search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ஏ74 5ஜி
    X
    ஒப்போ ஏ74 5ஜி

    ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

    ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வெளியாகி இருக்கிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடலில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11.1 வழங்கப்படும் என தெரிகிறது.

     ஒப்போ ஏ74 5ஜி

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா,  ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 

    விலையை பொருத்தவரை ஒப்போ ஏ74 5ஜி மாடல் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தாய்லாந்தில் இந்த மாடல் இந்திய மதிப்பில் ரூ. 21 ஆயிரத்திற்கு வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் என இரு நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×