என் மலர்
தொழில்நுட்பம்

கேலக்ஸி இசட் போல்டு 2
இணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடல் அளவில் சிறியதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. மூன்றாம் தலைமுறை மாடல் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேலக்ஸி இசட் போல்டு 3 விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய இசட் போல்டு 3 முந்தைய மாடலை விட அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் 5.4 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. முந்தைய மாடலில் 6.3 இன்ச் கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் ஆர்மர் பிரேம் டைட்டானியம் அல்லது கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரு பொருட்களும் அலுமினியம் மற்றும் ஸ்டீலை விட எடை குறைவாக இருப்பவை ஆகும். மற்ற அம்சங்களை பொருத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், எஸ் பென் வசதி வழங்கப்படலாம்.
கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலில் எஸ் பென் சப்போர்ட் வழங்குவதற்கு தேவையான பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ் பென் வழங்கப்படுவதால், புது கேலக்ஸி நோட் பேப்லெட் மாடல் அறிமுகம் செய்யப்படாது என்றும் கூறப்படுகிறது.
Next Story






