என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி போன் விலை மற்றும் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே. புதிய 5ஜி மாடல் விவரங்கள் ஜூன் 24 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜியோ 5ஜி மாடல் 2021 தீபாவளி வாக்கில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். எனினும், இதன் வெளியீடு குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.

தற்போதைய தகவல்களின் படி ஜியோ 5ஜி மாடல் தீபாவளி காலக்கட்டத்தில் அதாவது அக்டோபர் - நவம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. புது மாடல் வெளியீடு பற்றி இரு நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
புது 5ஜி மாடல் விலை 50 டாலர்களுக்கும் கீழ் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 3500 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபேட் மாடல் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐபேட் மினி சீரிசை மேம்படுத்தி, புதிதாக என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலங்களில் வெளியாகும் ஐபோன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் புதிய ஐபேட் மாடல்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆப்பிள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ மாடலில் வயர்லெஸ் சார்ஜிங் மட்டுமின்றி ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் தளத்தை பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை கோவின் தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் கோவின் தளம் இந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதார துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கோவின் தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ரெட்மி நோட் 10எஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் அறிமுகமான இரண்டு மாதங்களில் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ விலையை உயர்த்தி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 10 விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 10 மாடல் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது.
அந்த வகையில் தற்போது, ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு 6 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இதன் புதிய விலை ரூ. 17,499 என மாறி இருக்கிறது.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் துவங்கப்பட இருக்கும் புது சேவை குறித்த விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் புளூ எனும் பெயரில் புது சந்தா முறையை உருவாக்கி வருவதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தது. இது குறித்த விவரங்கள் ஐஒஎஸ் தளத்துக்கான ஆப் ஸ்டோரிலும் இடம்பெற்றது. தற்போது ட்விட்டர் புளூ விவரங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருக்கிறது.
சமீபத்திய ட்விட்டர் பீட்டா பதிப்புக்கான கூகுள் பிளே ஸ்டோர் பட்டியலில் ஆப் பர்சேஸ் இடம்பெற்று இருக்கிறது. இதில் சேவைக்கான கட்டணம் 2.99 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதே விலை ட்விட்டர் புளூ சேவைக்கு நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

ட்விட்டர் புளூ சேவையில் பயனர் பதிவிட்ட ட்விட்களை திரும்ப பெறும் வசதி, செயலியை பல நிறங்கள் அடங்கிய தீம்கள் மூலம் கஸ்டமைஸ் செய்வது என ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்று இருப்பதால், விரைவில் இந்த சேவை துவங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ட்விட்டர் புளூ சேவை பல்வேறு சந்தா முறைகளில் கிடைக்கும். இவற்றில் அதிக விலை கொண்ட சந்தாவில் அதிக அம்சங்கள் வழங்கப்படும். ட்விட்டர் புளூ சேவைக்கான ஆரம்ப விலை மாதம் 2.99 டார்கள், இந்திய மதிப்பில் ரூ. 218 வரை நிர்ணயிக்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனர்கள் புது அப்டேட் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஐஒஎஸ் 14.6 அப்டேட் செய்ததில் இருந்து ஐபோன் பேட்டரி வெகு விரைவில் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புது அப்டேட் ஆப்பிள் கார்டு பேமிலி, ஆப்பிள் பாட்காஸ்ட் சந்தா, ஏர்டேக் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கியது.

புது அம்சங்கள் தவிர சில பிழை திருத்தங்களையும் இந்த அப்டேட் வழங்கியது. எனினும், சமீபத்திய அப்டேட் ஐபோனின் பேட்டரியை விரைவில் தீர்ந்து போக செய்கிறது. பேட்டரி பிரச்சினையை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் சப்போர்ட் போரம் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ஐபோன் XS பயனர் ஒருவர் தனது மொபைலில் உறங்கும் முன் முழு சார்ஜ் செய்த போதும், காலையில் பேட்டரி அளவு 30 சதவீதம் வரை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனினை பயன்படுத்தாத நிலையிலும் 70 சதவீத சார்ஜ் காலியானதாக அவர் தெரிவித்தார்.
நாங்க அந்த சேவையை வழங்குவதில்லை, இதனால் அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் எங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது. இணையத்தில் உள்ள தரவை நீக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் இவ்வாறு பதில் அளித்து இருக்கிறது.

பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், புகைப்படங்கள் இணையத்தில் இருந்து நீக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து நீதிபதி ஜோதி சிங் மத்திய அரசு, டெல்லி அரசு, இணைய சேவை வழங்குநர் ஆணையம், பேஸ்புக் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விவகாரத்தில் கூகுள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கு பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் சமூக வலைதள நிறுவனம் இல்லை என தெரிவித்ததால், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. கூகுள் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பாலமாக விளங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 98 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 98 பிரீபெயிட் சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி பாதியாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அன்றாடம் வழங்கப்படும் அதிவேக டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.
ஜியோ ரூ. 101 சலுகையில் அதிகபட்சம் 12 ஜிபி டேட்டா, 1362 ஐயுசி நிமிடங்களுக்கான டாக்டைம் வழங்கப்படுகிறது. ஜியோவின் புது அறிவிப்பை தொடர்ந்து, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரூ. 98 விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவையை வழங்குகின்றன.
சியோமி நிறுவனம் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
Charge up to 100% in just 8 minutes using wired charging and 15 minutes wirelessly! #XiaomiHyperCharge
— Xiaomi (@Xiaomi) May 31, 2021
Too good to be true? Check out the timer yourself! #InnovationForEveryonepic.twitter.com/muBTPkRchl
இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது.
200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்கும் வகையில் இந்தியாவுக்கான அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புதிய விதிமுறைகளை ஏற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. விதிகளை ஏற்கும் விவகாரம் குறித்து வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா பள்ளி அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

மனுதாரின் மனுவில், `ட்விட்டரில் நான் எதிர்கொண்ட பதிவு குறித்து குறைதீர்க்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவரின் தொடர்பு விவரங்களை கண்டறிய இயலவில்லை. ட்விட்டர் நிறுவனம் அமெரிக்கரை அதிகாரியாக நியமித்து இருக்கிறது. ஆனால் இது சமீபத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை முறையாக ஏற்கும் வகையில் இல்லை,' என குறிப்பிட்டு இருக்கிறார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பதில் அளித்த ட்விட்டர், அரசு விதித்த புது கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை ஏற்கும் வகையில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டர் தளத்தில் பேஸ்புக்கில் உள்ளது போன்ற எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் தளத்தில் எமோஜி ரியாக்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ளது போன்று விரைவில் ட்வீட்களுக்கும் ரியாக்ஷன் கொடுக்கலாம். தற்போது ட்வீட்களுக்கு லைக் மூலமாகவே விருப்பம் தெரிவிக்கும் முறை அமலில் உள்ளது.
விரைவில் லைக்ஸ், சீர்ஸ், ஹூம், சேட் மற்றும் ஹாஹாஹா போன்ற ரியாக்ஷன்களை வழங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஐகான்கள் எமோஜிக்கள் போன்றே காட்சியளிக்கிறது. சில ரியாக்ஷன்களுக்கு ஐகான்களை உறுதிப்படுத்தும் பணிகளில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Twitter is working on Tweet Reactions view:
— Jane Manchun Wong (@wongmjane) May 28, 2021
“Likes”, “Cheer”, “Hmm”, “Sad”, “Haha”
The icons for the Cheer and Sad reactions are WIP and shown as the generic heart one at the moment https://t.co/ZCBhH8z7JRpic.twitter.com/dGqq1CzIis
புது ரியாக்ஷன்கள் பேஸ்புக்கில் எமோஜிக்கள் உள்ளது போன்றே காட்சியளிக்கிறது. யார் யார் எந்த எமோஜி மூலம் ரியாக்ஷன் கொடுத்துள்ளனர் என்ற விவரங்களை ட்விட்டர் வழங்கும் என தெரிகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் வாடிக்கையாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிஎஸ் 5 கன்சோலை வாங்கிய பல்வேறு வாடிக்கையாளர்கள், ப்ளிப்கார்ட் தளத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர். கேமிங் கன்சோல்களை வாங்க ஆர்டர் செய்தவர்களை தொடர்பு கொண்டு ஆர்டரை கேன்சல் செய்ய ப்ளிப்கார்ட் வலியுறுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ப்ளிப்கார்ட் சார்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களுக்கு கன்சோல் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டது என ப்ளிப்கார்ட் தெரிவித்து உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆர்டர்களை விரைவில் விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதாக ப்ளிப்கார்ட் தெரிவித்து இருக்கிறது. மே 17 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற பிஎஸ்5 விற்பனையில் இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது.
`ப்ளிப்கார்ட் சார்பில் அழைப்புகள் வந்தது. அழைப்பை மேற்கொண்டவர், பிஎஸ்5 கன்சோலுக்கான ஆர்டரை கேன்சல் செய்தால் ரூ. 500 மதிப்புள்ள கூப்பன் வழங்குவதாக தெரிவித்தார்'. என பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் குற்றஞ்சாட்டினர்.
விநியோகம் செய்ய தாமதம் ஆகும், இதனால் ஆர்டரை கேன்சல் செய்யக் கோரி ப்ளிப்கார்ட் அனுப்பிய மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்களும் வெளியாகி இருக்கின்றன.






