search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி எம்ஐ 11எக்ஸ்
    X
    சியோமி எம்ஐ 11எக்ஸ்

    45 நாட்களில் ரூ. 300 கோடி மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை விற்ற சீன நிறுவனம்

    சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடல்கள் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது.


    சியோமி இந்தியா நிறுவனம் தனது எம்ஐ 11எக்ஸ் சீரிஸ் மாடலை ஏப்ரல் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகமான சுமார் 45 நாட்களுக்குள் இந்த மாடல் ரூ. 300 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    முன்னதாக எம்ஐ 10ஐ 5ஜி மாடல்கள் ரூ. 400 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை  செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது. எம்ஐ 11எக்ஸ் சீரிசில் எம்ஐ 11எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ என இரு மாடல்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 

     சியோமி எம்ஐ 11எக்ஸ் சீரிஸ்

    இரு மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 6.67 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், ஆடியோ ஜூம் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11எக்ஸ் ப்ரோ மாடல்கள் விலை ரூ. 29,999 முதல் துவங்குகின்றன. இரு மாடல்களும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 
    Next Story
    ×