என் மலர்
தொழில்நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் இத்தனை யூனிட்களை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனையில் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

அதன்படி ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்த ஏழே மாதங்களில் சுமார் பத்து கோடி யூனிட்களை கடந்துள்ளது. முன்னதாக ஐபோன் 11 சீரிஸ் மாடல்கள் பத்து கோடி யூனிட்களை கடக்க ஒன்பது மாதங்கள் ஆனது. ஒட்டுமொத்த விற்பனையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மட்டும் 40 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இத்தனை யூனிட்கள் 2020 டிசம்பர் முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையாகி இருக்கின்றன.
ஐபோன் 11 சீரிஸ் வெளியான ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாயை விட ஐபோன் 12 சீரிஸ் கொண்டு ஏழு மாதங்களில் ஆப்பிள் பெற்ற வருவாய் 22 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஸ்மார்ட்போன் விற்பனை 12.5 சதவீதம் சரிவடைந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் அதிகரித்து வருகிறது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. புது விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. ஒப்போ A11K, ஒப்போ A53s, ஒப்போ A15, ஒப்போ A15s மற்றும் ஒப்போ F19 போன்ற மாடல்களின் விலை ரூ. 1000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு குறித்து ஒப்போ சார்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எனினும், சந்தையில் சிப்செட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஒப்போ ஸ்மார்ட்போன்கள் புதிய விலை விவரம்
ஒப்போ F19 - 6ஜிபி ரேம் ரூ. 18,990
ஒப்போ A11k ரூ. 8,990
ஒப்போ A15 - 2 ஜிபி ரேம் ரூ. 9,490
ஒப்போ A15 - 3 ஜிபி ரேம் ரூ. 10,490
ஒப்போ A15s ரூ. 12,490
ஒப்போ A53s 5ஜி - 8 ஜிபி ரேம் ரூ. 17,990
ஒப்போ மட்டுமின்றி ரியல்மி, விவோ மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஐபேட் மாடல் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிதாக மூன்று ஐபேட் மாடல்களை உருவாக்கி வருவதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இவற்றில் இரு ஐபேட் மாடல்கள் 2023 ஆண்டு வெளியாகும் என்றும் மற்றொன்று அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. மூன்று புது ஐபேட் மாடல்களிலும் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022 ஆண்டு வெளியாகும் புது ஐபேட் மாடல் 10.86 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஐபேட் ஏர் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OLED பேனல்களை பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் Film Encapsulation எனும் வழிமுறையை பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
2023 வாக்கில் வெளியாகும் ஐபேட்களில் ஆப்பிள் நிறுவனம் 120Hz LTPO பேனல்களை பயன்படுத்தும் என்றும் இவை 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் அளவுகளில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. புது ஐபேட்களில் வழங்கப்பட இருக்கும் LTPO தொழில்நுட்பம் சாதனத்தின் மின்சக்தி பயன்பாட்டை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது.
டெக்னோ மொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டெக்னோ மொபைல் நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் HD+ டாட் நாட்ச் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ20 குவாட்கோர் பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி + ஏ.ஐ. டூயல் கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ 2021 அம்சங்கள்
- 6.52 இன்ச் 1500x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
- 1.8GHz குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 32 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைஒஎஸ் 6.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன்
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, டூயல் எல்இடி பிளாஷ்
- ஏஐ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா, பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யுஎஸ்பி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
டெக்னோ ஸ்பார்க் கோ 2021 மாடல் மால்தீவ்ஸ் புளூ, ஹாரிசான் ஆரஞ்சு, கேலக்ஸி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 7 ஆம் தேதி வரை ரூ. 6699 அறிமுக விலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 7299 என மாறிவிடும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் ஜூலை 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதனை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, இன்பினிட்டி யு நாட்ச் கொண்டிருக்கிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, கூடுதலாக மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. தோற்றத்தில் புது ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ22 போன்றே காட்சியளிக்கிறது. எனினும், கேலக்ஸி எப்22 மாடல் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.
டீசர்களின் படி புது ஸ்மார்ட்போன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்த மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படலாம் என்றே கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எப்22 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கான்ட்ரா மொபைல் வெர்ஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் வெளியாக இருக்கிறது. இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் பிரபலமாக இருந்த கான்ட்ரா ஷூட்டிங் கேம் விரைவில் ஸ்மார்ட்போன்களுக்கும் வெளியாக இருக்கிறது. கான்ட்ரா மொபைல் வெர்ஷனுக்கான டிரெயிலர் வீடியோ ஒன்றை கோனாமி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த கேம் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் இம்மாதமே அறிமுகமாகிறது.
மொபைல் தளங்களுக்கு இந்த கேமை கொண்டுவர கோனாமி நிறுவனம் டென்சென்ட் உடன் இணைந்துள்ளது. முன்னதாக இந்த கேமின் பல பதிப்புகள் ஆண்ட்ராய்டில் வெளியாகி இருக்கின்றன. எனினும், கோனாமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தற்போது தான் நடைபெறுகிறது.

கான்ட்ரா என்பது ஆர்கேட் சாதனங்களுக்காக உருவாக்கப்பட்ட ஸ்கிராலிங் கேம் ஆகும். பின் இதன் பதிப்புகள் கணினி, பிளே ஸ்டேஷன் மற்றும் எக்ஸ்பாக்ஸ் போன்ற கன்சோல்களுக்கும் வெளியிடப்பட்டன. தற்போது இதன் மொபைல் வெர்ஷன் கான்ட்ரா ரிட்டன்ஸ் என அழைக்கப்படுகிறது.
மொபைல் வெர்ஷனில் கான்ட்ரா ரிட்டன்ஸ் முற்றிலும் புது கிராபிக்ஸ், கேம்பிளே அப்கிரேடுகள் என பல மாற்றங்களை பெற்று இருக்கிறது. மேலும் இதில் வரும் ஆயுதங்களை கேமர்கள் விரும்பும் வகையில் மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இத்துடன் புது கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமிற்கான முன்பதிவு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் நடைபெற்று வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போனினை சில வாரங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி ஏ22 மாடலின் 4ஜி வேரியண்டை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி ஏ22 மாடலில் 6.4 இன்ச் HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ22 அம்சங்கள்
- 6.4 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 இன்பினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்
- ARM மாலி-G52 2EEMC2 GPU
- 6 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி eMMC 5.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 கோர்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- சாம்சங் பே
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் மின்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 18,499 ஆகும்.
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
ஒப்போ நிறுவனம் ரெனோ 6, ரெனோ 6 ப்ரோ மற்றும் ரெனோ 6 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை ப்ளிப்கார்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.

புதிய ஒப்போ ரெனோ 6 சீரிஸ் மாடல்களுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெனோ 6 மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ரெனோ 6 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ 6 மாடலில் 6.43 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ரெனோ 6 ப்ரோ மற்றும் ரெனோ 6 ப்ரோ பிளஸ் மாடல்களில் 6.55 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் ஆகும். ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோன் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருந்தது.
ஆப்பிள் தனது முதல் ஐபோனினை வெளியிட்டு 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் 2007, ஜனவரி மாதத்தில் முதல் ஐபோனினை அறிமுகம் செய்தார். இந்த மாடல் ஜூன் 29, 2007 அன்று விற்பனைக்கு வந்தது. இன்று உலகமே ஐபோன் 13 சீரிஸ் மாடல் விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பிடும் போது முதன் முதலில் வெளியான ஐபோன், அம்சங்கள் அடிப்படையில் மிகவும் சாதாரண மாடலாகவே இருந்தது. எனினும், அன்றைய தேதியில் ஐபோன் பல்வேறு புதுமையான அம்சங்களை கொண்டிருந்தது. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் ஐபோன் புல் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், மல்டி-டச் ஜெஸ்ட்யூர்கள் என ஏராளமான அம்சங்களை கொண்டிருந்தது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோனை உருவாக்கும் பணிகளை 2005 ஆம் ஆண்டு துவங்கியது. பின் இரண்டு ஆண்டுகள் கழித்தே முதல் ஐபோன் மாடல் விற்பனைக்கு வந்தது. முதல் ஐபோனின் விற்பனை ஜூன் 29, 2007 மாலை 6 மணிக்கு துவங்கியது. ஐபோனை வாங்க ஆறு மாதங்கள் காத்திருந்த வாடிக்கையாளர்கள் அன்று ஆப்பிள் ஸ்டோர் வாயிலில் புது சாதனத்தை வாங்க வரிசைகட்டி நின்றனர்.
முதல் ஐபோனின் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,124 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 44,563 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் குறித்து மைக்ரோசாப்ட், பிளாக்பெரி போன்ற நிறுவனங்கள் கேலி செய்யும் வகையிலான கருத்துக்களை தெரிவித்தன. எனினும், இன்று ஐபோன்கள் உலகம் முழுக்க பிரபலமான ஸ்மார்ட்போனாக இருக்கிறது.
ஆப்பிள் வெளியிட்ட முதல் ஐபோனில் ஆப் ஸ்டோர் இன்றி ஐபோன்ஒஎஸ் வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் சாம்சங்கின் 32-பிட் ARM சிப், 3.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 1400 எம்ஏஹெச் பேட்டரி, 2 எம்பி பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டன. ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் மாடல் விற்பனை ஜூலை 15, 2008 அன்று நிறுத்தப்பட்டது.
தமிழ் நாட்டை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உறவு முறை போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
நத்திங் நிறுவனத்தின் புதிய இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை மாத இறுதியில் அறிமுகமாகிறது.
லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகமாகிறது.
இந்தியாவில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், இதன் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்து இருக்கிறார். புது இயர்போன் டிசைன் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.
நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸருடன் உருவாகி வருகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதிய சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனிலும் இதுவரை இந்த பிராசஸர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹானர் 50 சீரிஸ் மாடல்களில் இந்த பிராசஸர் முதல்முறையாக வழங்கப்பட்டது.

பின் ரியல்மி, ஐகூ, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன.
முந்தைய தகவல்களின்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி எம்51 மாடலை போன்றே புதிய எம்52 5ஜி மாடலிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.






