என் மலர்
தொழில்நுட்பம்

கோவின்
கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி அறிமுகம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் கோவின் தளத்தை பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்தியாவில் கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுவரை கோவின் தளம் ஆங்கில மொழியில் மட்டுமே இயக்க முடியும். தற்போது பிராந்திய மொழிகளில் இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் கோவின் தளம் இந்தி, அசாமீஸ், கன்னடா, பெங்காலி, ஒடியா, மலையாளம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் இயக்க முடியும். கோவின் தளத்தில் பிராந்திய மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு இருப்பதை மத்திய சுகாதார துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள கோவின் தளம் மட்டுமின்றி உமாங் அல்லது ஆரோக்ய சேது போன்ற செயலிகளிலும் முன்பதிவு செய்ய முடியும்.
Next Story






