என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் வழங்கப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை ஒன்பிளஸ் வாட்ச் பெயரில் அறிமுகம் செய்தது. முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படவில்லை என உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

     ஒன்பிளஸ் வாட்ச்

    இந்த நிலையில், ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றி அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு முன் ஒன்பிளஸ் புது அப்டேட் ஒன்றை அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியிட்டு இருக்கிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் இந்தியா உள்பட மற்ற நாடுகளுக்கும் வெளியிடப்பட இருக்கிறது. 

    எதிர்காலத்தில் வெளியாகும் அப்டேட்கள் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, கேமராவை இயக்கும் வசதி, 12 மணி நேர கடிகார அமைப்பை வைத்துக் கொள்ளும் வசதி, புது ஏஐ வாட்ச் பேஸ் உள்ளிட்ட அம்சங்களை வழங்கும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
    மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர் கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

     ரியல்மி 8 5ஜி

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் ரியல்மி 8 5ஜி 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் சூப்பர்சோனிக் புளூ மற்றும் சூப்பர்சோனிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட், ரியல்மி வலைதளங்கள் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் அளவில் சிறியதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடல் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேலக்ஸி இசட் போல்டு 3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய இசட் போல்டு 3 முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 5.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. முந்தைய மாடலில் 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

     கேலக்ஸி இசட் போல்டு 2

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆர்மர் பிரேம் டைட்டானியம் அல்லது கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரு பொருட்களும் அலுமினியம் மற்றும் ஸ்டீலை விட எடை குறைவாக இருப்பவை ஆகும். மற்ற அம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், எஸ் பென் வசதி வழங்கப்படலாம். 

    கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் சப்போர்ட் வழங்குவதற்கு தேவையான பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ் பென் வழங்கப்படுவதால், புது கேலக்ஸி நோட் பேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.
    இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், ஒப்போ இந்தியா புது வலைதளம் துவங்க இருக்கிறது.


    ஒப்போ இந்தியா நிறுவனம் மே 7 ஆம் தேதி புது இ-ஸ்டோர் துவங்க இருக்கிறது. இந்த ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த சாதனங்களை க்ளிக் செய்து வாங்கிக் கொள்ள முடியும்.

    இந்த இ-ஸ்டோர் அனைத்து ஒப்போ சாதனங்களையும் அசத்தலான சலுகை விலையில் வழங்க இருக்கிறது. தற்போது நாடு முழுக்க 60 ஆயிரம் விற்பனை முனையங்கள் மற்றும் 180 சில்லறை விற்பனை மையங்கள் மூலம் ஒப்போ தனது சாதனங்களை விற்பனை செய்து வருகிறது.

     ஒப்போ இ ஸ்டோர்

    ஜனவரி 2021 வாக்கில் வெளியான தகவல்களின்படி ஒப்போ நிறுவனம் சீன சந்தையின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ54, ஏ74 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் முறையே ரூ. 13,490 மற்றும் ரூ. 17,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.
    நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்த அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த செயலிக்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோரில் துவங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இந்த கேம் ஐஒஎஸ் தளத்திலும் வெளியாக இருக்கிறது.

    முதற்கட்டமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. இரு சந்தைகளில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற பகுதிகளில் வெளியிடுவது பற்றி முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல்

    கணினி மற்றும் கன்சோல்களை தொடர்ந்து அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் பதிப்பும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேம் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், கேமினுள் அப்டேட்களை பெற சில அம்சங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

    அபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் தொடுதிரை வசதி கொண்ட சாதனங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. மூன்றாம் தரப்பு கண்ட்ரோலர்களுக்கான வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
    போக்கோ பிராண்டின் பிரபலமான போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.


    போக்கோ பிராண்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எம்2 ஸ்மார்ட்போன் இதுவரை 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    தற்போது போக்கோ எம்2 ரி-லோடெட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கிரெயிஷ் பிளாக் மற்றும் மோஸ்ட்லி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இது ஏப்ரல் 21 முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

     போக்கோ எம்2 ரி-லோடெட்

    புது மெமரி தவிர இதன் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி போக்கோ எம்2 ரி-லோடெட் மாடலில் 6.53 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் டு-டோன் டிசைன், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சங்களை கொண்டிருக்கிறது.
    ஒப்போ நிறுவனத்தின் ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.


    ஒப்போ நிறுவனம் ஏ74 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 90 ஹெர்ட்ஸ் ஹைப்பர் கலர் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி மோனோ கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.

     ஒப்போ ஏ74 5ஜி

    ஒப்போ ஏ74 5ஜி அம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 90Hz ஹைப்பர் கலர் ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் 
    - அட்ரினோ 619 GPU
    - 6 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, PDAF, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் 
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் புளூயிட் பிளாக், பேண்டேஸ்டிக் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய பாட்காஸ்ட் செயலி, பாட்காஸ்ட் சந்தா முறை உள்ளிட்டவைகளை அறிவித்தது. 

    மேலும் ஆப்பிள் டிவி 4கே, யு1 சிப்செட் கொண்ட  ஏர்டேக் டிவைஸ் டிராக்கர், புதிய ஐமேக், ஐபேட் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்தது. இத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை புதிதாக பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.

     ஆப்பிள் டிவி

    ஆப்பிள் டிவி 4கே

    2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் டிவியின் மேம்பட்ட மாடல் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பிள் டிவி HDR, டால்பி விஷன், ஏ12 பயோனிக் சிப், மேம்பட்ட கிராபிக்ஸ், வீடியோ டிகோடிங், நேவிகேஷன் கண்ட்ரோல் கொண்ட புதிய சிரி ரிமோட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,990 என துவங்குகிறது.

     ஏர்டேக்

    ஏர்டேக்

    புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் செயலியுடன் பாட்காஸ்ட் சந்தா எனும் புது சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பாட்காஸ்ட் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இத்துடன் ஆப்பிள் உருவாக்கிய யு1 சிப் கொண்ட ஏர்டேக் டிராக்கர் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த டிராக்கர் அல்ட்ரா வைடுபேண்ட் தொழில்நுட்பம், பில்ட்-இன் ப்ளூடூத் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆப்பிள் நிறுவனத்தின் பைண்ட் மை நெட்வொர்க் சேவையை கொண்டு பொருட்களை கண்டறிந்து கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஏர்டேக் விலை ரூ. 3,190 என்றும் நான்கு ஏர்டேக் வாங்கும் போது ரூ. 10,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     ஐமேக்

    ஐமேக்

    புதிய ஐமேக் மாடல் 24 இன்ச் 4.5கே ரெட்டினா டிஸ்ப்ளே, 8 கோர் ஆப்பிள் எம்1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி மெமரி, 2 டிபி வரையிலான ஸ்டோரேஜ், டச் ஐடி வசதி கொண்ட கீபோர்டு, 1080 பிக்சல் பேஸ் டைம் ஹெச்டி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புது ஐமேக் மாடல் புளூ, கிரீன், பின்க், சில்வர், எல்லோ, ஆரஞ்சு மற்றும் பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,19,990 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     ஐபேட் ப்ரோ

    ஐபேட் ப்ரோ

    இதே நிகழ்வில் ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஆப்பிள் எம்1 பிராசஸர் கொண்டிருக்கின்றன. இதன் 11 இன்ச் மாடலில் பேக்லிட் லிக்விட் ரெட்டினா LED டிஸ்ப்ளேவும், 12.9 இன்ச் மாடலில் மினி LED லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளேவும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் இரு மாடல்களும் 5ஜி கனெக்டிவிட்டி, தண்டர்போல்ட், யுஎஸ்பி டைப் சி போர்ட், 12 எம்பி அல்ட்ரா வைடு ட்ரூடெப்த் செல்பி கேமரா, 12 எம்பி வைடு கேமரா, 10 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய ஐபேட் ப்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 71,900 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,12,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல்கள் ஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் பர்பில் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.


    ஆப்பிள் தனது ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களின் பர்பில் நிற வேரியண்டை அறிமுகம் செய்தது. முன்னதாக இரு ஐபோன்களும் புளூ, கிரீன், பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    புதிய நிறம் கொண்ட ஐபோன்கள் ஐஒஎஸ் 14.5 வெர்ஷன் கொண்டிருக்கும். இந்த ஒஎஸ் பயனர் முகக்கவசம் அணிந்து இருந்தால் ஆப்பிள் வாட்ச் கொண்டு  ஐபோனினை அன்லாக் செய்யும் வசதி கொண்டுள்ளது. 

     ஐபோன் 12

    ஐபோன் 12 மற்றும் ஐபோன் மினி மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, HDR மற்றும் டால்பி விஷன் வசதி கொண்டிருக்கின்றன. இத்துடன் செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    இரு மாடல்களிலும் ஏ14 பயோனிக் பிராசஸர், 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 12 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து கேமராக்களிலும் நைட் மோட் மற்றும் நைட் மோட் டைம்-லேப்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளன.
    ஆப்பிள் நிறுவனம் புது ஐபேட் ப்ரோ மாடலை அல்ட்ரா வைடு கேமரா, எம்1 பிராசஸருடன் அறிமுகம் செய்தது.


    ஆப்பிள் நிறுவனத்தின் புது ஐபேட் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ எம்1 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளே மினி OLED கொண்டிருக்கின்றன. 

    11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புது ஐபேட் ப்ரோ தண்டர்போல்ட், மல்டி டச், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆப்பிள் பென்சில் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகின்றன.

     ஐபேட் ப்ரோ

    மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 16 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி வரையிலான இன்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் லிடார் சென்சார், வைபை 6, பேஸ் ஐடி, நான்கு ஸ்பீக்கர் ஆடியோ வசதி, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய 11 இன்ச் ஐபேட் ப்ரோ விலை 799 டாலர்கள் என்றும் 12.9 இன்ச் மாடல் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்குகிறது. 
    ஆப்பிள் நிறுவனம் புது ஐமேக் கம்ப்யூட்டரை சிறப்பான கேமராவுடன் அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆப்பிள் நிறுவனம் ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் ஆப்பிள் டிவி 4கே மற்றும் ஐமேக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் ஐமேக் மாடல் அசத்தலான புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஐமேக் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் எம்1 பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 

     ஐமேக்

    இதில் உள்ள 1080 பிக்சல் கேமரா வீடியோ கால் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சேர்க்கிறது. மேலும் இதில் உள்ள மைக் இதுவரை இல்லாத அளவு சிறப்பான அனுபவத்தை வழங்ககுகிறது. ஐமேக் கணினியில் செயலிகள் அனைத்தும் அதிவேகமாக இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள சிபியு முந்தைய மாடல்களில் இருப்பதை விட 85 சதவீதம் வேகமாக இயங்குகிறது. மேலும் கிராபிக்ஸ் சார்ந்த அம்சங்கள் முன்பை விட 50 சதவீதம் வேகமாக இயங்கும். இத்துடன் மென்பொருள்களை அதிவேக இயக்க பிரத்யேக அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு உள்ளன. இதனுடன் பயன்படுத்த மூன்றுவித கீபோர்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

     ஆப்பிள் டிவி

    புதிய ஐமேக் துவக்க விலை 1299 டாலர்கள் ஆகும். இத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் டிவி 4கே மாடல் ஏ12 பயோனிக் பிராசஸர் கொண்டுள்ளது. மேலும் மேம்பட்ட சிரி ரிமோட் வழங்கப்படுகிறது. மேலும் இது அதிக பிரேம் ரேட் ஹெச்டிஆர் வீடியோ வசதி கொண்டிருக்கிறது. இதன் துவக்க விலை 179 டாலர்கள் ஆகும்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன் மே 1 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி60 மற்றும் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் மேக்ஸ் விஷன் FHD+LCD ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் டர்போபவர்  சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. ஜி60 மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா கொண்டிருக்கிறது. மோட்டோ ஜி40 பியூஷன் 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     மோட்டோ ஜி40 பியூஷன்

    மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் அம்சங்கள்

    - 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி (ஜி40 பியூஷன்)
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஜி60 – 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.7, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - ஜி40 பியூஷன் – 64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 32 எம்பி செல்பி கேமரா
    - 16 எம்பி செல்பி கேமரா - ஜி40 பியூஷன்
    - பின்புறம் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 6000 எம்ஏஹெச் பேட்டரி
    - 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் 

    மோட்டோ ஜி60 மற்றும் ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் டைனமிக் கிரே மற்றும் பிராஸ்டெட் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஜி60 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி துவங்குகிறது.

    மோட்டோ ஜி40 பியூஷன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.
    ×