search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிக்கிறதா? பதற்றத்தை ஏற்படுத்தும் வைரல் தகவல்

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் அனுப்பும் தகவல்களை மத்திய அரசு கவனிப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் நிலை டிக் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றதும் இரண்டு டிக்குகள் காணப்படும். அதனை அவர்கள் படித்துவிட்டால் இரு டிக்குகளும் புளூ நிறத்திற்கு மாறிவிடும்.

    இந்த நிலையில், வாட்ஸ்அப் டிக் முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் வலம்வருகிறது. அதன்படி, அனுப்பிய குறுந்தகவல்களுக்கு இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு ரெட் டிக் வந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. மேலும் மூன்று ரெட் டிக் வந்தால் அரசு சட்டப்படி வழக்கு தொடரும் என கூறப்படுகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்
     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இந்தியாவில் சமூக வலைதளம் மற்றும் ஓடிடி தளங்களில் பதிவிடப்படும் தகவல்களில் அதிகாரிகள் சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டும் பதிவுகளை நீக்குவது, சர்ச்சைக்குள்ளாகும் தகவலை முதலில் பதிவிட்டது யார் என்ற விவரங்களை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலாகி இருக்கின்றன.

    இதை எதிர்த்து வாட்ஸ்அப் மற்றும் மத்திய அரசு இடையே சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப் உரையாடல்களை அரசு கவனிப்பதாக கூறி, புது டிக் முறை அமலுக்கு வந்துள்ளது என வைரல் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை. ஏற்கனவே பலமுறை இதேபோன்ற தகவல் வைரலாகி இருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×