search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐகூ டீசர்
    X
    ஐகூ டீசர்

    அமேசானில் விற்பனைக்கு வரும் ஐகூ 7 சீரிஸ் மாடல்கள்

    ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    ஐகூ 7 சீரிஸ் இந்திய வெளியீடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில், தற்போது ஐகூ 7 லெஜண்ட் மாடல் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய ஐகூ 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     ஐகூ டீசர்

    ஐகூ 7 லெஜண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 7 மாடலிலும் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 870 பிராசஸராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரு மாடல்களுடன் ஐகூ நியோ 5 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஸ்னாப்டிராகன் 888  பிராசஸர் கொண்ட ஐகூ 7 லெஜண்ட் இந்திய சந்தையில் ரூ. 40 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என ஐகூ ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஐகூ 7 மாடல் விலை மேலும் குறைவாகவே இருக்கும். ஐகூ 7 சீரிஸ் மாடல்கள் கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் விவோ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    Next Story
    ×