என் மலர்
தொழில்நுட்பம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை ஆகும்.
ஜியோ ரூ. 3499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை அந்நிறுவன வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.

இதில் பயனர்களுக்கு 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. எனினும், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற ஒடிடி தளங்களுக்கான சந்தா எதுவும் இந்த சலுகையில் வழங்கப்படவில்லை.
விவோ நிறுவனம் Y51A ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் Y51A ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. விவோ Y51A மாடலில் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது 8 ஜிபி + 128 ஜிபி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 17,990 ஆகும்.
தற்போது விவோ Y51A 6 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 16,990 ஆகும். புது மெமரி ஆப்ஷன் தவிர மற்ற அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

விவோ Y51A அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 6 ஜிபி , 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இன்பினிக்ஸ் நிறுவனம் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பத்தை இன்பினிக்ஸ் தனது கான்செப்ட் போன் 2021 மாடலில் வழங்கி இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
Tested. Refined. Perfected. This is how we roll at Infinix. 🚀#Infinix#InfinixConceptPhonepic.twitter.com/WVJMzXOKsH
— Infinix Mobile (@Infinix_Mobile) June 28, 2021
புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இயக்கும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 40 டிகிரியை கடக்கவில்லை என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வெப்ப அளவை கணக்கிட 20 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகளின் போது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 37.3 டிகிரியாகவே இருந்தது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 88ºC வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் பட்டன்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இதில் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிடும் திட்டம் பற்றி ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் பதில் அளித்துள்ளார்.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 15,999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கு ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் பதில் அளித்துள்ளார்.
``இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிடும் திட்டம் உள்ளது. `புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான ஆரம்பகால பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது," என மாதவ் சேத் தெரிவித்தார்.

5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், அம்சங்கள், வெளியீட்டு விவரம் என எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்போது ரியல்மி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக ரியல்மி 8 5ஜி இருக்கிறது. இந்தியாவில் ரியல்மி 8 5ஜி மாடல் விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2104K10I எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட்போன் போக்கோ F3 GT மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், விரைவில் இது அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

முன்னதாக M2104K10C எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரெட்மி கே40 கேமிங் எடிஷன் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போனே இந்திய சந்தையில் போக்கோ F3 GT பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12.5, 16 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது இயர்பட்ஸ் மாடலை ப்ளிப்கார்ட் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்க இருக்கிறது.

சுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்தார். புது இயர்போன் டிசைன் இதுவரை அறிமுகமாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.
சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் இயர் 1 இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக லண்டனில் இயர்பட்ஸ்-ஐ விற்பனை செய்ய நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்-டெக் மற்றும் செல்-ப்ரிட்ஜஸ் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் C11 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ மினி டிராப் டிஸ்ப்ளே, யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, ஜியோமெட்ரிக் டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி C11 2021 அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டாகோர் யுனிசாக் SC9863A பிராசஸர், IMG8322 GPU
- 2 ஜிபி LPDDR4x ரேம்
- 32 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யு.ஐ. கோ எடிஷன்
- 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, LED பிளாஷ்
- 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ரியல்மி C11 2021 ஸ்மார்ட்போன் கூல் புளூ மற்றும் கூல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுக சலுகையாக ரூ. 6,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டது.
சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அறிமுகமான சில மாதங்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதன் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,999 என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 11,999 விலையில் அறிமுகமாகி பின் ரூ. 12,499 என மாற்றப்பட்டது.
ரெட்மி நோட் 10 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என மாறி இருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 10 இரு வேரியண்ட்களின் விலையும் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது. உயர்த்தப்பட்ட புதிய விலை எம்ஐ மற்றும் அமேசான் வலைதளங்களில் மாற்றப்பட்டுவிட்டது. விரைவில் ஆப்லைன் ஸ்டோர்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய V21e 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 32 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் விவோ V21e 5ஜி இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ V21e 5ஜி மாடல் டார்க் பியல் மற்றும் சன்செட் ஜாஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 24,990 ஆகும்.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. நார்சோ 30 மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

நார்சோ 30 5ஜி மாடலில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் LCD ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், ஆண்ட்ராய்டு 11, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 30 5ஜி மாடலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
ரியல்மி நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி மாடல்கள் ரேசிங் புளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. நார்சோ 30 மாடலின் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நார்சோ 30 5ஜி விலை ரூ. 15,999 ஆகும்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய புல் ஹெச்டி 32 இன்ச் ஸ்மார்ட் டிவி பில்ட்-இன் க்ரோம்காஸ்ட் வசதி கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்மார்ட் டிவி 32 இன்ச் புல் ஹெச்டி மாடல் ஆகும். இதில் ரியல்மியின் பிரத்யேக க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ மற்றும் இதர செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 24 வாட் குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதிகள் உள்ளன.

ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் அம்சங்கள்
- 32 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- க்ரோமா பூஸ்ட் பிக்சர் என்ஜின்
- 7 டிஸ்ப்ளே மோட்கள்
- 1.1GHz குவாட்கோர் கார்டெக்ஸ் A53 மீடியாடெக் பிராசஸர்
- மாலி-470 MP3 GPU
- 1 ஜிபி 2133MHz ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0
- பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், நெட்ப்ளிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, லைவ் சேனல்
- வைபை 802.11 b/g/n (2.4GHz), ப்ளூடூத் 5.0, 3 x HDMI, 2 x யுஎஸ்பி
- SPDIF, DVB-T2, ஈத்தர்நெட்
- 24W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ
ரியல்மி ஸ்மார்ட் டிவி புல் ஹெச்டி 32 இன்ச் மாடல் விலை ரூ. 18,999 ஆகும். இது ஜூன் 29 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
குறைந்த விலையில் கொரோனாவைரஸ் தொற்று உள்ளதா என கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்மார்ட்போன் திரையில் இருந்த ஸ்வாப்களை ஆய்வுகளில் பயன்படுத்தினர். ஆய்வில் பிசிஆர் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டபவர்களின் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்வாப்களை சோதனை செய்தனர். இரு சோதனைகளிலும் தொற்று உறுதியாகி இருந்தது.

போன் ஸ்கிரீன் டெஸ்டிங் (PoST) என அழைக்கப்படும் புது வழிமுறையை கொண்டு கொரோனாவைரஸ் தொற்றை 81 முதல் 100 சதவீதம் வரை சரியாக கண்டறிய முடிகிறது. வழக்கமான பிசிஆர் சோதனையை விட இந்த சோதனைக்கான செலவு குறைவு தான். குறைந்த விலை மட்டுமின்றி சோதனையில் தற்போது இருக்கும் அசவுகரியத்தை தவிர்க்க இந்த சோதனை வழி செய்கிறது.
இந்த சோதனையில் ஒரே நிமிடத்தில் மாதிரியை சேகரிக்க முடியும். இதனை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் யாரும் தேவையில்லை. இந்த ஆய்வு முடிவுகள் இ-லைப் எனும் இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.






