என் மலர்
தொழில்நுட்பம்
சியோமி நிறுவனம் அசத்தல் அம்சங்கள் நிறைந்த டேப்லெட் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய எம்ஐ பேட் டேப்லெட் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் சமீபத்தில் அறிவித்தார். இதே தகவலை சியோமி நிறுவன இயக்குனர் வாங் டெங் தாமஸ் உறுதிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சியோமி நிறுவனம் மூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட் மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மாடல்கள் நபு, எனுமா மற்றும் எலிஷன் எனும் குறியீட்டு பெயர்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல்கள் MIUI12.5 சிஸ்டம் செயலிகளில் இடம்பெற்று இருக்கின்றன.

சியோமி உயர் ரக டேப்லெட் மாடல்கள் 4ஜி எல்இடி, 5ஜி வசதி, 2560x1600 பிக்சல் WQXGA டிஸ்ப்ளே, அதிகபட்சம் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் 10.97 இன்ச் பேனல் கொண்ட மாடல் 8720 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மூன்று மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் எனுமா மற்றும் எலிஷ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865, 865 பிளஸ் அல்லது 870 பிராசஸர் வழங்கப்படலாம். நபு மாடலில் ஸ்னாப்டிராகன் 855, 855 பிளஸ் அல்லது 860 பிராசஸர் வழங்கப்படலாம்.
கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கென சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த பிராசஸர் வைட்சேப்பல் அல்லது GS101 என அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் GS101 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. GS101 என்பது கூகுள் உருவாக்கும் பிரத்யேக மொபைல் பிராசஸர் ஆகும்.
இது அடுத்த பிக்சல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்டு இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவை ரேவென் மற்றும் ஒரியோல் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் உள்ள பில்ட்-இன் ஏபிஐ அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பத்திற்கான வசதி கொண்டுள்ளது.
ஆப்பிள் ஏர்டேக் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டேக் போன்ற டிராக்கர்ளிலும் இதேபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தையில் இரு முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது சொந்த டிராக்கரை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிவாரண நிதி வழங்க சாம்சங் முடிவு செய்துள்ளது.
தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்தியா கொரோனா தொற்றை எதிர்கொள்ள 50 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. இந்த தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்க சாம்ங் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இதுபற்றிய முடிவுகள் எட்டப்பட்டதாக சாம்சங் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. அறிவிக்கப்பட்ட தொகையில் 30 லட்சம் டாலர்கள் மத்திய அரசு, உத்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
மீதமுள்ள 20 லட்சம் டாலர்களை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவைகளாக வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. இத்துடன் சாம்சங் நிறுவனம் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக ஊழியர்களுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளது.
பப்ஜி மொபைல் இந்தியா வேறு பெயரில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பப்ஜி மொபைல் இந்தியா கேம் பேட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக் அதிகாரப்பூர்வ பக்கம், யூடியூப் சேனல் மற்றும் இந்தியா வலைதளம் உள்ளிட்டவைகளில் இந்த பெயர் இடம்பெற்று இருக்கிறது.

இந்தியாவில் பப்ஜி மொபைல் கேம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்டது முதல் இந்த கேம் மீண்டும் வெளியாகாதா என இதன் ப்ரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில், தற்போது இந்த கேம் ரி-லான்ச் கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வ பக்கம் தவிர பப்ஜி மொபைல் இந்திய பதிப்புக்கான டிரெயிலர் வீடியோவும் வெளியிடப்பட்டது. எனினும், வெளியான சில நிமிடங்களில் இந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஐபோன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை 2023 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐபோன் 8 இன்ச் பிளெக்சிபில் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக மடிக்கக்கூடிய ஐபோன் காப்புரிமை விவரங்கள் பலமுறை இணைத்தில் வெளியாகி இருந்தது.

எனினும், இதுபற்றி ஆப்பிள் எந்த தகவலையும் வழங்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மடிக்கக்கூடிய ஐபோன் 8 இன்ச் QHD+ 1800x3200 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக 15 முதல் 20 லட்சம் மடிக்கக்கூடிய ஐபோன்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மடிக்கக்கூடிய ஐபோனிற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் டிஸ்ப்ளே வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போனின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இரு வேரியண்ட்களின் புது விலை ப்ளிப்கார்ட் தளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி ஒப்போ ஏ53 4ஜிபி+64ஜிபி விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 10,990 என மாறி இருக்கிறது. ஒப்போ ஏ53 6ஜிபி+128ஜிபி மாடல் விலை ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,990 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எலெக்ட்ரிக் பிளாக், பேரி வைட் மற்றும் பேன்சி புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ஏ53 அம்சங்கள்
- 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
- 4ஜிபி, 6 ஜிபி ரேம்
- 64ஜிபி, 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் சென்சார்
- 2 எம்பி மேக்ரோ சென்சார்
- 16 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் இந்தியாவின் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்திலும் இடம்பெற்று இருந்தது.

புது சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M325F/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. தற்போது மாடல் நம்பர் தவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், இது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 3.0, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 4ஜி வேரியண்டில் மட்டும் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் புது வயர்லெஸ் இயர்போன், ஆப்பிள் மியூசிக் சந்தா பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது. இதுபற்றி பல்வேறு விவரங்கள், ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ரென்டருடன் இதன் வெளியீட்டு விவரமும் இடம்பெற்று இருக்கிறது.

புது ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் புதிதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் ஹை பெடிலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த சந்தாவுக்கான கட்டணம் 9.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 750 ஆக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சேவை சமீபத்தில் அறிமுகமான ஸ்பாடிபைக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
ஜூன் மாதத்தில் ஆப்பிள் தனது சர்வதசே டெவலப்பர்கள் நிகழ்வை விர்ச்சுவல் முறையில் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் விரைவில் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிடுகிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை மே 13 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் MIUI 12.5, 64 எம்பி பிரைமரி கேமரா, ஹை-ரெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும்.
முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரெட்மி நோட் 10 மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களை கொண்டிருந்தது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஹீலியோ ஜி95 பிராசஸர், 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருந்தது.

ரெட்மி நோட் 10எஸ் அம்சங்கள்
- 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.45
- பக்கவாட்டில் கைரேகை சென்சார், IR சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.
விவோ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
விவோ x60t ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. விவோ x60, x60 ப்ரோ மற்றும் x60 ப்ரோ பிளஸ் மாடல்களுடன் புது விவோ ஸ்மார்ட்போன் இணைந்துள்ளது.
புதிய விவோ x60 ஸ்மார்ட்போன் V2120A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதில் வழங்கப்பட இருக்கும் பிராசஸர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

மற்ற அம்சங்களை பொருத்தவரை விவோ x60t மாடலில் 6.59 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 1100 5ஜி பிராசஸர், டூயல் சிம் ஸ்லாட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 1.0 வழங்கப்படும் என தெரிகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4300 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வைபை 6, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போதைய தகவல்களின்படி இந்த மாடல் கேலக்ஸி எம்32 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. புது சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-M325F எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

கேலக்ஸி எம்32 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் கேமரா
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கேம்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
சோனி நிறுவனம் தனது பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாதாரர்களுக்கு சில வீடியோ கேம்களை ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் மே 4 முதல் மே 31 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்பட இருக்கும் இலவச கேம்கள் எவை என்பதை சோனி அறிவித்துள்ளது.

அந்த வகையில் Battlefield V, Stranded Deep மற்றும் Wreckfest போன்ற கேம்கள் மே மாதத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றில் Battlefield V மற்றும் Stranded Deep ஆகிய கேம்கள் பிஎஸ்4 மற்றும் பிஎஸ்5 கேம் கன்சோல்களுக்கு வழங்கப்படுகிறது.
மற்றொரு கேமான Wreckfest பிஎஸ்5 கன்சோலுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் பிளஸ் சந்தாவை மாதம் ரூ. 499, மூன்று மாதங்களுக்கு ரூ. 1,199 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ. 2,999 கட்டணத்தில் வழங்கி வருகிறது.






