search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பிக்சல் ஸ்மார்ட்போன்
    X
    பிக்சல் ஸ்மார்ட்போன்

    அசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்

    கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கென சொந்த பிராசஸர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த பிராசஸர் வைட்சேப்பல் அல்லது GS101 என அழைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் GS101 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. GS101 என்பது கூகுள் உருவாக்கும் பிரத்யேக மொபைல் பிராசஸர் ஆகும்.

     பிக்சல் ஸ்மார்ட்போன்

    இது அடுத்த பிக்சல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கிறது. இந்த பிராசஸர் கொண்டு இரண்டு ஸ்மார்ட்போன்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவை ரேவென் மற்றும் ஒரியோல் என அழைக்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 12 தளத்தில் உள்ள பில்ட்-இன் ஏபிஐ அல்ட்ரா-வைடு-பேண்ட் தொழில்நுட்பத்திற்கான வசதி கொண்டுள்ளது.

    ஆப்பிள் ஏர்டேக் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டேக் போன்ற டிராக்கர்ளிலும் இதேபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சந்தையில் இரு முன்னணி நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது சொந்த டிராக்கரை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    Next Story
    ×