search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசுஸ் சென்போன் 8
    X
    அசுஸ் சென்போன் 8

    அசுஸ் சென்போன் 8 மினி இந்திய வெளியீட்டு விவரம்

    அசுஸ் நிறுவனத்தின் புது சென்போன் 8 மினி பன்ச் ஹோல் கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


    அசுஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மூன்று மாடல்கள் இந்திய வெளியீடு கேள்விக்குறியாகவே இருந்தது.

    இந்த நிலையில், அசுஸ் சென்போன் 8 மினி பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய அசுஸ் சென்போன் 8 மினி ASUS_1006D எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. 

     அசுஸ் சென்போன் 8

    அம்சங்களை பொருத்தவரை புது சென்போன் 8 மினி டூயல் பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், செவ்வக கேமரா மாட்யூல், முன்புறம் பன்ச் ஹோல் கேமரா கட்-அவுட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்திலும், கீழ்புறத்தில் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 5.92 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருக்கிறது.
    Next Story
    ×