என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 விவரங்கள் பிஐஎஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் SM-A225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் வசதி, 4ஜி கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
முன்னதாக இதே மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் HTML5 டெஸ்ட் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சமீபத்தில் சாம்சங் தனது கேலக்ஸி ஏ52, கேலக்ஸி ஏ52 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்களை அறிமுகம் செய்தது.

புதிய கேக்ஸி ஏ சீரிஸ் மாடல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஆசம் வைலட், ஆசம் புளூ, ஆசம் பிளாக் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. விரைவில் கேலக்ஸி ஏ52 மற்றும் ஏ72 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாகும் என கறப்படுகிறது.
இந்த மாடல்களில் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி ஏ52 மாடலில் 4500 எம்ஏஹெச் பேட்டரியும், கேலக்ஸி ஏ72 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் சீரிசில் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் இன்-செல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ் ஒஎஸ் 7.0 வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா, பின்புறம் கிளாஸ் பினிஷ் மற்றும் டெக்ஸ்ச்சர் டிசைன் கொண்டுள்ளது. மேலும் இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே அம்சங்கள்
- 6.82 இன்ச் 1640x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20.5:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG பவர்விஆர் GE8320 GPU
- 4 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- எக்ஸ் ஒஎஸ் 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் எல்இடி பிளாஷ்
- டெப்த் சென்சார்
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, எல்இடி பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஏகன் புளூ, மொரான்டி கிரீன், அப்சிடியன் பிளாக் மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அறிமுக விலை ரூ. 8499 ஆகும்.
ஒப்போ நிறுவனத்தின் ஏ54 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஒப்போ நிறுவனம் தனது ஏ54 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதல் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் ஏ54 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் பிளாக், ஸ்டேரி புளூ மற்றும் மூன்லைட் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,490 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,490 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி கியூ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 22 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மி கியூ3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகமாகும் என தெரிகிறது.

அம்சங்களை பொருத்தவரை ரியல்மி கியூ3 ப்ரோ மாடல் திரையின் ஓரத்தில் பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்படுகிறது. பின்புற பேனல் மேட் பினிஷ் மற்றும் ‘Dare to Leap’ பிராண்டிங் வழங்கப்படுகிறது. செவ்வக வடிவம் கொண்ட கேமரா மாட்யூலில் மூன்று சென்சார்கள் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்படுகிறது.
இத்துடன் 6.43 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் சிம் ஸ்லாட், மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர், கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 249 மற்றும் ரூ. 298 விலையில் புதிய பிரீபெயிட் சலுகைகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு சலுகைகளிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், குறுந்தகவல் பலன்கள் வழங்கப்படுகிறது.

புதிய பிஎஸ்என்எல் ரூ. 249 சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு அனைத்து பலன்களும் இரண்டு மாதங்களுக்கு கிடைக்கும். இது முதல் முறை வாடிக்கையாளர்களுக்கான சலுகை ஆகும்.
ரூ. 298 பிஎஸ்என்எல் சலுகையில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மறஅறும் இரோஸ் நௌ சந்தா 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். இந்த சலுகையை அனைவரும் ஆன்லைன், ஆப்லைன் தளங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் புது மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவிலும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தொடர்ந்து புதிய மடிக்கக்கூடிய மாடல்களை சந்தையில் அறிமுகம் செய்வதை சாம்சங் வாடிக்கையாக கொண்டுள்ளது. சந்தையில் மடிக்கக்கூடிய சாதனங்கள் பிரிவில் புது டிரெண்ட் ஆக மாற்றும் முயற்சியில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது.
அவ்வாறு சாம்சங் உருவாக்கி வரும் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது. புது மாடலுக்கான காப்புரிமை பெற சாம்சங் சமர்பித்த ஆவணங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. காப்புரிமை ஆவணங்களின் படி சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் தோற்றத்தில் புது மாடலை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது.

இந்த மாடல் உள்புறம் மற்றும் வெளிப்புறம் மடிக்கும் வகையிலான டிசைன் கொண்டுள்ளது. இதனால் பெரிய கவர் டிஸ்ப்ளே வழங்குவதற்கான அவசியம் ஏற்படாது. கிளாம்ஷெல் டிசைன் கொண்டிருக்கும் புது மாடல் இரு திசைகளில் மடிக்க முடியும். மேலும் இது டூயல் பன்ச் ஹோல் கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், முழு டிஸ்ப்ளேவை பிளாஷ் போன்று பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும்.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான பிளாஷ் விற்பனை ஒரே நிமிடத்தில் நிறைவுற்றது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிளாஷ் முறையில் விற்பனை செய்தது. விற்பனை துவங்கிய ஒரே நிமிடத்தில் 30 ஆயிரம் பேர் இதனை வாங்கியுள்ளனர். அதன்படி நொடிக்கு 500 யூனிட்கள் வரை விற்பனையாகி இருக்கிறது.
முதல் பிளாஷ் விற்பனையில் மட்டும் 6.13 கோடி டாலர்களை சியோமி ஈட்டியுள்ளது. சியோமி எம்ஐ மிக்ஸ் போல்டு 12/256 ஜிபி, 12/512 ஜிபி மற்றும் 16/512 ஜிபி மெமரி என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது.

சீன சந்தையில் எம்ஐ மிக்ஸ் போல்டு 12/256ஜிபி விலை 1530 டாலர்கள், 12/512 ஜிபி விலை 1680 டாலர்கள், டாப் எண்ட் மாடலான 16/512 ஜிபி மாடல் விலை 2 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து வெர்ஷன்களிலும் HDR10 AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 108 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் லிக்விட் லென்ஸ் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.
கூகுள் அசிஸ்டண்ட், ஹெச்டிஆர் 10 போன்ற வசதிகள் நிறைந்த புது ஆண்ட்ராய்டு டிவியை சோனி அறிமுகம் செய்துள்ளது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புது ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகம் செய்தது. சோனி 32W830 என அழைக்கப்படும் புது 32 இன்ச் டிவி ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ், கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஹெச்டிஆர் 10 மற்றும் ஹெச்எல்ஜி பார்மேட்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.
இந்தியாவில் 32 இன்ச் அளவில் கிடைக்கும் டிவி மாடல்களில் விலை உயர்ந்த மாடல் இது ஆகும். மேலும் தற்போது கிடைக்கும் மாடல்களில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது. இதில் ஹெச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த டிவி கூகுளின் ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் கொண்டுள்ளது. மேலும் இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதியும், குரோம்காஸ்ட் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது. 16 ஜிபி மெமரி கொண்டிருக்கும் சோனி டிவியில் 20 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம், 3 ஹெச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ அவுட்புட், ப்ளூடூத் 4.2 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சோனி 32W830 மாடல் விலை ரூ. 31,990 ஆகும். இது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனை ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் முதல் பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் இது ஆகும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என சாம்சங் அறிவித்து இருந்தது.

தற்போதைய தகவல்களின்படி கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், இன்பினிட்டி யு ஸ்கிரீன், நாக்ஸ் செக்யூரிட்டி, குவிக் ஸ்விட்ச், சாம்சங் பே போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி ஏ42 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என இரு வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புது அப்டேட்களை வழங்கி இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் பரவல் உலகம் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் வழங்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவைரஸ் பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை கடந்துள்ளது.

அப்படியாக பாதிப்பை பெருமளவு குறைக்க தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. கடந்த மாதம் கூகுள் நிறுவனம் பல்வேறு தடுப்பூசி பற்றிய தகவல்களை மிக எளிமையாக கொண்டு செல்லும் முயற்சியை துவங்கியது.
தற்போது கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிலி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் புதிய ஏர்பாட்ஸ் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ப்ரோ, ஐமேக் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏர்பாட்ஸ் 3 மாடலும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர ஆப்பிள் பென்சில் 3 மாடலும் அறிமுகமாகும் என தெரிகிறது. ஆப்பிள் பென்சில் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புது ஐபேட் மாடல்கள் மினி எல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஏர்பாட்ஸ் 3 தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் சிலிகான் டிப்கள் வழங்கப்படுகிறது. இதன் கேஸ் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இந்த விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் FHD+HDR10 ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
மோட்டோ ஜி60 மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 32 எம்பி பன்ச் ஹோல் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.

மோட்டோ ஜி60 / மோட்டோ ஜி40 பியூஷன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி (ஜி40 பியூஷன்)
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11
- டூயல் சிம்
- ஜி60 – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார்
- ஜி40 பியூஷன் – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 32 எம்பி செல்பி கேமரா (16எம்பி - ஜி40 பியூஷன்)
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
இரு மோட்டோ ஸ்மார்ட்போன்களும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.






