search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒப்போ ரெனோ 6 சீரிஸ் டீசர்
    X
    ஒப்போ ரெனோ 6 சீரிஸ் டீசர்

    விரைவில் இந்தியா வரும் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன்

    ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

    ஒப்போ நிறுவனம் ரெனோ 6, ரெனோ 6 ப்ரோ மற்றும் ரெனோ 6 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை ப்ளிப்கார்ட் உறுதிப்படுத்தி இருக்கிறது.

     ஒப்போ ரெனோ 6 சீரிஸ் டீசர்

    புதிய ஒப்போ ரெனோ 6 சீரிஸ் மாடல்களுக்கென ப்ளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெனோ 6 மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ரெனோ 6 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெனோ 6 மாடலில் 6.43 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ரெனோ 6 ப்ரோ மற்றும் ரெனோ 6 ப்ரோ பிளஸ் மாடல்களில் 6.55 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸருடன் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.  ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் டிமென்சிட்டி 1200 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×