என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Micromax #smartphone
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் - பாரத் 4 தீபாவளி எடிஷன் மற்றும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களில் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷனில் 18:9 ரக டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இதை கொண்டு மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படவில்லை.

மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1 ஜி.பி. ரேம்
- 8 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விலை ரூ.5,899 என்றும், பாரத் 4 தீபாவளி எடிஷன் விலை ரூ.4,249 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், பாரத் 4 தீபாவளி எடிஷன் விற்Hனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.
புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையனஅஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ்களை செய்யும் போது 5 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 12.1 அப்டேட் சார்ந்த விவரங்களில் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #iPhoneXS #iPhoneXSMax
ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்திற்கான ஐபோன் யூசர் கைடை அப்டேட் செய்திருக்கிறது. புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12 இயங்குதளத்தில் வழங்க இருந்த அம்சங்களை வழங்குகிறது.
அந்த வகையில் புதிய இயங்குதளத்தின் மிகமுக்கிய அம்சங்களாக க்ரூப் ஃபேஸ் டைம் மற்றும் டூயல் சிம் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் அதன் பெருக்கு ஏற்றார்போல் ஒரே சமயத்தில் அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ கால் பேச வழி செய்யும்.

க்ரூப் ஃபேஸ் டைம் வசதியுடன் புதிய ஐபோன் மாடல்களுக்கான டூயல் சிம் வசதியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஐபோன் “XR”, “XS” மற்றும் “XS மேக்ஸ்” உள்ளிட்ட மாடல்களுக்கு டூயல் சிம் வசதி வழங்கப்பட இருக்கிறது. இவை ஐ.ஓ.எஸ். பாயின்ட் அப்டேட்கள் வரும் போது கிடைக்கும்.
புதிய அப்டேட் மூலம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ளதை போன்றே ஆப்பிள் புதிய ஐபோன்களில் டூயல் சிம் வசதி மூலம் பயனர்கள் இரண்டு செல்லுலார் சேவைகளை பயன்படுத்த முடியும். ஆப்பிள் ஐபோன்களில் டூயல் சிம் வசதிக்கென அந்நிறுவனம் டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை தொழில்நுட்பத்தின் மூலம் வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பம் புதிய ஐபோனில் ஒற்றை சிம் ஸ்லாட் மற்றொன்றில் எம்பெட் செய்யப்பட்ட இசிம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டுமே இரண்டு சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தின் வெளியீட்டு தேதி குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வி தகவலும் வழங்கப்படவில்லை, எனினும் இதன் பீட்டா பதிப்புகள் செப்டம்பர் மாதம் முதல் சோதனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் 4ஜி போன்றே அதிவேக 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. #5G #Jio
இந்திய டெலிகாம் சந்தையில் இன்னமும் பெருமளவு பயனர்கள் ஃபீச்சர்போன் பயன்படுத்தி வருவாதல், டெலிகாம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகக்கும் வாய்ப்புகள் குறைவு தான என ஜியோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் இன்றும் ஃபீச்சர் போன் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் தற்சமயம் சேவை கட்டணம் தற்சமயம் அதிகரிக்கப்பட மாட்டாது என ரிலையன்ஸ் ஜியோ தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையில் கவனம் செலுத்தவில்லை எனில் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.
5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என அவர் தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் சாதனங்கள் தற்சமயம் வெளியாகாத நிலையில், இவை 2019ம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“2020ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021ம் ஆண்டு வாக்கில் பயன்பாட்டிற்கு வரயிருக்கும் புதிய தொழில்நுட்பத்தின் கட்டணத்தை 2018ம் ஆண்டில் கணிப்பது கடினமான ஒன்று,” என மேத்யூ தெரிவித்தார். இந்தியாவில் ஜியோ நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜியோ நிறுவனம் ஸ்வீடன் நாட்டு டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓட்டுனர் இன்றி இயங்கும் காரினை சோதனை செய்தது.
4ஜி தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் குறைவாகவே இருக்கும் என எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை ஆட்டம் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. #Zebronics #speaker
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெப்ரானிக்ஸ் புதிய ஸ்பீக்கரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்பீக்கர் விழாக்கால சிறப்பு விளக்குடன் வருகிறது. இதனால் வயர்லெஸ் ஸ்பீக்கரை பயன்படுத்தும் போது விழாக்கால மனநிலையை அமைத்துத்தருகிறது.
ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய “ஆட்டம்” என்னும் வயர்லெஸ் ஸ்பீக்கரில் 60 LED ஒளி விளக்குகளுடன் கூடிய ஸ்பீக்கர், தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்தி, எப்படிப்பட்ட விழாவையும் சிறப்பிக்கிறது.
சிறியதாக இருப்பினும் சிறந்த நவீன வசதிகளுடன், ‘ஆட்டம்’ ஸ்பீக்கர் ஒரு ஆர்ச் ஐ போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 60 LED விளக்குகள் மூலம் இதமான மஞ்சள் நிற ஒளி மூவம் அறையை அலங்கரிக்கிறது. மிகச் சிறந்த ஒலியுடன் கூடிய ஒரு சிறந்த பொழுதுபோக்கை நிச்சயமாக அனுபவிக்கலாம்.

இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, ஆதாவது நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள் மூலம் நீங்கள் பாடல் வரிசைகளை மாற்றலாம் அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.
“நாங்கள் எங்களது புதிய பண்டிகை கால படைப்பான 2 இன் 1 ஸ்பீக்கர் மற்றும் விளக்கைக் கொண்ட சாதனத்தை அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறோம்; இந்த வயர்லெஸ் ஸ்பீக்கர் ஒரு சிறந்த பண்டிகை கால பொருளாகவும், விளக்குகள் கொண்டு ஒளிர்வதால் நண்பர்களுக்கு பரிசாகவும் அளிக்க சிறப்பாக இருக்கும்." என ஜெப்ரானிக்ஸ் நிறுவன இயக்குனர் திரு. பிரதீப் தோஷி தெரிவித்தார்.
ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.1,699 விலையில் கிடைக்கும் ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் இந்தியா முழுக்க பல்வேறு முன்னணி கடைகளில் கிடைக்கிறது.
ஹெச்.டி.சி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்செயின் ஸ்மார்ட்போனான எக்சோடஸ் 1 அறிமுகம் செய்யப்பட்டது. #HTCExodus #Exodus1
ஹெச்.டி.சி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய பிளாக்செயின் ஸ்மார்ட்போன் எக்சாடஸ் 1 அறிமுகம் செய்யப்பட்டது. எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வதில் துவங்கி முழுமையாக பிளாக்செயின் என்க்ரிப்ஷனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி.சி. எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டகம் (செக்யூர் என்கிளேவ்) வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் தங்களது விவரங்களை ஆன்ட்ராய்டு தளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதில் கிரிப்டோ குறியீடுகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.
மேலும் உங்களது போன் தொலைந்து போனாலோ அல்லது குறியீட்டை நீங்கள் மறந்து போனாலோ ஹார்டுவேரில் காணாமல் போன குறியீடுகளை கண்டறிய எளிய வழிமுறையை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.
Genesis Block. Exodus Phone.
— HTC EXODUS (@htcexodus) October 23, 2018
This is official early access release to the EXODUS 1. We are inviting a community of developers and enthusiasts to work with us to keep building security. Join us in rebuilding trust together, one phone at a time. Get your early access now! pic.twitter.com/sPcNc7wnzj
ஏ.பி.ஐ. மற்றும் மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் எக்சோடஸ் 1 பிரத்யேக ஹார்டுவேரை பயன்படுத்தி குறியீடுகளை பாதுகாக்கவோ பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த விரைவில் அனுமதி வழங்குவதாக ஹெச்.டி.சி. அறிவித்துள்ளது.
எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனில் ஹெச்.டி.சி. யு12 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹெச்.டி.சி. எக்சோடஸ் 1 மாடலில் 6.0 இன்ச் QHD பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி. டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பொக்கே எஃபெக்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ, IP68 தரச்சான்று பெற்ற டஸ்ட்-வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போன் அமெரிக்கா, தாய்வான், ஹாங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரிட்டன், ஆஸ்த்ரியா, நார்வே மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை பிட்காயின் அல்லது எத்திரியம் மூலம் வாங்க முடியும்.
விலையை பொருத்த வரை எக்சோடஸ் 1 0.15 பிட்காயின் அல்லது 4.78 எத்திரியம் (இந்திய மதிப்பில் ரூ.70,565) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வினியோகம் டிசம்பர் மாதம் துவங்குகிறது.
சியோமியின் பிளாக் ஷார்க் தனது புதிய கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. வரை ரேம் வழங்கப்பட்டுள்ளது. #BlackSharkHelo #gaming
சியோமியின் பிளாக் ஷார்க் ஹீலோ கேமிங் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.01 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், இரண்டு லிக்விட் கூலிங் பைப்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது ஸ்மார்ட்போனின் சி.பி.யு. கோர் வெப்பத்தை 12-டிகிரி வரை சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் என பிளாக் ஷார்க் தெரிவித்துள்ளது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் RGB லோகோ ஏ.ஐ. கேமிங் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் பிரத்யேக டூ-ஸ்டேஜ் ஷார்க் கீ தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. கூடுதலாக கழற்றக்கூடிய கேம்பேட் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ சிறப்பம்சங்கள்
- 6.01 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஜாய் UI
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.75, 1.25µm பிக்சல், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 1.0µm பிக்சல், f/1.75
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.0µm, f/2.2
- கைரேகை சென்சார்
- டூயல் ஸ்மார்ட் PA, ஹைபை ஆடியோ, டூயல் முன்பக்க ஸ்பீக்கர்கள்
- உயர் ரக கேமிங் மோடிற்கென இரு-ஸ்டேக் ஷார்க் கீ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவிக் சார்ஜ் 3.0
சியோமி பிளாக் ஷார்க் ஹீலோ ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.37,100) என்றும் 10 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.44,520) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதன் விற்பனை அக்டோபர் 30ம் தேதி முதல் துவங்குகிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு உறுதி செய்திருக்கிறார். #Huawei
ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
முன்னதாக மடிக்கக்கூடிய வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக ஜூலை மாதத்தில் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான செலவை 15 பில்லியன் டாலர்களில் இருந்து 20 பில்லியன் டாலர்களாக உயர்த்தியதாக அறிவித்தது.
அடுத்த ஆண்டு வாக்கில் ஹூவாய் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என அவர் தெரிவித்தார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் மேட் 20X போன்றே பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹூவாய் மடிக்கக்கூடிய போன் குறித்த விவரங்கள் முதற்கட்டமாக ஜூலை மாதத்தில் வெளியானது. எனினும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சில ஆண்டுகளாக தகவல் வெளியாகி வருகிறது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது.
இத்துடன் சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் நுகர்வோர் மின்சாதன விழாவில் நடைபெற்ற தனியார் அரங்கில் பிரீவியூ செய்யப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனின் விலை KRW 20,00,000 (இந்திய மதிப்பில் ரூ.1,30,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.
5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குவதில் ஹூவாய் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஹூவாய் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெர்ச்சு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vertu #smartphone
வெர்ச்சு நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லண்டனில் வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக வெர்ச்சு அறிவித்து இரண்டு ஆண்டுகள் கழித்து புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் டைட்டானியம் அலாய் ஃபிரேம், சஃப்பையர் கிளாஸ் ஸ்கிரீன் மற்றும் உண்மையான லெதர் மூலம் செய்யப்பட்ட பின்புற பேக் பேனல் உள்ளிட்டவை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் பாரம்பரிய கான்சீர்ஜ் பட்டன் பக்கவாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயண திட்டங்கள், உணவகங்களில் முன்பதிவு மற்றும் பல்வேறு அம்சங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெர்ச்சு ஆஸ்டெர் பி சிறப்பம்சங்கள்:
- 4.97 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா-கோர் பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- பின்புற சிம் கார்டு டிரே
- வி டாக் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பம்
- 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவிக் சார்ஜ் 3.0
வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் தவறானவர்கள் கைகளில் கிடைத்தால், ஸ்மார்ட்போன் தானாக லாக் ஆகச் செய்யும் பிரத்யகே ஆப் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான சாதனங்களை போன்று இல்லாமல், ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போனில் பிரெசிஷன் மெட்டல் உபகரணங்கள், பிரத்யேக வடிவமைப்பு உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்ட மெக்கானிக்கல் வாட்ச்களில் வழங்கப்படுவதை போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போனின் கேஸ் கிரேடு 5 டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது இருமடங்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் உறுதித் தன்மை மற்றும் மிக குறைந்த எடை கொண்டுள்ளது. வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் பரோக் சீரிஸ் பிளாக், ஜென்டில்மேன் புளு, கேரமெல் பிரவுன் மற்றும் டுவைலைட் ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

புதிய வெர்ச்சு ஆஸ்டெர் பி ஸ்மார்ட்போன் JD.com வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை 29,800 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,08,550 முதல் துவங்குகிறது. புதிய வெர்ச்சு ஸ்மார்ட்போனின் கோதிக் சீரிஸ் மாடல் பிளாக் ஜேட் மற்றும் வைட் மூன் நிறங்களில் கிடைக்கிறது.
கோதிக் சீரிஸ் மாடல் மாடல் விலை 35,800 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,74,670 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெர்ச்சு விலை உயர்ந்த மாடலான ஆஸ்டெர் பி டேஸ்லிங் கோல்டு வேரியன்ட் விலை 98,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,37,385 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட இருப்பது இணையத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. #Samsung
சாம்சங் 2018 OLED நிகழ்வில், அந்நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டது. இவை பெரும்பாலும் OLED சார்ந்த தொழில்நுட்பங்களாகவே இருந்தன.
சாம்சங் அறிவிப்புகளில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்-ஸ்கிரீன் கேமரா சென்சார் தொழில்நுட்பம், டச்-சென்சிட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்கிரீன் சவுன்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ள நிலையில், இவை வரும் காலத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய தொழில்நுட்பம் முன்பக்க கேமராவினை டிஸ்ப்ளேவின் கீழ் மறைக்கும். மேலும் இந்த தொழில்நுட்பம் ப்ரோடோடைப்களில் முழுவீச்சில் சோதனை செய்யப்படுவதாகவும், இவை 2020-ம் ஆண்டு வாக்கில் பரவலாக வழங்கப்படலாம் என சாம்சங் அறிவித்துள்ளது.
கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்திற்கான சோதனைகள் துவக்க நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்-டிஸ்ப்ளே கேமரா மட்டுமின்றி, சாம்சங் நிறுவனம் புதிதாக கேமிங் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மாபர்ட்போனின் திரையில் ஹேப்டிக் ஆன்-டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில் கேம் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகவில்லை.
வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. புதிய அம்சங்கள் தற்சமயம் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இதற்கான அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp
வாட்ஸ்அப் செயலியில் வேகெஷன் மோட் எனும் அம்சம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அம்சம் புது மெசேஜ்கள் வரும் போது அவற்றை அன்-ஆர்ச்சிவ் செய்யாமல் இருக்கும். தற்சமயம் சாட் திரையில் புதிய மெசேஜ் வரும் போது தானாக அன்-ஆர்ச்சிவ் செய்யும்.
புதிய அம்சம் பயனர்களுக்கு வழங்கப்படும் போது இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் பார்க்க முடியும். மியூட் அல்லது ஆர்ச்சிவ் செய்யப்பட்ட சாட்கள் அவற்றை நீங்கள் தானாக அன்-மியூட் அல்லது அன்-ஆர்ச்சிவ் செய்யும் வரை அன்-ஆர்ச்சிவ் செய்யப்படாது. இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பிட்ட சாட் உங்களது சாட் லிஸ்ட்-இல் இருக்க கூடாது என நினைக்கும் போது வேகெஷன் மோட் பயனுள்ளதாக இருக்கும். தற்சமயம் சோதனை செய்யப்படும் வேகெஷன் மோட் இதுவரை வழங்கப்படவில்லை. இதேபோன்று, ஆன்டராய்டு தளத்துக்கான வாட்ஸ்அப் செயலியில் மியூட் செய்யப்பட்ட சாட்களுக்கு ஆப் பேட்ஜ்களை மறைக்க வழி செய்கிறது.

புகைப்படம் நன்றி: WABetaInfo
இதேபோன்று வாட்ஸ்அப் அக்கவுன்ட்டை வெளிப்புற சேவைகளுடன் இணைக்கக் கோரும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலிக்கு வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்த அம்சம் மற்ற பயனர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. லின்க்டு அக்கவுன்ட் ஆப்ஷன்கள் ப்ரோஃபைல் செட்டிங்களின் கீழ் வழங்கப்படுகிறது. தற்சமயம் இன்ஸ்டாகிராம் மட்டுமே எக்ஸ்டெர்னல் சேவையாக வழங்கப்படுகிறது. இதை கொண்டு வாட்ஸ்அப் அக்கவுன்ட்டில் இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைலை இணைக்க முடியும்.
லின்க்டு அக்கவுன்ட்ஸ் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மீட்க முடியும். இதை கொண்டு நேரடியாக இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்ய முடியும். புதிய அம்சங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுவதால், இவை பயனர்களுக்கு வழங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
அசுஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Asus #ZenfoneLiteL1
அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 என அழைக்கப்படுகிறது.
சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், சென் யு.ஐ. சார்ந்த ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
- அட்ரினோ 505 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் சென் யு.ஐ. 5.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5P லென்ஸ், PDAF, f/2.0
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
- ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போனுடன் அறிமுகமான சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு கேமராக்களிலும் போர்டிரெயிட் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430
- அட்ரினோ 505 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் சென் யு.ஐ. 5.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.0
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பண்டிகை கால சலுகையாக சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிளிப்கார்ட் இம்மாதம் நடத்த இருக்கும் ஃபெஸ்டிவல் தமாக்கா சேல் விற்பனையில் துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்
புதிய அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக், 50 ஜி.பி. கூடுதல் டேட்டா மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் முழுமையான மொபைல் பாதுகாப்பு சலுகை வழங்கப்படுகிறது.
அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனும் பிளிப்கார்ட் ஃபெஸ்டிவல் தமாக்கா சேல் விற்பனையில் துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்
புதிய அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக், 50 ஜி.பி. கூடுதல் டேட்டா மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் முழுமையான மொபைல் பாதுகாப்பு சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
ஹூவாய் மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ மாடல்களுடன் மேட் 20 X ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. #HuaweiMate20X
ஹூவாய் மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களுடன் மேட் 20 X மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போனில் 7.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், உலகில் முதல் முறையாக லிக்விட் மல்டி-டைமென்ஷனல் கூலிங் சிஸ்டம் வேப்பர் சேம்பர் மற்றும் கிராஃபீன் ஃபிலிம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக தரமுள்ள கேம் விளையாடும் போதும் சாதனத்தை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே மேட் 20 X ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா லெய்கா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புற கைரேகை சென்சார், IP53 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் என்கிரேவ் செய்யப்பட்ட கிளாஸ் பேக் பேனல் வழங்கப்பட்டுள்ளதால், கைகளில் இருந்து நழுவாமலும், கைரேகைகள் பதியாமல் இருக்கும். 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஹானர் மேட் 20 X ஸ்மார்ட்போனில் ஹூவாய் சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 20 X சிறப்பம்சங்கள்:
- 7.2 இன்ச் 2244x1080 பிக்சல் FHD+ OLED 18.7:9 DCI-P3 HDR டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 720 MHz ARM மாலி-G76MP10 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP53)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போன் ஃபேன்டம் சில்வர் மற்றும் மிட்நைட் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 899 யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.76,275 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாய் மேட் 20 X ஸ்மார்ட்போன் லண்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.






