search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோபோன் நெக்ஸ்ட்
    X
    ஜியோபோன் நெக்ஸ்ட்

    மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனை அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவின் மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். புதிய ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 2ஜி சேவையை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இத்துடன் நாட்டில் முழுமையான 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

     ஜியோபோன் நெக்ஸ்ட்

    ஜியோபோன் நெக்ஸ்ட் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து உருவாக்கிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் வாய்ஸ் அசிஸ்டண்ட், மொழி பெயர்ப்பு, சிறப்பான கேமரா மற்றும் பல்வேறு இதர அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வில் ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள் அறிவிக்கப்படவில்லை. இது செப்டம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.  

    4ஜி ஸ்மார்ட்போன் மட்டுமின்றி கூகுள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ கூட்டணியில் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×