search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் ஸ்மார்ட்போன்
    X
    சாம்சங் ஸ்மார்ட்போன்

    விரைவில் இந்தியா வரும் 6000 எம்ஏஹெச் பேட்டரி சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் புது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பென்ச்மார்க் விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் வெளியாகி இருந்தது. அதில் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    புது எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை போன்று இல்லாமல் புதிய கேலக்ஸி எம்32 மீடியாடெக் ஜி88 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    கீக்பென்ச் விவரங்களின்படி கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1, 48 எம்பி பிரைமரி கேமராவுடன், குவாட் கேமராக்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

    முன்புறம் 20 எம்பி செல்பி கேமராவும் கனெக்டிவிடிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 6000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது. கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் லைட் புளூ நிறங்களில் கிடைக்கும். இதன் விலை ரூ. 15 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம்.  
    Next Story
    ×