என் மலர்
தொழில்நுட்பம்
ஆன்லைனில் நடைபெற்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையின் போது ஐபோன்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஐபோன்கள் விற்பனை சீனாவில் அதிகரித்து வருகிறது. சீனாவில் நடைபெற்ற 618 விற்பனையின் இறுதி நாள் விற்பனை இதனை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து jd.com வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ரூ. 114 கோடி மதிப்பிலான ஐபோன்கள் அந்நிறுவன வலைதளத்தில் ஒரே நொடியில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவன மாடல்களும் அதிகளவு விற்பனையானது. எனினும், ஆப்பிள் நிறுவனம் ஒட்டுமொத்த விற்பனையில் முதலிடம் பிடித்து உள்ளது.

ஹயர், மிடி மற்றும் கிரீ போன்ற நிறுவனங்களும் ரூ. 114 கோடி மதிப்பிலான விற்பனையை பெற்று இருக்கிறது. சீமென்ஸ் மற்றும் சியோமி நிறுவனங்கள் இதே அளவு விற்பனையை மூன்று நிமிடங்களில் பெற்று இருக்கின்றன. வருடாந்திர அடிப்படையில் சாம்சங் நிறுவன விற்பனை 200 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
முதல் 15 நிமிடங்கள் விற்பனையில் ரியல்மி மற்றும் ஐகூ வருவாய் வருடாந்திர அடிப்படையில் ஆறு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்களின் விற்பனை முதல் பத்தே நிமிடங்களில் 260 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களை எல்ஜி ஸ்டோர் மூலம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து எல்ஜி நிறுவனம் விலகிவிட்டது. தென் கொரியாவில் எல்ஜி நிறுவனம் சுமார் 400-க்கும் அதிக எல்ஜி பெஸ்ட் ஷாப் விற்பனை மையங்களை கொண்டுள்ளது. இங்கு எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகியதால் இந்த விற்பனை மையங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன.
இந்த நிலையில், விற்பனை மையங்களை பயன்படுத்த எல்ஜி மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதன்படி எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன்கள் விற்பனை செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டம் தென் கொரியாவில் மட்டுமே செயல்படுத்தப்பட இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எள்ஜி பெஸ்ட் ஷாப்கள் இருப்பதால், ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை இவற்றை கொண்டு அதிகபடுத்த முடியும். ஜூலை மாத இறுதி வரை தென் கொரியாவில் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எல்ஜி ஸ்டோர்களில் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச், ஐபேட் மற்றும் இதர அக்சஸரீக்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியின் ரீல்ஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க துவங்கி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் செயலியின் ரீல்ஸ் அம்சத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கான சோதனையை அந்நிறுவனம் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்த சோதனை தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் நடைபெற்று வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியில் உங்களை பாளோ செய்யாதவர்களையும் விளம்பரம் மூலம் சென்றடைய முடியும்.

இதனால் அதிக பாளோவர்கள் இல்லாத சிறு வியாபாரங்கள், பிராண்டுகள் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். பிராண்டுகள் மற்றும் க்ரியேட்டர்கள் முன்பை விட அதிக பிரபலமாக ரீல்ஸ் விளம்பரங்கள் பெரும் உதவியாக இருக்கும்.
விளம்பரங்கள் வழக்கமான ரீலஸ் போஸ்ட்களை போன்றே புல் ஸ்கிரீன் மற்றும் செங்குத்தாக தோன்றும். ஏற்கனவே ஸ்டோரிக்களில் வரும் விளம்பரங்களை போன்று இவை ரீல்ஸ்களின் இடையே வரும். அதிகபட்சமாக 30 நொடிகள் வரை ரீல்ஸ் விளம்பரங்களை பதிவிட முடியும். ரீல்ஸ் பகுதியில் வரும் விளம்பரங்களுக்கு மற்ற பயனர்கள் லைக், கமென்ட், சேவ் மற்றும் ஷேர் செய்யலாம்.
சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா XR A80J OLED 4K டிவி காக்னிடிவ் பிராசஸர் XR கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிரேவியா XR A80J OLED 4K டிவியை அறிமுகம் செய்தது. 65-இன்ச் அளவில் கிடைக்கும் புதிய சோனி ஸ்மார்ட் டிவி காக்னிடிவ் பிராசஸர் XR கொண்டிருக்கிறது. இது sound-from-picture ரியாலிட்டி வசதி கொண்டுள்ளது. இது சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இத்துடன் பிரத்யேக கேம் மோட் உள்ளது. இது HDMI 2.0, 4K 120fps வீடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் XR OLED contrast, XR டிரைலுமினஸ் ப்ரோ மற்றும் XR மோஷன் கிளாரிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. புதிய பிரேவியா டிவி டால்பி விஷன், டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
சோனி பிரேவியா XR A80J OLED டிவி XR-65A80J எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் 65-இன்ச் மாடல் விலை ரூ. 2,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இதே சீரிசில் 77-இன்ச் மற்றும் 55-இன்ச் மாடல்களை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ட்ரிம்மர் மற்றும் லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் நடைபெற்ற சமீபத்திய #AskMadhav பேட்டியில் ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ரியல்மி ஜிடி 5ஜி தீபாவளிக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். இத்துடன் ரியல்மி ட்ரிம்மர் மற்றும் லேப்டாப்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக ரியல்மி லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என மாதவ் சேத் தெரிவித்தார். எனினும், சரியான வெளியீட்டு தேதியை அவர் தெரிவிக்கவில்லை. இத்துடன் நார்சோ தனி பிராண்டாக மாறாது என்றும் அவர் தெரிவித்தார். ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் மில்கி வே வெர்ஷன் ஜூன் 24 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது கேலக்ஸி இசட் போல்டு 2 ஸ்மார்ட்போனின் விற்பனை அமெரிக்காவில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்னும் சில வாரங்களில் புதிய கேலக்ஸி இசட் போல்டு 3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டும் கேலக்ஸி போல்டு 2 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக கேலக்ஸி இசட் போல்டு விற்பனை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் கேலக்ஸி இசட் போல்டு 2 பல்வேறு நெட்வொர்க் வேரியண்ட்களும் விற்று தீர்ந்ததாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சில வலைதளங்களில் மட்டும் கேலக்ஸி இசட் போல்டு 2 கிடைக்கிறது. இந்த தளங்களிலும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே விற்று முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கலாம். முந்தைய தகவல்களில் சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை 50 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட்ட வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.

புதிய ஏர்டெல் ரூ. 456 பிரீபெயிட் சலுகை சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த ரூ. 447 சலுகைக்கு போட்டியாக அமைகிறது. ஜியோ ரூ. 447 சலுகையிலும் ஏர்டெல் தற்போது வழங்கும் பலன்களே வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 456 சலுகையுடன் முதல்முறை பாஸ்டேக் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ. 100 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏர்டெல் புது சலுகையில் கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் விண்க் மியூசிக் போன்ற சேவைகளுக்கான சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புது ஏர்டெல் சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளிலும் கிடைக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புது நோக்கியா ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி30 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. பின் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளத்தில் இடம்பெற்றன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

நோக்கியா சி30 ஸ்மார்ட்போனிற்கு FCC சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் TA-1357 எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5850 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 சீரிஸ் அல்லது அதற்கு இணையான திறன் கொண்ட மீடியாடெக் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ/டெப்த்/மோனோகுரோம் சென்சார் வழங்ககப்படலாம்.
விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போன் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. முன்னதாக இதன் 4ஜி வேரியண்ட் ஏப்ரல் மாத வாக்கில் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வேரியண்ட் பின்புறம் கிரேடியன்ட் டிசைன், டூயல் பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது.

முன்னதாக இதன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11.1, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
ஜூன் 24-இல் அறிமுகமாகும் ரியல்மி சாதனங்கள் பற்றிய புது டீசர்கள் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், இதே நிகழ்வில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார்.
Calling out all the Young Players to #UnleashPeakPerformance!
— Madhav Max 5G (@MadhavSheth1) June 17, 2021
Be ready as we launch #realmeNarzo30 and #realmeNarzo305G on 24th June! pic.twitter.com/eQtGrppn5X
புது சாதனங்கள் அறிமுக நிகழ்வை ரியல்மி ஜூன் 24 ஆம்தேதி நடத்துகிறது. புதிய ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி மட்டுமின்றி பல்வேறு இதர சாதனங்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது. அதன்படி ரியல்மி பட்ஸ் கியூ2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
Get ready as we elevate your TV experience and bring #RichPictureRichSound with the 80cm #realmeSmartTVFHD.
— Madhav Max 5G (@MadhavSheth1) June 17, 2021
Launching at 12:30PM IST, 24th June. pic.twitter.com/Z6fbUCGimr
சர்வதேச சந்தையில் ரியல்மி புதிதாக ரியல்மி புக் லேப்டாப் மற்றும் ரியல்மி பேட் டேப்லெட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு சாதனங்களுக்கான டீசர் மட்டும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ22 மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதவிர புதிய கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புது ஸ்மார்ட்போன் SM-E225F/DS எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. இந்த தளத்தில் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் S AMOLED +90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 13 எம்பி செல்பி கேமரா, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி, 2 எம்பி மற்றும் 2 எம்பி என குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்த ஜான் தாம்ப்சன் தற்போது இயக்குனராக பொறுப்பேற்று இருக்கிறார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா தற்போது அந்நிறுவனத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்று இருக்கிறார். தலைவராக இருந்துவந்த ஜான் தாம்ப்சன் மூத்த இயக்குனராக பதவி ஏற்கிறார்.
2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.

தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.
பதவி உயர்வு மட்டுமன்றி, மைக்ரோசாப்ட் தலைவராக பொறுப்பேற்கும் மூன்றாவது நபர் என்ற பெருமையை சத்ய நாதெல்லா பெற்று இருக்கிறார். முன்னதாக மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஜான் தாம்ப்சன் மட்டுமே இந்நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து பில் கேட்ஸ் விலகியதை தொடர்ந்து முதல் முறையாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பணி மாற்றம் நடைபெற்று இருக்கிறது. நிர்வாக குழுவில் இருந்து விலகிய பில் கேட்ஸ் தொண்டு பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.






