என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனம் தனது புது லேப்டாப் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது லேப்டாப் நேரடியாக சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு முன்பதிவு துவங்கி இருக்கிறது.
புதிய சாம்சங் லேப்டாப் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் ஆல்பா மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இது 2 இன் 1 கன்வெர்டிபில் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா மாடல் 11-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ5 / கோர் ஐ7 பிராசஸர் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட மாடல் விலை 849 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 63 ஆயிரம் என்றும் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் வேரியண்ட் விலை 1049 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 77,700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சாம்சங் லேப்டாப் பிளாக் மற்றும் சில்வர் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா 13.3 இன்ச் QLED புல் ஹெச்டி 1920x1080 பிக்சல் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 / கோர் ஐ7 பிராசஸர் கொண்டிருக்கிறது. இன்டெல் கோர் ஐ5 பிராசஸருடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்எஸ்டி, இன்டெல் கோர் ஐ7 பிராசஸருடன் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிசை ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் என மூன்று மாடல்களில் அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது ரெட்மி நோட் 10 விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வின் படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,499 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் முறையே ரூ. 11,999 மற்றும் ரூ. 13,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.
ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் அக்வா கிரீன், பிராஸ்ட் வைட் மற்றும் ஷேடோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் இந்த மாடலை வாங்குவோருக்கு சிறப்பு எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12, 6.43 இன்ச் 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
ரியல்மி பிராண்டு இந்திய சந்தையில் புதிய எக்ஸ்7 மேக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.
ரியல்மி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரியல்மி எக்ஸ்7 ப்ரோ இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சியோமி, விவோ, ஐகூ போன்ற பிராண்டுகள் இந்த பிரிவில் பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை காரணம் காட்டி ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒத்திவைக்க ரியல்மி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை ரியல்மி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இதோடு மே 4 ஆம் தேத நடைபெற இருந்த ரியல்மி ஆண்டுவிழா நிகழ்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனாவைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக இருக்கிறது. இந்த சூழலில் குடும்பமாக இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும் என ரியல்மி தெரிவித்து உள்ளது. ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி வெளியீடு பற்றி ரியல்மி வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.
விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், ஆப்லைன் ஸ்டோர்களில் மே 6 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
விவோ நிறுவனம் வி21 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புது மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
இத்துடன் 44 எம்பி செல்பி கேமரா, OIS, ஆட்டோ போக்கஸ் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர், 8 ஜிபி ரேம், எக்ஸ்டென்டெட் ரேம் தொழில்நுட்பம், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது.

விவோ வி21 5ஜி அம்சங்கள்
- 6.44 இன்ச் 2404×1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் 800யு பிராசஸர்
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், OIS
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, போர்டிரெயிட் ஆப்ஷன்
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 44 எம்பி செல்பி கேமரா, f/2.0, OIS, டூயல் LED பிளாஷ்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் வைட், சன்செட் டேசில் மற்றும் டஸ்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 31,990 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் மே 6 ஆம் தேதி துவங்குகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி முகாம் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு அவசியமான ஒன்றாகும். முன்பதிவு செய்ய அரசு அங்கீகரித்த அடையாள சான்று வைத்திருக்க வேண்டும். உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அதிக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் பட்டியலில் இந்தியா உள்ளது.
இந்த நிலையில், 18 முதல் 44 வயதுடையவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. முன்பதிவு CoWIN, ஆரோக்கிய சேது மற்றும் UMANG செயலிகளில் நடைபெறுகிறது. முன்பதிவை அடுத்து தகுதி பெற்றவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.
கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் 18 முதல் 44 வயதுடையவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய மொபைல் நம்பர் அவசியம் ஆகும். மேலும் ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், பென்சன் பாஸ்புக், என்பிஆர் ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசிக்கு CoWIN தளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?
- முதலில் CoWIN வலைதளம் சென்று Register/ Sign in Yourself ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
- பின் மொபைல் நம்பரை பதிவிட்டு Get OTP பட்டனை க்ளிக் செய்யவும். மொபைல் எண்ணிற்கு OTP வரும்
- மொபைலுக்கு வந்த OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- பெயர், பாலினம், பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவிட்டு Register பட்டனை க்ளிக் செய்யவும்
- அடுத்து கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்பவரின் பெயருக்கு அடுத்து காணப்படும் Schedule ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- இனி உங்களின் அஞ்சல் குறியீட்டை பதிவிட்டு Search ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அஞ்சல் குறியீட்டு பகுதியில் செயல்படும் தடுப்பூசி மையங்கள் பட்டியல் காண்பிக்கப்படும்
- ஒவ்வொருத்தரின் மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப தடுப்பூசி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்
- தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மையம், தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களை வழங்கி Confirm பட்டனை க்ளிக் செய்யவும்
ஒருமுறை முன்பதிவு செய்யும் போது அதிகபட்சம் நான்கு குடும்ப உறுப்பினர்களை சேர்க்க முடியும். எனினும், அனைவரின் வயதும் 18 முதல் 44 ஆக இருப்பது அவசியம் ஆகும்.

ஆரோக்கிய சேது செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?
- ஆரோக்கிய சேது செயலியை திறக்கவும்
- செயலியின் ஹோம் ஸ்கிரீனில் CoWIN டேபை க்ளிக் செய்யவும்
- அடுத்து Vaccination Registration ஆப்ஷனை க்ளிக் செய்து, மொபைல் நம்பரை பதிவிட்டு OTP பெறவும்
- இனி OTP-யை பதிவிட்டு Verify ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- முந்தைய ஆப்ஷனை தொடர்ந்து முன்பதிவு செய்வதற்கான வலைப்பக்கம் திறக்கும்
- இனி CoWIN தளத்தில் முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி முன்பதிவை மேற்கொள்ளலாம்
இந்தியாவில் தற்போது இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஒன்று ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் உருவாக்கிய கோவாக்சின் மற்றொன்று ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசென்கா உருவாக்கிய கோவிஷீல்டு ஆகும்.
ரூ. 19 ஆயிரம் சிறப்பு விலையில் சாம்சங் நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 6.6 இன்ச் சூப்பர் AMOLED இன்பினிட்டி யு ஹெச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 கொண்டிருக்கும் கேலக்ஸி எம்42 5ஜி புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் ஹெச்டி+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- சாம்சங் பே
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக், ப்ரிசம் டாட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.
சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் 5 மற்றும் ஸ்மார்ட்போன்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தின் சமீபத்திய பிளேஸ்டேஷன் 5 உலகம் முழுக்க சுமார் 78 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சோனி நிறுவனம் சுமார் 45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சுமார் 33 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த வியாபாரத்தில் கேம் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவில் மட்டும் சோனி கணிசமான லாபம் ஈட்டியுள்ளது. இதன் மின்னணு பொருட்கள் பிரிவு 3 சதவீத சரிவடைந்துள்ளது. டிஜிட்டல் கேமரா, ஒளிபரப்பு, தொழில்முறை ஆடியோ மற்றும் வீடியோ சாதனங்கள் விற்பனையும் சரிவடைந்து இருக்கிறது.
அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் சென்போன் 8 பன்ச் ஹோல் கட்-அவுட் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அசுஸ் சென்போன் 8 ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வகையில், தற்போது இதன் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய தகவல்களின் படி அசுஸ் நிறுவனம் இந்த ஆண்டு சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. மூன்று மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது.
அசுஸ் சென்போன் 8 மற்றும் சென்போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 64 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு பணிகளுக்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.
ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனாவைரஸ் பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்.
`இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ள அனைவருடன் ஆப்பிள் துணை நிற்கிறது. களத்தில் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான உதவிகளுக்கு ஆப்பிள் நன்கொடை வழங்கும்,' என டிம் குக் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுக்க மிகத்தீவிரம் அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்தனர்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மற்றும் இதர சாதனங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ரியல்மி இந்தியா மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் மிகப்பெரும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இத்துடன் டால்பி விஷன் மற்றும் ஆடியோ, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் கொண்ட புது ஸ்மார்ட் டிவியும் இந்த நிகழ்வில் அறிமுகமாகிறது. மேலும் இந்த ஆண்டின் இந்தியாவில் அறிமுகமாகும் சாதனங்களில் பாதி 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும்.
ரூ. 20 ஆயிரத்திற்கும் அதிக விலையில் வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி வழங்கப்படும். இதோடு குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி திட்டமிட்டு இருக்கிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் புது பட்ஜெட் ரக 5ஜி ஸ்மார்ட்போன் மே 2 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஏ53எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ53எஸ் 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- கலர்ஒஎஸ் 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, PDAF, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
ஒப்போ ஏ53எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ மற்றும் இன்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 14,990 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,990 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஆப்லைன் தளங்களில் மே 2 ஆம் தேதி துவங்குகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் சாம்சங் நிறுவனத்தின் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் 200 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உற்பத்தி செய்யும் என்றும் இது முதன்முதலில் சியோமி ஸ்மார்ட்போனில் தான் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை 108 எம்பி கேமராவுடன் சியோமி அறிமுகம் செய்து இருக்கிறது. சமீபத்தில் அறிமுகமான எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ மாடலிலும் இந்த சென்சார் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய 200 எம்பி கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி கேமரா சென்சார்கள் தற்போது பிரீமியம் மட்டுமின்றி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.
சாம்சங்கின் 200 எம்பி சென்சார் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது 0.34 மைக்ரான் பிக்சல்களை கொண்டிருக்கும் என்றும் இது 1/1.37 இன்ச் அளவில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சென்சார் அதிகபட்சம் 16K வீடியோ ரெக்கார்டிங், 16-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.






