என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 106 ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் போன் அந்நிறுவனம் 2013ல் அறிமுகம் செய்திருந்த நோக்கியா 106 மாடலின் மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆகும். புதிய நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம், முற்றிலும் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய நோக்கியா 106 (2018) டார்க் கிரே நிறத்தில் கிடைக்கிறது. முதற்கட்டமாக ரஷ்யாவில் விற்பனைக்கு வரும் புதிய நோக்கியா போன் விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் இதன் விலை 1590 ரூபில்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.1,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bluetoothheadphones



    போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதுய ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மஃப்ஸ் ஆர் என அழைக்கப்படும் புது ப்ளூடூத் ஹெட்போன் மாடல் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    புது மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மஃப்ஸ் சீரிஸ் வகைகளில் புதிய மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. மஃப்ஸ் ஆர் ஹெட்போனின் எடை குறைவாக இருப்பதோடு, அளவில் சிறியதாகவும் பயன்படுத்த சவுகரியமாக இருக்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது. 

    இதன் மெல்லிய மற்றும் எடை குறைவான வடிவமைப்பு காரணமாக இதனை நீண்ட நேரம் தொடர்ந்து உபயோகிக்க முடியும். தற்போதைய கேட்ஜெட்களில் பிரபல அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மஃப்ஸ் ஆர் ஹெட்போனில் வழங்கப்பட்டுள்ளது. 



    இதனால் சிறிது நேரம் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மஃப்ஸ் ஆர் ஹெட்போன்களில் நெக்பேன்ட் வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன்களை பயன்படுத்தி, பயனர்கள் இசையை கேட்டு ரசிப்பதுடன், அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். 

    இத்துடன் 3.5எம்.எம். ஆக்சில்லரி கேபிள் கொண்டு பில்ட்-இன் மைக் மற்றும் அழைப்புகள், பிளேபேக் உள்ளிட்டவற்றை இயக்க முடியும். ப்ளூடூத் வசதி கொண்ட இயர்போன்களில் 40 எம்.எம். இன்பில்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் 10 மீட்டர் வரை ஆடியோவை கன்ட்ரோல் செய்ய முடியும்.

    புது இயர்போன்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 முதல் 15 மணி நேர டாக்டைம் மற்றும் தொடர்ச்சியாக 15 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் வழங்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் போர்டிரானிக்ஸ் புதிய மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி மற்றும் விலையை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus6T #ThunderPurple



    ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் அறிமுகமான புது ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ விற்பனை தளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி தன்டர் பர்ப்பிள் எடிஷன் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் மற்றும் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மதியம் 02.00 மணிக்கு விற்பனை துவங்குகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் ஒன்பிளஸ் விற்பனையகங்களில் சிறப்பு விற்பனை காலை 11.00 மணிக்கே துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    8 ஜி.பி. ரேம்,128 ஜி.பி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் மற்றும் மிரர் பிளாக் எடிஷன் விலை ரூ.41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தன்டர் பர்ப்பிள் எடிஷன் ஸ்மார்ட்போனில் ஒன்பிளஸ் 6டி மாடலின் பின்புறம் ஃபிராஸ்டெட் கிளாஸ் மற்றும் S வடிவ வளைவு இடம்பெற்றுள்ளது.



    ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:

    – 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    – 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர்
    – அட்ரினோ 630 GPU
    – 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    – 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    – ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
    – 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
    – 16 எம்.பி. சோனி IMX371 செல்ஃபி கேமரா
    – இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    – வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
    – யு.எஸ்.பி. டைப்-சி
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    – 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சலுகைகள்:

    – தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1,500 கேஷ்பேக்

    – அமேசான் மற்றும் ஒன்பிள் பிரத்யேக ஆஃப்லைன் விற்பனையகங்களில் மூன்று மாதங்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதி

    – கோடாக் செர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான இலவச இன்சூரன்ஸ்

    – ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் ரூ.299 சலுகையை தேர்வு செய்யும் போது ரூ.5,400 வரை உடனடி கேஷ்பேக், ரூ.150 மதிப்புள்ள 36 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகிறது.
    புதுவித ஹெட்போன்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. காப்புரிமையில் புது ஹெட்போனின் சில விவரங்களும் தெரியவந்துள்ளது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதுவித ஓவர்-தி-இயர் ஹெட்போன்களை உருவாக்குவதற்கான காப்புரிமையை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்பிள் பெற்றிருக்கும் புதிய காப்புரிமையின் படி அந்நிறுவனத்தின் புதுவித ஹெட்போன்கள் தானாக வலது மற்றும் இடதுபுற காதுகளை டிடெக்ட் செய்து கொள்ளும். இந்த ஹெட்போன்கள் எதிர்ப்புறமாகத் திருப்பத் தக்கக் கூடியதாகவும், காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொள்ளும் வகையில் இருக்கும்.

    மேலும் ஹெட்போன்களில் ஐந்து மைக்ரோபோன்கள் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஹெட்போன்களை காதில் வைப்பதற்கு ஏற்ப மைக்ரோபோன்கள் தானாக ஒரு மைக் மூலம் குரல் அங்கீகாரம் மற்றவை பின்னணி இசையை கேட்காதபடி செய்யும்.



    காப்புரிமையின் படி இந்த தொழில்நுட்பம் எந்த இயர் கப் வலது காதில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை குரல் அங்கீகார வசதியை எனேபிள் செய்து கொள்ளும். எனினும், ஆப்பிள் நிறுவனம் திருப்பத் தக்கக் கூடிய ஹெட்போன்களை சரியாக வலது மற்றும் இடதுபுற ஸ்டீரியோ சிக்னல்களை வழங்க பயன்படுத்திக் கொள்ளும்.

    புதிய ஹெட்போன்கள் தற்சமயம் காப்புரிமைகளில் இருப்பதால், இவற்றின் உற்பத்தி மற்றும் வெளியீடு குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லை.
    டிக்டொக் செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Lasso



    டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக ஃபேஸ்புக் நிறுவனம் லேசோ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய லேசோ ஆப் நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. புதிய செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகமாகி இருக்கிறது.

    லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்யும் வசிதயும் வழங்கப்படுகிறது. வைன்ஸ் போன்று செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்யலாம். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.



    லேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    விரைவில் லேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
    எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #smartphone



    எல்.ஜி. நிறுவனம் தென்கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. நிறுவனம் இன் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்க இருக்கிறது.

    இதன் மூலம் புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் எதுவும் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனிற்கென எல்.ஜி. இரண்டு காப்புரிமைகளை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி ஒரு ஸ்மார்ட்போனில் வழக்கமான திரையும் மற்றொன்றின் ஓரங்களில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இரண்டு மாடல்களிலும் எல்.ஜி. உற்பத்தி செய்த வளையும் தன்மை கொண்ட OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரண்டு காப்புரிமைகளும் கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 2ம் தேதிகளில் இவை அச்சிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Letsgodigital

    காப்புரிமை புகைப்படங்களின் படி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவில் வெவ்வேறு இடங்களில்- நடுவே, இடது புற ஓரம், வலது புற ஓரம் அல்லது மத்தியில் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது. இதில் இரண்டு கேமரா சென்சார்களும், மற்ற இதர சென்சார்களும் வழங்கப்படுகிறது.

    புதிய காப்புரிமை மூலம் எல்.ஜி. நிறுவனம் 100 சதிவிகதம் முழுமையான டிஸ்ப்ளேவை வழங்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த காப்புரிமையின் மூலம் ஸ்மார்ட்போனில் ஸ்லைடர் அல்லது பாப் அப் போன்ற மெக்கானிக்கல் அம்சங்களை புகுத்த வேண்டிய அவசியமற்றதாக இருக்கிறது.

    எல்.ஜி. போன்றே சாம்சங் நிறுவனமும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் டெவலப்பர் நிகழ்வின் முதல் நாளில் அறிமுகம் செய்யப்பட்டது. #SamsungDeveloperConference



    சாம்சங் எலெக்டிரானிக்ஸ் கோ லிமிட்டெட் நிறுவனம் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் மடிக்கக்கூடிய சாதனத்திற்கான செயலிகளை உருவாக்கும் பணிகளை துவங்குகின்றனர்.

    மடிக்கக்கூடிய போன்களில் உள்ள ஸ்கிரீன் திறக்கப்பட்ட நிலையில் டேப்லெட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. அதன்மூலம் இது பாக்கெட்டில் எளிதில் வைத்து பயன்படுத்தக் கூடிய சிறிய டேப்லெட் ஆக இருக்கிறது. 



    சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் ஜஸ்டின் டெனிசன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் சாதனத்தை அறிமுகம் செய்தார். இந்த சாதனம் 7.3 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில் அதிக தடிமனான மொபைல் போன் போன்று காட்சியளிக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய சாதனம் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை. புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் வரும் மாதங்களில் துவங்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. 

    சீனாவில் ஹூவாய் டெக்னாலஜிஸ் கோ லிமிட்டெட் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. #SamsungDeveloperConference #Foldablephone
    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #5G #iPhone



    ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.

    அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான மோடெம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இன்டெல் நிறுவனம் 8060 மோடெம்களை உருவாக்கி வருவதாகவும் இவை 5ஜி ஐபோனில் சோதனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8161 ரக சிப்செட் இன்டெல்லின் 10 நானோமீட்டர் வழிமுறையில் ஃபேப்ரிகேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் போனில் கனெக்டிவிட்டி சீராவகவும் வேகமாக்க முடியும்.

    சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் இன்டெல் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 8060 சிப்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வெப்பத்தை வெளியேற்றியது தான் என்றும் இதை சரி செய்வதில் இன்டெல் அதிகளவு சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.



    அமெரிக்காவின் பிரபல டெலிகாம் சேவை வழங்கும் வெரிசான் மற்றும் எடி&டி உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி போன்களுக்கான சேவையை வழங்க மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரத்தை நாடுகின்றன. மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் அதிகளவு செயல்திறன் கொண்டவை ஆகும்.

    இதனால் போனில் அதிகளவு வெப்பம் ஏற்படுவதோடு, வெப்பத்தை போனின் வெளியே உணர முடியும். இவ்வாறு ஏற்படும் போது போனின் பேட்டரி ஆயுள் பெருமளவு பாதிக்கப்படும். எனினும் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து 5ஜி மோடெம்களை விநியோகம் செய்ய முயற்சிக்கலாம்.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மீடியாடெக் உடன் இணைந்து சிப் விநியோம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. எனினும் இது இரண்டாவது திட்டமாக இருக்கும் என்றும் இன்டெல் நிறுவனத்திற்கு போதுமான நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    5ஜி தொழிலநுட்பம் கொண்ட மொபைல் போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ, ஹூவாய் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் 5ஜி மோடெம் சிப்களை குவால்காம் விநியோகம் செய்கிறது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற முதல் ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை இந்தியாவில் இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்துள்ளது. #androidtv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடலை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்திருக்கிறது. பெயரிடப்படாத இரண்டு டி.வி. மாடல்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

    கூகுள் சான்று பெற்றிருப்பதோடு, புதிய டி.வி.யில் ஹை-டைனமிக் ரேன்ஜ் (ஹெச்.டி.ஆர்.) இருப்பதால் காட்சி தரம் தெளிவாக இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தொலைகாட்சிகளில் அதிகாரப்பூர்வ கூகுள் பிளே வசதி கொண்டிருப்பதால், செயலிகள், கேம்கள், திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்டவற்றுக்கான வசதிகள் கொண்டிருக்கின்றன.

    புதிய டி.வி. மாடல்கள் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி, டி.டி.எஸ். சவுன்ட் சான்று, குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. EMMC ஸ்டோரேஜ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், MHL கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.



    மேலும் கூகுள் அசிஸ்டன்ட் இருப்பதால் குரல் மூலம் தேடலாம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய டி.வி.யில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சொந்த பியூர் சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டால்பி மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி. ஆடியோ சான்று பெற்றிருக்கிறது. 

    இந்த டி.வி. மாடல்களில் 2x12 வாட் ஸ்பீக்கர்களும், மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும் இகோ எனர்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்களின் விற்பனை இம்மாதம் துவங்கும் என்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த டி.வி. கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது.

    மைக்ரோமேக்ஸ் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K UHD HDR10 டி.வி. மாடல்களின் விலை முறையே ரூ.51,990 மற்றும் ரூ.61,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் அசத்தி இருக்கின்றனர். #microprocessor



    ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசரை கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

    இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும். இதனால் வெளிநாட்டு மைக்ரோ பிராசசர்களை நாடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த மைக்ரோ பிராசசரை சர்வதேச தரத்துக்கு இணையாக பயன்படுத்த முடியும்.

    சக்தி மைக்ரோ பிராசசர் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஃபேப்ரிகேட் செய்யப்பட்டது. அந்த வகையில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் மைக்ரோ பிராசசர் என்ற பெருமையை சக்தி பெற்றுள்ளது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.



    முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் வழக்கமான ஹார்டுவேர் பிராசசர்களில் ஏற்படும் ட்ரோஜன், மால்வேர் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

    சக்தி பிராசஸர்களை மிகமுக்கிய துறைகளான பாதுகாப்பு, அணு ஆயுத கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் துறைகளில் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க பயன்களை பெற முடியும் என எதிர்பார்க்கலாம். இந்தத் திட்டம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் சாத்தியமாகியுள்ளது.

    "டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளில் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிராசஸர் கோர்களுக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. சண்டிகரில் உள்ள எஸ்.சி.எல். 180 என்.எம். ஃபேப்ரிகேஷன் அமைப்பில் மிகமுக்கிய கோர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்," என ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் காமகோடி வீழிநாதன் தெரிவித்தார்.
    ஹூவாய் துணை பிரான்டு ஹானர் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #HonorMagic2



    ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஹானர் மேஜிக் 2 மாடலை உயர் ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் FHD பிளஸ் ஸ்கிரீன், ஆன்டி-டஸ்ட் ஸ்லைடர் டிசைன், கிரின் 980 7 என்.எம். சிப்செட், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், யோயோ அசிஸ்டண்ட், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 24 எம்.பி. மோனோக்ரோம் இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக், 3Q கியோமோஜி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 40 வாட் சூப்பர் சார்ஜ் வசதி, டூயல் சிம் சப்போர்ட், ஹூவாய் ஹை1103 சிப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் மேஜிக் 2 சிறப்பம்சங்கள்

    - 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - மாலி-G76MP10 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
    - 24 எம்.பி. இரண்டாவது மோனோக்ரோம் சென்சார், f/1.8
    - 16 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ், AIS
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/ 2.0
    - 2 எம்.பி. + 2 எம்.பி. f / 2.4 கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் சிம்
    - IPX2 வாட்டர் ரெசிஸ்டன்ட்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 40 வாட் சூப்பர் சார்ஜ்

    ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பிளாக், கிரேடியன்ட் ரெட் மற்றும் கிரேடியன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,295 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,610) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.50,910) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இன்று (நவம்பர் 1) முதல் முன்பதிவு செய்யப்படும் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 6ம் தேதி துவங்குகிறது. ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனுடன் 3D போட்டோசென்சிட்டிவ் எடிஷன் 3டி பயோசென்சிங் தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் ஹூவாய் மேட் 20 ப்ரோ போன்று கிராஃபீன் ஹீட் டிசிபேஷன் வசதி கொண்டுள்ளது.

    ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் 3D போட்டோசென்சிட்டிவ் எடிஷல் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 5799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.61,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    உலகின் பிரபல மொபைல் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வரும் நிலையில், எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் அறிமுகம் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #smartphone



    உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சாம்சங், ஹூவாய் போன்ற நிறுவனங்கள் விரைவில் தங்களது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய மொபைல் போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மொபைல் போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சி.இ.எஸ். கீநோட் நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.



    பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் புதிய தகவலை வழங்கியிருக்கிறார். எல்.ஜி. மடிக்கக்கூடிய மொபைல் போன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், எல்.ஜி. நிறுவனம் புதிய மொபைல் போனினை சி.இ.எஸ். நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை பல்வேறு விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சாம்சங் மடிக்கக்கூடிய மொபைல் போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    சமீபத்தில் சாம்சங் வெளியிட்ட தகவல்களில் மடிக்கக்கூடிய மொபைல் போனில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

    சாம்சங் நிறுவனம் போன்றே ஹூவாய் நிறுவனமும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. எனினும் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நிறுவனம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
    ×