என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் SM-A526B/DS எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்துடன் கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய தளத்தில் இடம்பெற்று இருப்பதை ஒட்டி விரைவில் இது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் வைலட் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 429 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 38 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி அம்சங்கள்
சர்வதேச சந்தையில் அறிமுகமாகி இருக்கும் கேலக்ஸி ஏ52 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ சென்சார், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி j18s மற்றும் K8 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களும் இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா கொண்ட முதல் சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சியோமி j18s அம்சங்கள் வெய்போ தளத்தில் வெளியாகி உள்ளது. புதிய j18s சியோமி நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

முன்னதாக சியோமி வெளியிட்ட எம்ஐ மிக்ஸ் போல்டு மடிக்கக்கூடிய மாடலில் வெளிப்புறம் 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், உள்புறம் 60 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டது. எனினும், புதிய மாடலில் இரு ஸ்கிரீன்களும் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, லிக்விட் லென்ஸ், 3x ஆப்டிக்கல் ஜூம், அல்ட்ரா சென்சார், இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் முதல் விற்பனை சமீபத்தில் நடைபெற்றது.
சியோமி எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புடன் பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வித்தியாச வடிவமைப்பு, தலைசிறந்த அம்சங்கள், அதிக விலை கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை நடைபெற்றது.

முதல் விற்பனையில் எம்ஐ 11 அல்ட்ரா விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிக விலை கொண்டிருந்த போதும், விற்று தீர்ந்ததற்கான காரணம் அறியப்படவில்லை. எம்ஐ 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9 ப்ரோ, கேலக்ஸி எஸ்21 சீரிஸ், ஐபோன் 12 சீரிஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் விற்பனைக்கு வருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல்களில் கேலக்ஸி ப்ளிப் மாடல்கள் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 துவக்க விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 73 ஆயிரம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும். தற்போது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விலை மட்டுமின்றி கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலுடன் கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மி பிராண்டு சத்தமின்றி உருவாக்கி வரும் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் தனது ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. ரெட்மி பிளாக்ஷிப் மாடல்கள் LCD டிஸ்ப்ளேவுடன் வெளியாகாது என்ற காரணத்தால் தான் ரெட்மி மால்களில் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இதே தகவலை சியோமி நிறுவன துணை தலைவர் லியூ வெய்பிங் மற்றும் ரெட்மி பொது மேலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்ட ரெட்மி போன் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்குமா? என வெய்போவில் பயனர் எழுப்பிய கேள்விக்கு சியோமி சார்பில் இல்லை என பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரெட்மி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் AMOLED ஸ்கிரீன் கொண்டிருக்கும் என உறுதியாகி இருக்கிறது. இதே நிலை ரெட்மியின் மற்ற மாடல்களுக்கும் பொருந்துமா என்ற கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போன் ஏ82 5ஜி எனும் பெயரில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் கொரிய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஏ82 5ஜி எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புது ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
விளம்பர வீடியோவில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இது நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது. இது கேலக்ஸி ஏ72 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புது கேலக்ஸி ஏ82 5ஜி சேர்த்து சாம்சங் நான்கு ஏ சீரிஸ் 5ஜி மாடல்களை கொண்டிருக்கும்.
Samsung Galaxy A82 5G, the worst kept Samsung A-series secret pic.twitter.com/14y3Yei6nk
— Max Weinbach (@MaxWinebach) May 5, 2021
கேலக்ஸி ஏ82 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ82 5ஜி மாடலில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, QHD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், ஒன் யுஐ 3.0 வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ சென்சார், 10 எம்பி செல்பி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் சார்ஜிங் வழங்கப்படலாம். மேலும் ஸ்டீயிரோ ஸ்பீக்கர்கள், கைரேகை சென்சார், 5ஜி கனெக்டிவிட்டி, யுஎஸ்பி டைப் சி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் அவ்வப்போது புது அம்சங்களை வழங்கி வருகிறது.
முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது முதல், ஒன்பிளஸ் நிறுவனம் மெல்ல புது அம்சங்களை அதில் வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் புது அப்டேட் ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

புது அப்டேட் வழங்கும் அம்சங்கள் :
- ஆட் ஆல்வேஸ் - ஆன் டிஸ்ப்ளே டையல்
- ரிமோட் கண்ட்ரோல் கேமரா வசதி
- ஆட் மாரத்தான வொர்க்-அவுட்
- சிஸ்டம் யுஐ மேம்படுத்தல்கள்
- பிழை திருத்தங்கள்
ஒன்பிளஸ் வாட்ச் மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் என்றாலும், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே பயன்படுத்தும் போது பேட்டரி விரைவில் தீர்ந்து போகும். இந்த அம்சம் பயன்படுத்தினால் பேட்டரி பேக்கப் அளவு தற்போது இருப்பதை விட பாதியாக குறைந்துவிடும்.
புது அப்டேட் இன்ஸ்டால் செய்ய ஒன்பிளஸ் ஹெல்த் ஆப் பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்யும் முன் வாட்ச் குறைந்த பட்சம் 40 சதவீத பேட்டரி கொண்டிருக்க வேண்டும்.
சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய சந்தையில் வெற்றிகர மாடலாக அமைந்துள்ளது. இதுதவிர ரெட்மி நோட் 10 சீரிசில் மேலும் சில புது மாடல்கள் அறிமுகம் செய்ய சியோமி திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 5ஜி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாக இருக்கிறது. புது ரெட்மி ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரெட்மி டீசர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
டீசரின்படி புது ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாடலில் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 750G 5ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி கனெக்டிவிட்டியுடன் வெளியாகும் பட்சத்தில் புது மாடல் இந்திய சந்தையில் குறைந்த விலை 5ஜி மாடலாக இருக்கும்.
அசுஸ் நிறுவனத்தின் புது சென்போன் 8 மினி பன்ச் ஹோல் கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அசுஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மூன்று மாடல்கள் இந்திய வெளியீடு கேள்விக்குறியாகவே இருந்தது.
இந்த நிலையில், அசுஸ் சென்போன் 8 மினி பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய அசுஸ் சென்போன் 8 மினி ASUS_1006D எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

அம்சங்களை பொருத்தவரை புது சென்போன் 8 மினி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், செவ்வக கேமரா மாட்யூல், முன்புறம் பன்ச் ஹோல் கேமரா கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.
இத்துடன் 5.92 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஐபோன் 13 சீரிஸ் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரென்டர் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. வீடியோவில் புது ஐபோன் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.
வீடியோவின் படி ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சிறிய நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இயர்பீஸ் டாப் பெசல் பகுதியில் மாற்றப்பட்டதால் பெசல் சிறியதாகி இருக்கிறது. பேஸ் ஐடி அம்சத்திற்கான சென்சார்கள் சிறு நாட்ச் இருக்கும் பகுதியிலேயே பொருத்தப்படுகிறது.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ரென்டர் மாடல் கிராபைட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள ஆன்டெனா பேண்ட் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் இருப்பதை விட வித்தியாசமாக இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 ப்ரோ மாடல்களில் LTPO 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி வசதி, மேம்பட்ட கேமரா, அல்ட்ரா வைடு லென்ஸ், பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
கூகுள் நிறுவனம் தனது 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூகுள் I/O 2021 டெவலப்பர்கள் நிகழ்வில் புதிய பிக்சல் பட்ஸ் ஏ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது இயர்பட்ஸ் பற்றிய விவரங்கள் கூகுள் வலைதளம் மற்றும் ட்விட்டரில் தவறுதலாக இடம்பெற்று பின், அவசர அவசரமாக நீக்கப்பட்டு இருக்கிறது.
புது இயர்பட்ஸ் கூகுள் நிறுவனத்தின் பாஸ்ட் ப்ளூடூத் பேரிங் அனுபவத்தை வழங்கும் என தெரியவந்துள்ளது. இந்த அம்சம் 2018 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதே அம்சம் புதிய பிட்பிட் லூக்ஸ் சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 6 மற்றும் அதற்கும் பின் வெளியான மாடல்களுடன் இணைந்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
தற்போதைய தகவல்களில் இந்த இயர்பட்ஸ் லைட் கிரே நிறம் மற்றும் வைட் நிற கேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர புது இயர்பட்ஸ் பாரஸ்ட் கிரீன் நிறத்திலும் கிடைக்கும் என ஏற்கனவே வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சாம்சங் நிறுவனம் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக அறிவித்தது.
சாம்சங் நிறுவனம் 2017 ஆண்டு தனது கேலக்ஸி எஸ்8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. முற்றிலும் புது டிசைன், மெல்லிய பெசல்கள், உயர் ரக அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்8 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. சந்தையில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில், சாம்சங் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மென்பொருள் அப்டேட்டை நிறுத்தி இருக்கிறது.

சாம்சங் தனது பிளாக்ஷிப் மற்றும் மிட்-ரேன்ஜ் மாடல்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே மென்பொருள் அப்டேட் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மூன்று ஒஎஸ் அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்தது.
எனினும், கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்களுக்கு இரண்டு ஒஎஸ் அப்டேட் மட்டுமே கிடைத்தது. அறிமுகமாகும் போதே கேலக்ஸி எஸ்8 சீரிஸ் மாடல்கள் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருந்தது. இது 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, வளைந்த எட்ஜ்களை கொண்டிருந்தது.






