என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை. இது செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.  

    4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
    ரியல்மி நிறுவனம் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்த C25s ஸ்மார்ட்போனின் இந்திய விலை திடீரென மாற்றப்பட்டது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய C25s ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C25 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் இதன் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     ரியல்மி C25s

    விலை உயர்வின் படி ரியல்மி C25s 4ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 500 அதிகம் ஆகும். உயர்த்தப்பட்ட புது விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி C25s மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் சார்ந்த ரியல்மி யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    லெனோவோ நிறுவனம் தனது மடிக்கக்கூடிய தின்க்பேட் எக்ஸ்1 லேப்டாப் மாடலை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலை லெனோவோ இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. லெனோவோ தின்க்பேட் எக்ஸ்1 விலை ரூ. 3,29,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     லெனோவோ தின்க்பேட் எக்ஸ்1

    புதிய தின்க்பேட் எக்ஸ்1 மடிக்கக்கூடிய லேப்டாப் லெனோவோ நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது. தின்க்பேட் எக்ஸ்1 விண்டோஸ் 10 ப்ரோ ஒஎஸ் கொண்டுள்ளது. இது மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட முதல் விண்டோஸ் சாதனம் ஆகும்.

    இதில் 13.3 இன்ச் 2K ரெசல்யூஷன் OLED டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், 11th Gen இன்டெல் UHD கிராபிக்ஸ், 8 ஜிபி ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ், 50Wh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 10.4 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.
    இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட இன்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்துள்ளது.

    இந்தியாவில் 5ஜி நெட்வொர்கிங் தொழில்நுட்பத்தை உருவாக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக இன்டெல் அறிவித்து இருக்கிறது. இன்டெல் 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் உருவாக்க ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

     ரிலையன்ஸ் ஜியோ

    5ஜி தொழில்நுட்பங்களை பெற மற்ற நிறுவனங்களை சார்ந்து இருக்கும் வழிமுறையை ரிலையன்ஸ் ஜியோ பின்பற்றவில்லை. மாறாக தனக்கென சொந்தமாக 5ஜி நெட்வொர்க் உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற முறையை உலகின் பல்வேறு இதர டெலிகாம் நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.

    இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒன்றாக அமைய இருக்கிறது. இதனை சாத்தியப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ ஈடு இணையற்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறது என இன்டெல் நிறுவனத்தின் டேட்டா தளங்களுக்கான பொது மேலாளர் மற்றும் துணை தலைவர் நவீன் ஷெனாய் தெரிவித்தார். 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் பிரிவில் க்ரோம் ஒஎஸ் கொண்ட லேப்டாப் ஆகும். இது வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    அம்சங்களை பொருத்தவரை புதிய கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலில் 14 இன்ச் TFT LCD ஸ்கிரீன், இன்டெல் செலரான் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 42.3Wh பேட்டரி மற்றும் 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ

    சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ அம்சங்கள்

    - 14 இன்ச் 1366x768 பிக்சல் HD TFT (16:9) டிஸ்ப்ளே
    - இன்டெல் செலரான் N4500 பிராசஸர்
    - இன்டெல் UHD கிராபிக்ஸ்
    - 4 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி /128 ஜிபி eMMC மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - க்ரோம் ஒஎஸ்
    - 720 பிக்சல் HD கேமரா
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்ககள், 3.5mm ஹெட்போன் ஜாக்
    - 4ஜி LTE, வைபை , 2×2 MIMO, ப்ளூடூத் v5.1
    - 2 x யுஎஸ்பி டைப் சி, 1 x யுஎஸ்பி 3.2, நானோ செக்யூரிட்டி ஸ்லாட்
    - 42.3Wh பேட்டரி
    - 45W யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் 

    சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் கோ சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் வசதி கொண்டுள்ளது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.55 இன்ச் AMOLED டாட் டிஸ்ப்ளே, HDR10, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய எம்ஐ 11 லைட் மாடல் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் வசதி கொண்டிருக்கிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

     சியோமி எம்ஐ 11 லைட்

    சியோமி எம்ஐ 11 லைட் அம்சங்கள்

    - 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
    - அட்ரினோ 618 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம்
    - 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ 
    - வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
    - யுஎஸ்பி டைப் சி
    - 4250 எம்ஏஹெச் பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சியோமி எம்ஐ 11 லைட் மாடல் டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  
    சியோமி நிறுவனத்தின் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    சியோமி நிறுவனம் தனது எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலின் விலையை குறைத்து இருக்கிறது. இந்தியாவில் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எம்ஐ வாட்ச் ரிவால்வ் பின் ரூ. 10,999 விலையில் விற்கப்பட்டது. பின் சலுகை விற்பனையில் ரூ. 8,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

     சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ்

    தற்போது முதல் முறையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை குறைப்பு காரணமாக எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடலில் மேம்பட்ட GPS, அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், SpO2 மாணிட்டரிங், அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், FISRTBEAT ஸ்போர்ட் அனாலடிக்ஸ் வசதி, GPS, 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரி அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80, 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி எம்32 மாடலில் 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, நாக்ஸ் செக்யூரிட்டி, சாம்சங் பே மினி, செக்யூர் போல்டர், ஆல்ட் இசட் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

     சாம்சங் கேலக்ஸி எம்32

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன.

    சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல் பிளாக் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம், சில்லறை விற்பனை மையங்களில் ஜூன் 28 ஆம் தேதி துவங்குகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் செய்தி பிரிவு உருவாக்கிய அறிக்கை புகைப்படங்களாக இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒப்போவுடன் இணைக்கப்பட இருப்பதாக இம்மாத துவக்கத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், இரு நிறுவனங்கள் இணைப்பு எப்படி இருக்கும் என அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஒன்பிளஸ் மாறும் என கூறப்படுகிறது.



    இதுபற்றிய விவரங்களை ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநரான எவான் பிளாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். ட்விட்டர் பதிவில் ஒன்பிளஸ் செய்தி பிரிவு அறிக்கையின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி இரு நிறுவனங்கள் இணைப்புக்கு பின் ஒப்போ நிறுவனத்தின் அங்கமாக ஒன்பிளஸ் மாறும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இரு நிறுவனங்கள் இணைந்த பின், அதிக ஊழியர்கள் எண்ணிக்கையுடன் மேலும் சிறப்பான பொருட்களை உருவாக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் தளத்தில் ஏற்பட்டு இருக்கும் புதிய பிழை வைபை பயன்பாட்டில் இடையூறு ஏற்படுத்துகிறது.

    ஐஒஎஸ் தளத்தில் புது பிழை கண்டறியப்பட்டு இருக்கிறது. இது ஐபோன்களின் வைபை வசதியை செயலிழக்க செய்கிறது. இந்த பிழையை ரிவர்ஸ் என்ஜினியர் கால் ஷௌ கண்டறிந்து தெரிவித்தார். 

    புதிய பிழை  SSID %p%s%s%s%s%n எனும் பெயர் கொண்ட வைபையுடன் இணைய முயற்சிக்கும் போது ஏற்படுகிறது. இது உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் லட்சக்கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கிறது. இந்த பிழை தூண்டப்படும் போது ஐபோன் பயனர்களால் வைபை வசதியை ஆன் செய்ய முடியாது. ஐபோனினை ரீ-ஸ்டார்ட் செய்தாலும் இந்த பிழை சரியாகாது.

     ஐஒஎஸ் 14.1

    இந்த பிழை குறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதனை சரி செய்ய ஐபோனின் நெட்வொர்க் செட்டிங்கை ரீசெட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஐபோனில் சேமிக்கப்பட்டு இருந்த வைபை பாஸ்வேர்டுகள் அழிக்கப்பட்டு விடும்.

    ஐபோனில் வைபை நெட்வொர்க் செட்டிங்களை ரீசெட் செய்ய  Settings > General > Reset > Reset Network Settings போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இது குறுகியகால தீர்வு ஆகும். இவ்வாறு செய்யும் போது ஐபோன் பலமுறை பாதிக்கப்படும்.
    சியோமி நிறுவனத்தின் புது எம்ஐ மிக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான எம்ஐ மிக்ஸ் போல்டு கொண்டு தனது எம்ஐ மிக்ஸ் சீரிசை அப்டேட் செய்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எம்ஐ மிக்ஸ் 4 மூலம் இந்த சீரிசை மீண்டும் மேம்படுத்த சியோமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய எம்ஐ மிக்ஸ் 4 விரைவில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகிறது. இது சியோமி நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். முந்தைய எம்ஐ மிக்ஸ் மாடல்களை போன்றே இந்த ஸ்மார்ட்போனும் எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

     சியோமி எம்ஐ மிக்ஸ் 3

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது இன் டிஸ்ப்ளே கேமராவுடன் வெளியாகும் சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த மாடலில் குவாட் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீனுக்கு மாற்றாக புல் ஹெச்டி பிளஸ் ரெசல்யூஷன் வழங்கப்படும்.

    எம்ஐ மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங், 108 எம்பி பிரைமரி கேமரா, எம்ஐ12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். 
    ரியல்மி நிறுவனத்தின் புதிய நார்சோ 30 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை குறித்த புது அப்டேட் வெளியாகி உள்ளது.

    ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் மைக்ரோசைட் ஒன்று ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களும் ஜூன் 24 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

     ரியல்மி நார்சோ 30 5ஜி

    முன்னதாக ரியல்மி நார்சோ 30 மாடல் மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 5ஜி வேரியண்ட் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமானது. அந்த வரிசையில் இரு மாடல்களும் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    ரியல்மி நார்சோ 30 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி  700 5ஜி பிராசஸர், புல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி டெரிடரி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 
    ×