என் மலர்
தொழில்நுட்பம்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED டிஸ்ப்ளே, 64 எம்பி குவாட் கேமரா சென்சார்களுடன் உருவாகி இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 21 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. புது கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் FHD+SAMOLED ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எம்32 அமேசான் மற்றும் சாம்சங் ஷாப் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

முன்னதாக கீக்பென்ச் தளத்தில் வெளியான விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.
புதிய சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கும் என்றும் கூறப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் டிரோன்களின் மூலம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை வினியோகம் செய்யும் திட்டம் துவங்கப்பட இருக்கிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்துடன் இணைந்து டிரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கும் ஊரக பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஜியோ மேப்பிங், ஷிப்மென்ட் ரூட்டிங், டிராக் அண்ட் டிரேஸ் லொகேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்த ஆண்டுகளாக ப்ளிப்கார்ட் உருவாக்கி வந்தவை ஆகும்.
இந்த திட்டம் மூலம் மாநிலத்தினுள் சாலை மூலம் விரைவில் சென்றடைய முடியாத ஊரக பகுதிகளில் மருந்துகளை வேகமாக வினியோகம் செய்ய முடியும். திட்டத்தை செயல்படுத்தும் முன் இதனை ஆறு நாட்களுக்கு சோதனை செய்யப்பட இருக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.
இந்திய சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் விற்பனையில் மட்டும் போக்கோ எம்3 மாடல் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. விற்பனை துவங்கிய ஒரே மாதத்தில் இந்த ஸ்மார்ட்போன் சுமார் 5 லட்சம் யூனிட்களை கடந்தது.

இந்த நிலையில், போக்கோ எம்3 விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. விற்பனை துவங்கி சுமார் மூன்று மாதங்களில் போக்கோ எம்3 சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த தகவலை போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முந்தைய போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 மாடல்களை போன்றே போக்கோ எம்3 மாடலும் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போனிற்கென ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. சர்வதேச சந்தையில் 5ஜி மற்றும் 4ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் இதன் 4ஜி வேரியண்ட் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.
ஸ்மார்ட்போனின் தடிமன் மற்றும் எடை தவிர வேறு எந்த தகவலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இடம்பெறவில்லை. புதிய எம்ஐ 11 லைட் மாடல் 6.8 எம்எம் அளவில், 157 கிராம் எடை கொண்டிருக்கும். ஐரோப்பிய சந்தையில் எம்ஐ 11 லைட் விலை 299 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 26 ஆயிரம் என துவங்குகிறது.

எம்ஐ 11 லைட் 4ஜி குளோபல் வேரியண்ட் அம்சங்கள்
- 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
- அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 5 எம்பி டெலிமேக்ரோ சென்சார், f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
- 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப் சி
- 4250 எம்ஏஹெச் பேட்டரி
- 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ நிறுவனத்தின் ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது ஸ்பார்ட் 7டி 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், குவாட் எல்இடி பிளாக் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் உள்ளது.
ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் சார்ந்த ஹைஒஎஸ் 7.6 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 7டி டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 7டி அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஹைஒஎஸ் 7.6
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, குவாட் LED பிளாஷ்
- ஏஐ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் நெபுலா ஆரஞ்சு, மேக்னட் பிளாக் மற்றும் ஜூவல் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசான் தளத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் விற்பனையில் ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் புது கேமிங் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக கேம் ஸ்டிரீமிங் சாதனங்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சேவையை ஸ்மார்ட் டிவிக்களுக்கும் அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. எக்ஸ்பாக்ஸ் மற்றும் கேமிங் சேவை குறித்த விவரங்களை மைக்ரோசாப்ட் வெளியிட்டு உள்ளது.

எக்ஸ்பாக்ஸ் அனுபவத்தை ஸ்மார்ட் டிவிக்களில் வழங்க மைக்ரோசாப்ட் உலகின் முன்னணி தொலைகாட்சி உற்பத்தியாளர்களுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக விரைவில் கேமிங் கன்சோல் இன்றி, வெறும் கண்ட்ரோலர்களை மட்டுமே வாங்கினால் டிவிக்களிலேயே கேமிங் செய்யலாம்.
தொலைகாட்சி அல்லது மானிட்டர் மூலம் அதிக கேமிங் பயனர்களை ஈர்க்க கிளவுட் கேமிங் சேவையை வழங்கும் ஸ்டிரீமிங் சாதனங்களை சொந்தமாக உருவாக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு ஜூன் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வு அந்நிறுவன வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது. புதிய M1X பிராசஸர் கொண்ட மேக்புக் மாடல்களை ஆப்பிள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.
எனினும், புது மேக்புக் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் தனது டெவலப்பர்கள் நிகழ்விலேயே புது மேக்புக் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வு யூடியூப் வீடியோவில் M1X மேக்புக் ப்ரோ மற்றும் M1X போன்ற குறியீடுகள் இடம்பெற்று இருந்தது கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து வெளியாகும் தகவல்களில் சிலர், புது மேக்புக் வெளியீடு கடைசி நேரத்தில் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்றும், சிலர் வீடியோவுக்கான SEO-வை மேம்படுத்த ஆப்பிள் இவ்வாறு செய்து இருக்கலாம் என கூறுகின்றனர்.
புது மேக்புக் மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை என்ற போதும், M1X பிராசஸர் மற்றும் M1X கொண்ட மேக்புக் ப்ரோ இந்த ஆண்டு வெளியாகும் என ஆப்பிள் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பென்ச்மார்க் விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் வெளியாகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எம்32 மீடியாடெக் ஜி88 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

கீக்பென்ச் விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடலில் 6.43 இன்ச் FHD+ புளூயிட் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 11 கொண்டிருக்கும் நார்டு CE 5ஜி மாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் உறுதியளித்து இருக்கிறது.
மெமரியை பொருத்தவரை நார்டு CE 5ஜி மாடல் - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மோனோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி உள்ளது. இத்துடன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 30டி வார்ப் சார்ஜ் பிளஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
ஒன்பிளஸ் நார்டு CE 5ஜி மாடல் மேட் பினிஷ் கொண்ட புளூ வாய்ட், கிளாஸி பினிஷ் கொண்ட சார்கோல் இன்க் மற்றும் கிரேடியன்ட் எபெக்ட் கொண்ட சில்வர் ரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 22,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 24,999 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 27,999 ஆகும்.
சோனி நிறுவனத்தின் புதிய பிரேவியா X90J ஸ்மார்ட் டிவி காக்னிட்டிவ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
சோனி நிறுவனம் 2021 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காக்னிடிவ் பிராசஸர் XR-ஐ அறிமுகம் செய்தது. தற்போது இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச், 65 மற்றும் 75-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
இந்த டிவியில் ஃபுல் அரே பேக்லைட்டிங் மற்றும் லோக்கல் டிம்மிங் உள்ளது. இதில் உள்ள 4K பேனல் HDR10, டால்பி விஷன் மற்றும் HLG உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிவியில் மொத்தம் நான்கு HDMI போர்ட்கள் உள்ளன.

மேலும் இதில் மினி-ஏவி போக்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், ஹெட்போன் அவுட், ஆப்டிக்கல் அவுட், வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IMAX மோட் உள்ளது. இதில் உள்ள லைட் சென்சார்கள் அறையில் உள்ள வெளிச்சத்திற்கு ஏற்ப பிக்சர் செட்டிங்களை மாற்றியமைக்கும்.
புதிய சோனி பிரேவியா X90J 55-இன்ச் விலை ரூ. 1,39,990 ஆகும். இதன் விற்பனை இன்று (ஜூன் 10) துவங்கியது. 65 மற்றும் 75 இன்ச் வேரியண்ட்களின் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 16 எம்பி செல்பி கேமரா, அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் வை73 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புது வை சீரிஸ் ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 16 எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ வழங்கப்பட்டுள்ளது.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 4000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ வை73 ஸ்மார்ட்போன் டைமண்ட் பிளேர் மற்றும் ரோமன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 20,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடல்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது.
சியோமி இந்தியா நிறுவனம் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடலை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சுமார் 45 நாட்களுக்குள் இந்த மாடல் ரூ. 300 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.
முன்னதாக எம்ஐ 10ஐ 5ஜி மாடல்கள் ரூ. 400 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது. எம்ஐ 11எக்ஸ் சீரிசில் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ என இரு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஆடியோ ஜூம் போன்ற அம்சங்கள் உள்ளன.
எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மாடல்கள் விலை ரூ. 29,999 முதல் துவங்குகின்றன. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.






