search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ஏ54
    X
    ஒப்போ ஏ54

    6 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது ஒப்போ ஸ்மார்ட்போன் அறிமுகம்

    ஒப்போ நிறுவனத்தின் ஏ54 ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா, பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் தனது ஏ54 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதல் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒப்போ ஏ54

    ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருக்கும் ஏ54 ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் பிளாக், ஸ்டேரி புளூ மற்றும் மூன்லைட் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,490 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,490 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
    Next Story
    ×