என் மலர்
தொழில்நுட்பம்
இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதற்கான சோதனையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் துவங்கி இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மும்பையில் 5ஜி சேவையை வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை குர்கிராமில் துவங்கியது. ஏர்டெல் சோதனையில் 1Gbps வரையிலான டவுன்லோட் வேகம் கிடைத்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குஜராத், மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் பகுதிகளில் 5ஜி சோதனையை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் 5ஜி சோதனைக்காக தனது சொந்த தொழில்நுட்பங்களை ஜியோ பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
டெல்லியில் 5ஜி வழங்க எரிக்சன் நிறுவனத்துடன், பூனேவில் சோதனையை மேற்கொள்ள நோக்கியா நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ இணைந்துள்ளது. இதேபோன்று குஜராத்தில் சோதனையை மேற்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ சாம்சங் நிறுவனத்துடன் இணைகிறது.

இந்தியாவில் ஆறு மாத காலத்திற்கு 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் இந்த ஆண்டு மே மாதத்தில் அனுமதி அளித்தது. இதற்கென 700MHz, 3.2 முதல் 3.6GHz மற்றும் 24.25 முதல் 28.5GHz பேண்ட்களை ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ஒத்துக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி இசட் போல்டு 3 அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டு பின் அதனை மாற்றி இருப்பதாக கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து போக்கோ நிறுவனம் பயனர்களுக்கு பதில் அளித்து இருக்கிறது.
இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைலில் கேமரா இயங்கவில்லை என குற்றஞ்சாட்டி வந்தனர். பயனர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்களில் 0.2 சதவீத மாடல்களில் மட்டுமே இந்த கோளாறு ஏற்பட்டு இருப்பதாக போக்கோ தெரிவித்து இருக்கிறது.
ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட பிரச்சினையை உறுதிப்படுத்திய போக்கோ, இதனை சரி செய்ய பயனர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தெரிவித்து இருக்கிறது.
Dear POCO users, A few of you have approached us with a 'camera not working' issue on the POCO X2. We have detailed out the steps that need to be followed to fix it. Please go through the letter to know more. pic.twitter.com/Najbl8Pq1n
— POCO India Support (@POCOSupport) June 15, 2021
அதன்படி ஸ்மார்ட்போனில் settings, சர்ச் பாரில் Manage apps என டைப் செய்து Camera ஆப்ஷனில் Clear Data மற்றும் Clear all data – OK ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செட்டிங்களை மாற்றிவிட்டு ஸ்மார்ட்போனினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி சர்வதேச சந்தையில் ரியல்மி ஜிடி 5ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 120 ஹெர்ட்ஸ் சாம்சங் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பன்ச் ஹோலில் 16 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் + காப்பர் விசி கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார், 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர்டார்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 கொண்டிருக்கும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.
ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் ரேசிங் எல்லோ, டேஷிங் சில்வர் மற்றும் டேஷிங் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை 449 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 39,872, 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை 559 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 49,620 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐடெல் நிறுவனம் மேஜிக் 2 4ஜி பீச்சர் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஐடெல் நிறுவனத்தின் முதல் 4ஜி பீச்சர் போன் ஆகும். இதில் வைபை மற்றும் ஹாட்ஸ்பாட் டெதரிங், டூயல் 4ஜி வோல்ட் இ, 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
1.3 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், வயர்லெஸ் எப்எம் மற்றும் ரெக்கார்டிங் வசதி, எல்இடி டார்ச், ஒன் டச் மியூட், 1900 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 24 நாட்களுக்கான ஸ்டான்ட்பை வழங்குகிறது.

ஐடெல் மேஜிக் 2 4ஜி அம்சங்கள்
- 2.4 இன்ச் QVGA 3D வளைந்த டிஸ்ப்ளே
- வைபை மற்றும் ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 2.0
- 8 பிரீலோட் செய்யப்பட்ட கேம்கள்
- 9 மொழிகளில் பயன்படுத்தும் வசதி
- கிங் வாய்ஸ், ஆட்டோ கால் ரெக்கார்டர், ஒன் டச் மியூட்
- 1900 எம்ஏஹெச் பேட்டரி
ஐடெல் மேஜிக் 2 4ஜி மாடல் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 2349 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சியோமியின் புது மடிக்கக்கூடிய சாதனம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை புது சியோமி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 108 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் உள்புற ஹின்ஜ் மற்றும் இரண்டு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

உள்புறம் சாம்சங் உற்பத்தி செய்யும் பெரிய டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், வெளிப்புறம் 90 ஹெர்ட்ஸ் சிறு டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்படுமா அல்லது மற்ற நாடுகளிலும் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் புதிய ரூ. 127 பிரீபெயிட் சலுகை அசத்தல் அம்சங்களை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Jio Freedom Plans சலுகையை தனது பிரீபெயிட் பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. புது சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ், ஜியோ செயலிகளுக்கான சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.
புது சலுகைகள் துவக்க விலை ரூ. 127 ஆகும். மற்ற சலுகைகளில் தினசரி டேட்டா வழங்கப்படுவதை போன்று புது சலுகையில் தினசரி டேட்டா வழங்கப்படவில்லை. எனினும், இவற்றில் சலுகை முடியும் வரை குறிப்பிட்ட அளவு டேட்டா வழங்கப்படுகிறது. இதனை வேலிடிட்டி முடியும் வரை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ. 127 சலுகையில் மொத்தம் 12 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது 15 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ரூ. 247 ஜியோ சலுகையில் 25 ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 447 சலுகையில் 50 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கும், ரூ. 597 சலுகையில் 75 ஜிபி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியும், ரூ. 2397 சலுகை 365 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புது வாட்ச் மாடல்களை உருவாக்கி வருகின்றன. இத்துடன் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை அதில் வழங்கும் பணிகளிலும் ஆப்பிள் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆப்பிள் உருவாக்கி வரும் புது ஆப்பிள் வாட்ச் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் 7 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வேகமான பிராசஸர், மேம்பட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டி, மேம்பட்ட ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு புது ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் ஆப்பிள் வாட்ச் எஸ்இ வேரியண்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் விலை ஸ்டான்டர்டு மாடலை விட குறைவாக இருக்கும் என தெரிகிறது. இத்துடன் உடல் வெப்பநிலை மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸருடனும், சர்வதேச சந்தையில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. எனினும், இந்த மாடலில் ஆக்சிஜன் ஒஎஸ் வழங்கப்படும் என்றும் ரியல்மி மாடலில் ரியல்மி யுஐ வழங்கப்படும்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி எக்ஸ்9 ப்ரோ குளோபல் வேரியண்ட் சர்வதேச சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2 பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்திலேயே அறிமுகமாகும் என தெரிகிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், பிளாட் ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்களுடன் ரியல்மி எக்ஸ்9 ப்ரோ மாடலில் உள்ள அம்சங்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் V21e 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் 5ஜி மாடல்களை அறிமுகம் செய்ய துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விவோ நிறுவனமும் இணைந்துள்ளது.
விவோ நிறுவனம் விரைவில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ நிறுவனத்தின் புதிய விவோ V21e 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் வலைதளத்தில் இடம்பெற்று வெளியாகி உள்ளது.

புது விவோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ஓரளவு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக விவோ V21e 4ஜி வேரியண்ட் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 5ஜி வேரியண்ட் இதுவரை வெளியாகவில்லை.
அம்சங்களை பொருத்தவரை விவோ V21e 5ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம்.
சியோமி நிறுவனம் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனினை ஜூன் 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் மாடலும் இதே நாளில் அறிமுகமாகிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்து உள்ளது.
டீசரின் படி புது ஸ்மார்ட்வாட்ச் SpO2 மாணிட்டரிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இது எம்ஐ வாட்ச் ரிவால்வ் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இதில் அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக எம்ஐ வாட்ச் கலர் சீன சந்தையில அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் இந்திய சந்தையில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எம்ஐ வாட்ச் கலர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இந்தியாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை புது ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் AMOLED ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டணட் வசதி, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதத்திலேயே அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன்கள் இம்மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த தகவலை ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் நார்சோ 30 ப்ரோ மற்றும் நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதுதவிர நார்சோ 30 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி 8 மாடலின் டோன்-டவுன் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

ரியல்மி நார்சோ 30 அம்சங்கள்
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
- 900MHz மாலி-G76 3EEMC4 GPU
- 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா
- 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்






