என் மலர்
தொழில்நுட்பம்
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11.1 வழங்கப்படும் என தெரிகிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
விலையை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடல் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தாய்லாந்தில் இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்திற்கு வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்த பிராசஸர் கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 21 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எனினும், இந்த மாடல் பற்றி எந்த தகவலும் இல்லை. பெரும்பாலும் இது ரியல்மி 8 5ஜி மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் ரியல்மி 8 5ஜி விவரங்கள் இடம்பெற்று இருந்தது. அதில் இந்த மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 800 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.
ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியாகும் எல்ஜி நிறுவனம் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்குவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டது.
எல்ஜி நிறுவனம் தொடர் இழப்பு காரணமாக ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து இருக்கிறது. எனினும், ஏற்கனவே விற்பனை செய்த ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து அப்டேட் வழங்குவதாக அறிவித்தது. அந்த வகையில், எல்ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11, ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
- எல்ஜி விங்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி வி50எஸ்
- எல்ஜி வி50
- எல்ஜி ஜி8
- எல்ஜி கியூ31
- எல்ஜி கியூ51
- எல்ஜி கியூ52
- எல்ஜி கியூ61
- எல்ஜி கியூ70
- எல்ஜி கியூ92
- எல்ஜி கியூ9 ஒன்
- எல்ஜி ஜி8எக்ஸ்
- எல்ஜி ஜி8எஸ்
- எல்ஜி கே52
- எல்ஜி கே42

ஆண்ட்ராய்டு 12 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
- எல்ஜி விங்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி வி50எஸ்
- எல்ஜி வி50
- எல்ஜி ஜி8
- எல்ஜி கியூ31
- எல்ஜி கியூ52
- எல்ஜி கியூ92
ஆண்ட்ராய்டு 13 அப்டேட் பெறும் எல்ஜி ஸ்மார்ட்போன்கள்
- எல்ஜி வெல்வெட்
- எல்ஜி வெல்வெட் எல்டிஇ
- எல்ஜி விங்
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இரண்டு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்கள் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 அல்லது மோட்டோ ஜி பிளே 2021 மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை மோட்டோரோலா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது. மோட்டோ ஜி சீரிஸ் மாடல்கள் தவிர இரு ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. விரைவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 மற்றும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ ஜி ஸ்டைல் 2021 மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ ஜி பிளே 2021 மாடல் டூயல் கேமரா சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் அமெரிக்காவின் எப்சிசி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்சிசி வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி வேரியண்டின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 20எக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் எப்சிசி வலைதளங்களில் முறையே M2103K19PI மற்றும் M2103K19PG மாடல் நம்பர்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் M2103K19PG மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10 5ஜி மாடலுடன் ஒற்றுப்போவதாக கூறப்படுகிறது.
எப்சிசி வலைதள விவரங்களின் படி இரு மாடல்களிலும் பெருமளவு வித்தியாசங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலில் 22 வாட் பாஸ்ட் சார்ஜிங், எம்ஐயுஐ 12 மற்றும் ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் 20 ஆம் தேதி ஸ்ப்ரிங் லோடெட் (Spring Loaded) நிகழ்வை நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளது. இந்த நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெறுகிறது. இதில் ஐபேட் ப்ரோ, புதிய ஐபேட் மினி, புதிய ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் போன்ற சாதனங்கள் அறிமுகமாகும் என தெரிகிறது.

ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வு ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், யூடியூப் தளங்களில் நேரலை செய்யப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள் ஏப்ரல் மாத நிகழ்வு குறித்த தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், ஆப்பிள் தவறுதலாக நிகழ்வு நடைபெற இருப்பதை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டிங்கில் கேமிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமியின் ரெட்மி பிராண்டு கேமிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகமாக இருக்கிறது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் தரத்தில், தலைசிறந்த கேமிங் அனுபவத்தை குறைந்த விலையில் வழங்கும் என ரெட்மி தெரிவித்து உள்ளது.

முதல் கேமிங் ஸ்மார்ட்போனிற்கென ரெட்மி கால் ஆப் டியூட்டி மொபைல் உடன் இணைந்து கேமின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்த இருக்கிறது. ரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் எந்த தேதியில் அறிமுகமாகும் என ரெட்மி சார்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து வெளியான மற்றொரு தகவலில் ரெட்மியின் முதல் கேமிங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் இ4 AMOLED ஸ்கிரீன் 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது டேப் மாடல்களை விற்பனை செய்ய புது விளம்பர திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
சாம்சங் இந்தியா நிறுவனம் ‘Back to School’ திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் கேலக்ஸி டேப் மாடல்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. இதில் கேலக்ஸி டேப் எஸ்6 லைட், கேலக்ஸி டேப் ஏ7, கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ், டேப் எஸ்7, டேப் எஸ்6 லைட் மற்றும் டேப் ஏ7 போன்ற மாடல்களை சாம்சங் வலைதளத்தில் வாங்கினால் அதிகபட்சம் 10 சதவீதம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்க பயனர்கள் முதலில் Samsung Student Advantage-இவ் லாக் இன் செய்ய வேண்டும். மேலும் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தினால் அசத்தலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் தொகை ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப வேறுபடும்.
ரியல்மி பிராண்டின் புது ரியல்மி 8 5ஜி மாடல் 48 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 21ஆம் தேதி தாய்லாந்தில் அறிமுகமாகிறது. இதே ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகமாக இருக்கிறது. எனினும், இதன் இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரியல்மி 8 4ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் டீசரில் ஸ்மார்ட்போனின் பின்புறம் கிரேடியன்ட் பேக் பினிஷ் மற்றும் `Dare to Leap' பிராண்டிங் காணப்படுகிறது. மேலும் இதில் 48 எம்பி பிரைமரி சென்சாருடன், மூன்று கேமராக்கள் வழங்கப்படுகின்றன.
ரியல்மி 8 4ஜி மாடலில் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டன. ரியல்மி 8 5ஜி மாடல் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வி13 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ரெட்மி நோட் சீரிஸ் மாடல்கள் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆகும். எனினும், புதிய நோட் 10 சீரிசின் பெரும்பாலான யூனிட்களில் டிஸ்ப்ளே கோளாறு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட யூனிட்களில் ஸ்கிரீன் ப்ளிக்கர் மற்றும் ஸ்கிரீன் பயனற்று போவதாக பலர் தங்களின் சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். தொடர் குற்றச்சாட்டு ஏற்பட்டதை ஒப்புக் கொண்ட சியோமி நிறுவனம் விரைவில் இதனை சரி செய்வதாக அறிவித்து இருக்கிறது.

இந்த பிரச்சனை நோட் 10 சீரிஸ் பயன்படுத்துவோரில் 0.001 சதவீதம் பேருக்கு தான் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனை விரைந்து சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பதிலில் சியோமி தெரிவித்து உள்ளது.
ரெட்மி நோட் 10 சீரிசில் ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 108 எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் துவக்க விலை ரூ. 11,999 ஆகும்.
எல்ஜி நிறுவனத்தின் சுழலும் திரை கொண்ட விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்குகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 40 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 12 ஆம் தேதி துவங்கும் சிறப்பு பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனையில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இது ஏப்ரல் 15 வரை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ. 69,990 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி விங் ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எல்ஜி விங் ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் அம்சங்கள் மற்றும் வித்தியாசமான சுழலும் டிசைன் கொண்டுள்ளது.

எல்ஜி விங் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 என ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் Notify Me ஆப்ஷன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இது ஏற்கனவே விற்று தீர்ந்து இருக்கும் என்றே தெரிகிறது.
எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் P-OLED ஃபுல்விஷன் ஸ்கிரீன், 3.9 இன்ச் FHD+ இரண்டாவது ஸ்கிரீன் சுழலும் வசதியுடன் வழங்கப்படுகிறது. இதனால் இரே சமயத்தில் இரண்டு ஸ்கிரீன்களையும் பயன்படுத்த முடியும்.






