என் மலர்

  நீங்கள் தேடியது "EXODUS 1"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹெச்.டி.சி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளாக்செயின் ஸ்மார்ட்போனான எக்சோடஸ் 1 அறிமுகம் செய்யப்பட்டது. #HTCExodus #Exodus1  ஹெச்.டி.சி. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய பிளாக்செயின் ஸ்மார்ட்போன் எக்சாடஸ் 1 அறிமுகம் செய்யப்பட்டது. எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வதில் துவங்கி முழுமையாக பிளாக்செயின் என்க்ரிப்ஷனுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

  ஹெச்.டி.சி. எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு பெட்டகம் (செக்யூர் என்கிளேவ்) வழங்கப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் தங்களது விவரங்களை ஆன்ட்ராய்டு தளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதில் கிரிப்டோ குறியீடுகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

  மேலும் உங்களது போன் தொலைந்து போனாலோ அல்லது குறியீட்டை நீங்கள் மறந்து போனாலோ ஹார்டுவேரில் காணாமல் போன குறியீடுகளை கண்டறிய எளிய வழிமுறையை இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.   ஏ.பி.ஐ. மற்றும் மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் எக்சோடஸ் 1 பிரத்யேக ஹார்டுவேரை பயன்படுத்தி குறியீடுகளை பாதுகாக்கவோ பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த விரைவில் அனுமதி வழங்குவதாக ஹெச்.டி.சி. அறிவித்துள்ளது. 

  எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போனில் ஹெச்.டி.சி. யு12 பிளஸ் மாடலில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹெச்.டி.சி. எக்சோடஸ் 1 மாடலில் 6.0 இன்ச் QHD பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, டூயல் பிரைமரி கேமரா, 8 எம்.பி. டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது.

  இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பொக்கே எஃபெக்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ, IP68 தரச்சான்று பெற்ற டஸ்ட்-வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  எக்சோடஸ் 1 ஸ்மார்ட்போன் அமெரிக்கா, தாய்வான், ஹாங்காங், சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரிட்டன், ஆஸ்த்ரியா, நார்வே மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை பிட்காயின் அல்லது எத்திரியம் மூலம் வாங்க முடியும். 

  விலையை பொருத்த வரை எக்சோடஸ் 1 0.15 பிட்காயின் அல்லது 4.78 எத்திரியம் (இந்திய மதிப்பில் ரூ.70,565) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வினியோகம் டிசம்பர் மாதம் துவங்குகிறது.
  ×