என் மலர்
தொழில்நுட்பம்
விவோ நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
விவோ நிறுவனம் வி21 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் முறையில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகிறது. இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
தற்போதைய தகவல்களின் படி விவோ வி21 5ஜி மாடலில் 44 எம்பி செல்பி கேமரா, OIS வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் செல்பி கேமராவுக்கு OIS வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது என்ற பெருமையை பெறுகிறது.

இத்துடன் இரண்டு பிளாஷ் மாட்யூல்கள் வழங்கப்படுகிறது. இவற்றை விவோ ஸ்பாட்லைட் செல்பி என அழைக்கிறது. இது குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளிலும் தெளிவான செல்பிக்களை எடுக்க வழி வகுக்கிறது. விவோ வி21 மாடலில் சூப்பர் நைட் செல்பி 2.0, ஸ்பாட்லைட் செல்பி, டூயல்-வியூ வீடியோ என பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் எக்ஸ்டென்டெட் ரேம் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரியில் 3 ஜிபியை பயன்படுத்தி மொத்தம் 11 ஜிபி ரேம் கிடைக்கும்.
ஐகூ நிறுவனத்தின் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐகூ நிறுவனம் ஐகூ 7 5ஜி மற்றும் ஐகூ 7 லெஜண்ட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.62 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், 5ஜி SA/NSA, லிக்விட் கூலிங் சிஸ்டம், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மோனோ டெப்த் சென்சார், 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, 4400 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ 7 5ஜி சாலிட் ஐஸ் புளூ மற்றும் ஸ்டாம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,990, 8 ஜிபி + 256 ஜிபி ரூ. 33,990 மற்றும் டாப் எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி ரூ. 35,990 ஆகும்.
ஐகூ 7 லெஜண்ட் 6.62 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1, 5ஜி SA/NSA, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 66 வாட் சூப்பர் பாஸ்ட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ ஆப்ஷன், 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, 16 எம்பி பன்ச்-ஹோல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ 7 லெஜண்ட் வைட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,990, 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 43,990 ஆகும். இரு ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.
ஐபோன் 13 மினி மாடல் முந்தைய மாடலை விட ஓரளவு வித்தியாச தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் 2021 ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி 4கே, ஐமேக் மற்றும் ஏர்டேக்ஸ் உள்ளிட்ட சாதனங்களை ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில் அறிமுகம் செய்தது. தற்போது ஆப்பிள் அடுத்தக்கட்ட சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
செப்டம்பரில் நடைபெற இருக்கும் நிகழ்வில் ஐபோன் 13 மினி மாடல்களின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி மினி மாடல் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 மினி படங்கள் சீனாவின் வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது.

தற்போதைய தகவல்களின்படி ஐபோன் 13 மினி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப் கொண்டிருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் 13 மினி முந்தைய மாடலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. ஐபோன் 13 மினி புளூ நிறம் கொண்டிருக்கிறது. இத்துடன் மேலும் சில நிறங்களில் இந்த மாடல் கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஐபோன் 13 மினி மாடலுடன் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன்கள் அனைத்தும் ஒரே மாதிரியான நாட்ச், ஆப்பிள் ஏ15 பயோனிக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் அறிமுகம் செய்து பின் சாம்சங், சியோமி நிறுவனங்கள் வழியில் நோக்கியாவும் அதேபோன்று செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நோக்கியா எக்ஸ்20 ஸ்மார்ட்போன் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்பிள், சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜர் வழங்குதை நிறுத்தின. இவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதாக அந்தந்த நிறுவனங்கள் தெரிவித்து வந்தன.

நோக்கியா எக்ஸ்20 மாடலுக்கான வலைப்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் வால் சார்ஜர் இன்றி விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும் பெட்டி 100 சதவீதம் உரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்-பாக்சில் வழங்கப்படும் சாதனங்கள் பட்டியலில் வால் சார்ஜர் இடம்பெறவில்லை. ஹெச்எம்டி குளோபல் இந்த ஸ்மார்ட்போனை ஏப்ரல் 8 ஆம் தேதி ஐரோப்பாவில் அறிமுகம் செய்தது.
விவோ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு புது அம்சங்களை வழங்கும் ஒஎஸ் அப்டேட் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் யூனிட்களுக்கு பன்டச் ஒஎஸ் 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த அப்டேட் கிரேஸ்கேல் டெஸ்ட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கிரேஸ்கேல் டெஸ்டிங்கின் போது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் அப்டேட் வழங்கப்படும். விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த பன்டச் ஒஸ்9 உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் பன்டச் ஒஎஸ் 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியிடப்பட்டது.

புது அப்டேட் கிடைத்து இருப்பதாக விவோ எஸ்1 ப்ரோ, விவோ இசட்1 ப்ரோ மற்றும் விவோ இசட்1எக்ஸ் மாடல்களை பயன்படுத்துவோர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கிரேஸ்கேல் டெஸ்ட் துவங்கி இருக்கும் நிலையில், அனைவருக்குமான அப்டேட் விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
விவோ எஸ்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் 3.79 ஜிபியாகவும், விவோ இசட்1எக்ஸ் மாடலுக்கான அப்டேட் 3.29 ஜிபியாகவும், விவோ இசட்1 ப்ரோ மாடலுக்கான அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யப்படும் போது யூனிட்களை சார்ஜ் செய்திருப்பதையும், சீரான வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
ஒப்போ நிறுவனம் தனது ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. புதிய ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 17,990 விலையில் வெளியிடப்பட்டது.
புதிய ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மூன்று பிரைமரி கேமராக்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஒப்போ சமீபத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்த ஒப்போ ஏ55 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. முன்னதாக சென்போன் 8 மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.

கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ASUS_1004D எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கின்றன. மேலும் இரு மாடல்களும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றன.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் 6.67 இன்ச் E4 AMOLED ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 20 எம்பி செல்பி கேமரா மிக சிறிய பன்ச் ஹோலில் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஐ 11 எக்ஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. எம்ஐ 11 எக்ஸ் மாடலில் 48 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலில் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4520 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடல்கள் செலஸ்டியல் சில்வர் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. எம்ஐ 11 எக்ஸ் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999, 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 39,999, 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சம் இந்தியாவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்க சோதனை செய்ய துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக இந்த சோதனை இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் துவங்கி உள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ் அம்சத்தில் இருந்து வருவாய் ஈட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை துவங்கப்பட்டு இருக்கிறது. டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது முதல் ரீல்ஸ் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து இருக்கிறது.
ரீல்ஸ் அம்சத்தில் வரும் மற்ற வீடியோக்களுடன் விளம்பர வீடியோக்கள் அதிகபட்சம் 30 நொடிகள் வரை இருக்கும். பயனர்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் விளம்பரங்களை முடக்கும் வசதியும் வழங்கப்படும் என பேஸ்புக் தெரிவித்து உள்ளது.
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 12 ஜிபி ரேம் கொண்ட எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.81 இன்ச் E4 AMOLED குவாட் கர்வ்டு டாட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1.1 இன்ச் AMOLED ஸ்கிரீன் ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே வசதியுடன் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், லிக்விட் கூல் தொழில்நுட்பம், 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 48 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் வயர்டு பிளாஷ் சார்ஜிங், 67 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா அம்சங்கள்
- 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் QHD+ AMOLED 20:9 HDR10 + டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- 1.1 இன்ச் 126x294 AMOLED ரியர் டச் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம்
- 256 ஜிபி UFS 3.1 மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- எம்ஐயுஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி பிரைமரி கேமரா, 1.4μm, f/1.95, OIS, LED பிளாஷ்
- 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 48 எம்பி டெலிபோட்டோ கோமரா
- 20 எம்பி செல்பி கேமரா, 0.8μm, f/2.2
- இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ, டூயல் ஸ்பீக்கர்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
சியோமி எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 69,999 ஆகும். இது அமேசான் மற்றும் ஆப்லைன் தளங்களில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.
இந்திய சந்தையில் புதிய டிமென்சிட்டி 1200 5ஜி மொபைல் பிராசஸர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மீடியாடெக் நிறுவனம் தனது டிமென்சிட்டி 1200 பிராசஸரை அறிமுகம் செய்துவிட்டது. தற்போது இந்த பிராசஸர் இந்திய சந்தையில் வெளியாகி இருக்கிறது. வெளியீட்டை தொடர்ந்து புதிய மீடியாடெக் பிராசஸர் ரியல்மி ஸ்மார்ட்போனில் முதலில் வழங்கப்படுகிறது.
இதனை ரியல்மி டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ரியல்மி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும்.

புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் 6 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 3 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் ஆக்டா-கோர் சிபியுக்களை கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறை பிராசஸரை விட 22 சதவீதம் அதிவேக சிபியு திறன் வழங்கும்.
இதனுடன் ARM மாலி - G77 MC9 GPU, 6 கோர் மீடியாடெக் APU 3.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஏஐ அம்சங்கள், அசத்தலான டிஸ்ப்ளே, அதிவேக ரிப்ரெஷ் ரேட், கேமிங் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச IMEI தளங்களில் இடம்பெற்று இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக எம்ஐ மிக்ஸ் போல்டு அறிமுகமானது. எனினும், இது சீன சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் சர்வதேச IMEI தளங்களில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச IMEI தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் M2011J18G எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதில் G எனும் வார்த்தை குளோபல் அதாவது சர்வதேச சந்தையை குறிக்கிறது.
எம்ஐ மிக்ஸ் சர்வதேச மற்றும் இந்திய வெளியீடு குறித்து சியோமி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் சியோமி நிறுவனம் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.






