என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஏர்பாட்ஸ்
    X
    ஏர்பாட்ஸ்

    புது ஏர்பாட்ஸ் 3 விரைவில் வெளியாகும் என தகவல்

    ஆப்பிள் நிறுவனம் புது வயர்லெஸ் இயர்போன், ஆப்பிள் மியூசிக் சந்தா பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகிறது. இதுபற்றி பல்வேறு விவரங்கள், ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ரென்டருடன் இதன் வெளியீட்டு விவரமும் இடம்பெற்று இருக்கிறது.

     ஏர்பாட்ஸ்

    புது ஏர்பாட்ஸ் மட்டுமின்றி ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் புதிதாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் ஹை பெடிலிட்டி ஆடியோ அனுபவத்தை வழங்கும் ஆப்பிள் மியூசிக் சந்தா முறையும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    இந்த சந்தாவுக்கான கட்டணம் 9.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 750 ஆக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த சேவை சமீபத்தில் அறிமுகமான ஸ்பாடிபைக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. 

    ஜூன் மாதத்தில் ஆப்பிள் தனது சர்வதசே டெவலப்பர்கள் நிகழ்வை விர்ச்சுவல் முறையில் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×