட்ஸ்அப் செயலியின் புது பிரைவசி பாலிசி சர்ச்சை தொடர்கதையாக இருக்கிறது. புதிய பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    புதிய பிரைவசி பாலிசி மற்றும் அதனை அறிமுகப்படுத்தும் வழிமுறைகள் தகவல் தனியுரிமை, டேட்டா பாதுகாப்பு, பயனர் விருப்பம் உள்ளிட்ட மதிப்புகளை குறைக்கிறது. மேலும் இது இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் விருப்பங்களை பாதிக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     கோப்புப்படம்

    மத்திய அமைச்சகத்தின் கடிதத்திற்கு பதில் அளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. திருப்திகரமான பதில் கிடைக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    வாட்ஸ்அப் அறிவித்து இருக்கும் புது பிரைவசி பாலிசி மாற்றங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் பல்வேறு இந்திய சட்ட விதிகளை மீறும் வகையில் இருக்கிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரவுசர் சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான ஆதரவை நிறுத்த துவங்கியது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை ஆரம்ப காலத்தில் அதிக பிரபலமான பிரவுசராக இருந்தது. 

    இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

    விண்டோஸ் 10 இயங்குதளத்தின் சில வெர்ஷன்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் செயலிக்கான ஆதரவு ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் அதிக திறன் கொண்டிருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்ததாக தெரிகிறது.

    2003 ஆம் ஆண்டு இணைய சேவையில் 95 சதவீதம் பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினர். எனினும், 2004 மற்றும் 2008 ஆண் ஆண்டுகளில் துவங்கப்பட்ட பயர்பாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் பிரவுசர்கள் அறிமுகமானதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான பயனர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியது.
    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் மாடல் பேண்டம் புளூ பேக் பேனல் மற்றும் கோல்டு அக்சென்ட்களை கொண்டிருக்கிறது.

    கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன்

    இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒலிம்பிக் லோகோ இடம்பெற்று இருக்கிறது. தோற்றம் தவிர கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    எனினும், இதன் விற்பனை ஜூன் மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
    ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நிறுவன சிஇஒ விளக்கம் அளிக்க இருக்கிறார்.

    உலகளவில் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாக போர்ட்நைட் இருக்கிறது. இதனை எபிக் கேம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியது. ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயலிகளை பட்டியலிடுவதில் ஆப்பிள் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக எபிக் கேம்ஸ் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    வழக்கு விசாரணையில் பங்கேற்று ஆப்பிள் தரப்பில் விளக்கம் அளிக்க அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான பில் ஸ்கில்லர் மற்றும் க்ரியக் பெடரிகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதோடு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரத்திலோ வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கிறார்.

     டிம் குக்

    இந்த நிலையில், வழக்கு விசாரணையில் பதில் அளிக்க டிம் குக் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென முன்னாள் வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை டிம் குக் சட்ட வல்லுநர் குழு நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. பயிற்சியின் போது பல கட்டங்களில் நடைபெறும் என தெரிகிறது.

    விசாரணையின் போது ஆப் ஸ்டோர் நடவடிக்கைகளை டிம் குக் ஆதரித்து பதில் அளிப்பார் என கூறப்படுகிறது. இந்த விசாரணை மொத்தத்தில் 100 நிமிடங்களுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.
    மும்பையை சேர்ந்த சிறுவன் உருவாக்கி இருக்கும் நிலவின் முப்பரிமாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்கி இருக்கிறான். இதற்கு அந்த சிறுவன் சுமார் 50 ஆயிரம் படங்களை ஒருங்கிணைத்து இருக்கிறான்.

    பூனேவை சேர்ந்த பிரதமேஷ் ஜாஜு எனும் சிறுவன் தன்னை வளரும் வானியலாளர் என கூறுகிறார். நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்க அதிக புகைப்படங்களை இயக்கும் போது தனது லேப்டாப் கிட்டத்தட்ட பாழாகிவிட்டதாக பிரதமேஷ் தெரிவித்தார்.

    ஒருங்கிணைக்கப்பட்ட படங்களின் ஒட்டுமொத்த அளவு 186 ஜிபி ஆகும். ஒருங்கிணைக்கப்பட்ட படம் 50 எம்பி அளவில் இருந்தது. பின் மொபைல் போனில் பார்க்க ஏதுவான புகைப்படத்தின் அளவை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதிக ரெசல்யூஷன் கொண்ட படத்தில் நிலவின் பரப்பளவு மிக சிறப்பாக காட்சியளிக்கிறது. 

    இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை பிரதமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இதே புகைப்படம் சிறுவனின் ரெடிட் அக்கவுண்டிலும் பகிரப்பட்டு இருக்கிறது. சிறுவனின் முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் மேம்படுத்தப்பட்ட புது பிரைவசி பாலிசி விதிகளை ஏற்காதவர்களுக்கு புது கட்டுப்பாடு அமலாகிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பிரைவசி பாலிசியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வதற்கு பிறப்பித்த மே 15 காலக்கெடுவை நீக்கிவிட்டது. இதனால், புது அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்கள் மே 15 ஆம் தேதிக்கு பின் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம். 

    எனினும், புது அப்டேட் இன்ஸ்டால் செய்யக் கோரி வாட்ஸ்அப் சார்பில் அடிக்கடி நோட்டிபிகேஷன் அனுப்பப்படுவதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். புது விதிகள் வாட்ஸ்அப் அதன் பயனர் விவரங்களை பேஸ்புக் இயக்கும் வசதியை வழங்கும். 

     வாட்ஸ்அப்

    புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்யாதவர்களுக்கு சில அம்சங்களை பயன்படுத்தும் வசதி படிப்படியாக நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் சாட் லிஸ்ட்-ஐ இயக்க முடியாது. மேலும் வாட்ஸ்அப்பில் வரும் அழைப்புகளை ஏற்க முடியும்.

    எனினும், நோட்டிபிகேஷன் அலெர்ட்களை க்ளிக் செய்த பின்பே குறுந்தகவல்களை படிக்க முடியும். சில வாரங்களுக்கு பின் பயனர்களுக்கு வரும் குறுந்தகவல்கள் நிறுத்தப்படும்.
    அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். பின் அவருக்கு வழங்கப்பட்ட பார்சலை திறந்து பார்த்ததும், அதில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ந்து போனார். தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் ட்விட்டரில் பதிவிட்டார். 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ரூ. 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு மே 10 ஆம் தேதி ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அமேசானுக்கு ட்விட்டர் மூலம் அவர் தெரியப்படுத்தினார். தனக்கு வந்த பார்சலில் ஸ்டிக்கர் சரியாக இருப்பதாகவும், அதில் உள்ள கட்டண ரசீது வேறொரு வாடிக்கையாளருக்கானது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

    இந்த சம்பவம் ட்விட்டரில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து, நெட்டிசன்கள் இந்த சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர். பலர் இது குறித்து நக்கலடிக்கும் தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ அப்டேட் வழங்கப்படுகிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது பனாமா பகுதியில் மட்டும் வழங்கப்படுகிறது. விரைவில் மற்ற பகுதிகளிலும் இந்த அப்டேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் அல்லது மே மாத அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த ஸ்மார்ட்போனிற்கு முதல் முறையாக மிகமுக்கிய அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த அப்டேட் A115MUBU2BUE1 வெர்ஷன் கொண்டிருக்கிறது. புது அப்டேட் பெற ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாப்ட்வேர் அப்டேட் -- டவுன்லோட் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். 
    விவோ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை நீட்டித்து வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

    விவோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி சேவையை 30 நாட்கள் நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த சலுகை விவோ விற்பனை செய்த அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும். எனினும், இது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

     விவோ ஸ்மார்ட்போன்

    அந்த வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளில் வசிக்கும் விவோ வாடிக்கையாளர்களின் சாதனங்களுக்கு  வாரண்டி நிறைவுபெற இருக்கும் பட்சத்தில் அதனை 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். ஊரடங்கு காரணமாக சர்வீஸ் மையங்களுக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். 

    வாரண்டி நீட்டிப்பு மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் சாதனங்களை வீட்டிற்கு வந்து சரி செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. 30 நாட்கள் கால அவகாசம் விவோ மீண்டும் தனது வியாபாரத்தை துவங்கிய நாள் முதல் கணக்கிடப்படும் என விவோ அறிவித்து இருக்கிறது.
    போக்கோ நிறுவனத்தின் புதிய எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மே 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை போக்கோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது.

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 19 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு அறிமுகமாகிறது. வெளியீட்டு தேதி, நேரம் தவிர புது ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

     போக்கோ ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிராசஸர் ஸ்னாப்டிராகன் 662-ஐ விட வேகமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 10 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ எம்3 ப்ரோ மாடலில் பிரத்யேக வடிவமைப்பு, அதிக ரேம், அதிவேக ஸ்டோரேஜ் மாட்யூல் மற்றும் மூன்று நிறங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் விலை போக்கோ எக்ஸ்3 என்எப்சி மாடலை போன்றே நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
    இந்தியாவுக்கு கொரோனா நிவாரண நிதியை எத்திரியம் இணை நிறுவனர் க்ரிப்டோகரென்சியாக வழங்கி இருக்கிறார்.


    எத்திரியம் க்ரிப்டோகரென்சி இணை நிறுவனர் விடலிக் புடெரின் இந்தியாவுக்கு ரூ. 7360 கோடி மதிப்பிலான ஷிபா இனு க்ரிப்டோகரென்சியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். ஷிபா இனு கரென்சியை உருவாக்கியவர்கள் புடெரினுக்கு 50 சதவீத மீம் டோக்கன்களை பரிசாக வழங்கினர். 

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    உலகின் இளைய க்ரிப்டோகரென்சி கோடீஸ்வரரான புடெரின் அவற்றை தொண்டு காரியங்களுக்கு செலவிட முடிவு செய்து நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறார். புடெரின் சுமார் 120 கோடி டாலர்கள் மதிப்பிலான ஷிபு டோக்கன்களை இந்தியா கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி இருக்கிறார். 

    இத்தகைய தொகை க்ரிப்டோகரென்சி மூலம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் இவ்வளவு க்ரிப்டோகரென்சியை இந்திய ரொக்கமாக மாற்றும் போது அதன் மதிப்பு சற்றே குறையும்.
    ×