என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஹூவாய் துணை பிரான்டான ஹானர் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Honor8X



    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டு ஆன ஹானர் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 8X என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். 

    ஹானர் 8X ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹைசிலிகான் கிரின் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் டூயல் கேமரா யூனிட், 20 எம்.பி. + 2 எம்.பி. சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 16 எம்.பி. முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 



    ஹானர் 8X சிறப்பம்சங்கள்:

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
    - மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற இருக்கிறது.

    இந்தியாவில் புதிய ஹானர் 8X ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5, சியோமி Mi ஏ2, மோட்டோரோலா ஒன் பவர் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைகிறது.
    விவோ நிறுவனம் சத்தமில்லாமல் புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது விவோ வி11 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். #VivoZ3i



    விவோ நிறுவனம் சத்தமில்லாமல் புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விவோ இசட்3ஐ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ வி11 ஸ்மார்ட்போனின் ரீபிரான்டு செய்யப்பட்ட மாடல் ஆகும்.

    இதே ஸ்மார்ட்போன் முன்னதாக தாய்லாந்திலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. விவோ இசட்3ஐ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2280 சூப்பர் AMOLED, 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P60 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சங்கள் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த விவோ வி11 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.



    விவோ இசட்3ஐ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2280 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 பிராசஸர்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0
    - கைரேகை சென்சார்
    - 3315 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ இசட்3ஐ ஸ்மார்ட்போன் சீனாவில் CNY 2,398 இந்திய மதிப்பில் ரூ.25,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ இசட்3ஐ ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் மில்லினியம் பவுடர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் விவோ இசட்3ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டு, பின் விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.20,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    கேசியோ இந்தியா நிறுவனம் தனது ஏவியேஷன் கான்செப்ட் கிராவிட்டிமாஸ்டர் சீரிஸ் புதிய வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #GShock



    கேசியோ இந்தியா நிறுவனம் தனது ஏவியேஷன் கான்செப்ட் ஆன கிராவிட்டி மாஸ்டர் சீரிசில் புதிய ஷாக்-ரெசிஸ்டன்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. ஜி.ஆர்.-பி100 வாட்ச் ஸ்மார்ட்போன் செயலியுடன் ப்ளூடூத் மூலம் இணைந்து கொண்டு நேரம் மற்றும் அம்சங்களை வழங்குகிறது.

    புதிய ஜி.ஆர்.-பி100 வாட்ச்சில் கவுன்ட் டவுன் அலாரம் எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்கு கவுன்ட் டவுன் வழங்கும். ஒவ்வொரு நிகழ்வுக்குமான கவுன்ட் டவுன் வாட்ச்சில் உள்ள நொடிகளுக்கு கீழ் தெரியும். இத்துடன் ஃபிளைட் லாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சம் கொண்டு லொகேஷன் விவரம் மற்றும் நேரத்தை பதிவு செய்ய முடியும். இதனால் செயலியில் இருந்தபடியே மேப் மூலம் வழிகளை பார்க்க முடியும். வாட்ச்சின் ஃபேஸ் டிசைன் விமானத்தின் காக்பிட் இன்டிகேட்டர்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மணி மற்றும் நொடிகள், இன்டெக்ஸ் மார்க் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள விவரங்களை வழங்குகிறது. 

    வாட்ச் ஃபேசில் பெரிய, ஹெச்.டி. எல்.சி.டி. வழங்கப்பட்டு இருப்பதால், எழுத்து மற்றும் எண்களை தெளிவாக பார்க்க முடியும். வாட்ச் செட்டிங்களில் உலக நேரம் மற்றும் அலாரம் உள்ளிட்டவற்றை செயலியில் இருந்தே இயக்க முடியும். வாட்ச்சில் உள்ள ஆறு பட்டன்கள் வெவ்வேறு அம்சங்களை வழங்குகிறது.
    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டான ஹானர் உருவாக்கி வரும் ஸ்லைட் போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Honormagic2



    ஹூனர் பிரான்டு மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

    2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் மூலம் ஸ்லைடர் கேமராவை ஹானர் வழங்குகிறது. அந்த வகையில் ஸ்லைடிங் வடிவமைப்பு கொண்ட ஹானர் ஸ்மார்ட்போனின் டீசர் இணையத்தில் வலம் வருகிறது.

    அதன்படி ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்லைடிங் கேமரா அம்சம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதன் கேமரா ஸ்லைடர் மேஜிக் ஸ்லைட் என அழைக்கப்பட இருப்பது புதிய டீசரில் அம்பலமாகியுள்ளது.



    சீனாவின் பிரபல வீடியோ வலைதள் ஒன்றில் ஹானர் மேஜிக் 2 டீசர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ போன்று காட்சியளிக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் ஸ்லைடிங் அம்சம் டீஸ் செய்யப்பட்டு இருந்த நிலையில், இம்முறை சில விவரங்கள் கிடைத்திருக்கிறது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு ஸ்மார்ட்போனின் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் ஃபிளாஷ் லைட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. 

    முன்னதாக வெளியான விவரங்களில் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    ஹானர் நிறுவனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் உருவாகியுள்ளது.
    நான்கு பிரைமரி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyA9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது.

    இதில் 24 எம்.பி சென்சார்,  f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

    6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
    - 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
    - 5 எம்.பி டெப்த் கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஐரோப்பாவில் இதன் விலை 599 யூரோக்களில் (இந்திய மதிப்பில் ரூ.51,300) துவங்குகிறது. ரஷ்யாவில் இதன் விலை 39,990 ரூபல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.44,444) என்றும், லண்டனில் 549 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,720) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Nokiamobile



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேரமா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா 3.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நோக்கியா 3.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி., 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி., 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் புளு, வைட் மற்றும் பேல்டிக் நிறங்கஅளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு 1000 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.
    ஸ்கல்கேன்டி நிறுவனம் இந்தியாவில் புதிய ஓவர்-இயர் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #venue #headphones



    ஸ்கல்கேன்டி நிறுவம் இந்தியாவில் வென்யூ என்ற பெயரில் புதிய ஓவர்-இயர் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹெட்போன்கள் உறுதியாகவும், குறைந்த எடையில் பிரீமியம் பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில், குஷன் வைத்த ஹெட்பேன்ட் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஹெட்போன்களில் உள்ள மென்மையான ஃபோம் காதுகளில் இதமான உணர்வை ஏற்படுத்துகின்றன.

    ரேபிட் சார்ஜ் வசதி கொண்ட ஹெட்போன்களில் 24 மணி நேர பேட்டரி பேக்கப், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் ஃபைன்ட் யுவர் ஹெட்போன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மானிட்டர் மோட் மற்றும் ஆக்டிவ் அசிஸ்டன்ட் வசதியை வழங்குகிறது. 



    ஸ்கல்கேன்டி வென்யூ அம்சங்கள்:

    - ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் வழங்கப்பட்டுள்ளது
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வசதி
    - பில்ட்-இன் டைல் தொழில்நுட்பம்
    - ஆக்டிவ் அசிஸ்டன்ட்
    - பில்ட்-இன் மைக்ரோபோன்
    - மானிட்டர் மோட்
    - 24 மணி நேர பேட்டரி பேக்கப்
    - ரேபிட் சார்ஜ்

    ஸ்கல்கேன்டி வென்யூ ஓவர்-இயர் போன் ஹெட்போன்கள் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்கல்கேன்டி ஹெட்போன்களின் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் ஹோம் ஹப் சாதனம் கூகுளின் மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. #googlehub



    கூகுள் ஹோம் ஹப் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம் ஹப் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையை கொண்டு யூடியூப், கூகுள் போட்டோஸ், காலென்டர், மேப்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை கூகுள் ஹப் டிஸ்ப்ளேவில் இருந்தபடி இயக்க முடியும்.

    கூகுள் அறிமுகம் செய்திருக்கும் ஹோம் ஹப் சாதனத்தில் 7 இன்ச் டஸ் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் கேமரா வழங்கப்படவில்லை, இதனால் வீட்டினுல் நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கலாம். ரொட்டின்ஸ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், கூகுள் ஹப் உங்களது அடுத்த நாள் திட்டங்களை வழங்கும்.



    இதில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் மேட்ச் அம்சம் மூலம் வீட்டில் அதிகபட்சம் ஆறு பேருக்கான தனித்துவ திட்டங்களை அறிந்து கொள்ள முடியும். தொழில்நுட்ப சந்தையில் கிடைக்கும் 1000-க்கும் அதிகமான பிரபல பிரான்டுகளில் சுமார் 10,000க்கும் அதிக ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

    ஹோம் ஹப் சாதனத்தை டிஜிட்டல் போட்டோ ஃபிரேம் போன்று செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் தானாக புகைப்படங்கள் மாறும், இதில் உங்களது சிறப்பான புகைப்படங்கள் மற்றும் தேர்வு செய்யப்படும். இத்துடன் ஸ்பாட்டிஃபை, பன்டோரா, ஐஹார்ட் ரேடியோ மற்றும் இதர இசை சார்ந்த சேவைகளை கூகுள் ஹோம் ஹப் சப்போர்ட் செய்கிறது.



    அலாரம் செட் செய்வது, மின்விளக்குகள், தொலைகாட்சிகள் மற்றும் முன்பக்க கதவை பூட்டுவது போன்ற அம்சங்களையும் கூகுள் ஹோம் ஹப் சப்போர்ட் செய்கிறது. கூகுள் ஹோம் ஹப் வாங்குவோருக்கு ஆறு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது.

    கூகுள் ஹப் சேன்ட், அக்வா, சாக் மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 149 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11,035) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. #GooglePixel3 #GooglePixel3XL



    கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. 

    பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளேவும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் குவாட் ஹெச்.டி., 18:5:9 நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க இரண்டு பிக்சல் போன்களிலும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், டூயல் பிக்சல் ஆட்டோஃபோக்கஸ், டூயல் 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புதிய ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    புதிய பிக்சல் போன்களின் முக்கிய அம்சங்கள்

    டாப் ஷாட் - ஏ.ஐ. சார்ந்த இயங்கும் இந்த அ்மசம் பல்வேறு ஷாட்களை எடுத்து அவற்றில் சிறந்த புகைப்படத்தை தேர்வு செய்யும்.
    சூப்பர் ரெஸ் சூம் - சூம் செய்யும் போதும் துல்லியமான தரம் வழங்கும்.
    நைட் சைட் - குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை அதிக துல்லியமாக எடுக்கலாம்.
    போட்டோபூத் மோட் - ஏ.ஐ. கொண்டு பயனர் சிரிப்பது, நகைச்சுவை பாவணைகளை வழங்குவது, செல்ஃபி எடுக்க தயாராவது போன்றவற்றை கண்டறியும்.

    இரண்டு பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டைட்டன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போனின் ஸ்கிரீனை லாக் செய்து தகவல்களை பாதுகாப்பதோடு, டிஸ்க் என்க்ரிப்ஷனை பலப்படுத்துகிறது.

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் பிக்சல் வரலாற்று சிறப்பு கொண்ட டூயல்-டோன் டிசைன், அலுமினியம் ஃபிரேம், ஹைப்ரிட் கோட்டிங், போனின் முன்புறம் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பிக்சல் போன்கள் முந்தைய மாடல்களை விட 40% அதிக சத்தமாக இருக்கும் என கூகுள் அறிவித்துள்ளது. பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் இவற்றில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.



    கூகுள் பிக்சல் 3 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1080x2160 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்



    கூகுள் பிக்சல் 3 XL சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2880x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 18:5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
    - அட்ரினோ 630 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.8, டூயல் PD ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS, 4K
    - 8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, f/1.8, 75° FOV
    - 8 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் இரண்டாவது செல்ஃபி கேமரா, f/2.2, 97° FOV
    - கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்(IP68)
    - முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்கள்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங்

    பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் கிளியர்லி வைட், ஜஸ்ட் பிளாக் மற்றும் நாட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் கூகுள் பிக்சல் யு.எஸ்.பி.-சி இயர்பட்களுடன் வருகிறது.

    இந்தியாவில் பிக்சல் 3 (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.71,000 என்றும், 128 ஜி.பி. பிக்சல் 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.80,000 என்றும் பிக்சல் 3 XL (64 ஜி.பி.) மெமரி மாடல் விலை ரூ.83,000 என்றும் 128 ஜி.பி. பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன் விலை ரூ.92,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    பிக்சல் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் ஸ்டான்ட் விலை ரூ.6,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு அக்டோபர் 11-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ஏர்டெல் ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இத்துடன் இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையகங்களில் நவம்பர் 1-ம் தேதி முதல் கிடைக்கும்.

    புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட், கிரெடிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போதோ அல்லது நெட்பேங்கிங் பயன்படுத்தும் போது முறையே ரூ.5000 மற்றும் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் பெயர்களில் புதிய வீடியோ காலிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Portal



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் என அழைக்கப்படும் இரண்டு சாதனங்களும் வீடியோ கால் மேற்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய சாதனங்களில் மிக எளிமையாக வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.  

    போரடல் சாதனத்தில் 10 இன்ச் ஹெச்.டி. 1280x800 பிக்சல் டிஸ்ப்ளே, போர்டல் பிளஸ் சாதனத்தில் 15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. போர்டல் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் சவுன்ட் தொழில்நுட்பம் சாதனத்தை தொடாமல் பயன்படுத்த முடியும்.



    ஸ்மார்ட் கேமரா திரையில் உள்ள அனைவரும் தெரியும் படி தானாக சூம் மற்றும் அசைந்து கொள்ளும். ஸ்மார்ட் சவுன்ட் அம்சம் பின்னணி சத்தத்தை குறைத்து, குரல் ஒலி அளவை உயர்த்துகிறது. போர்டல் சேவை கொண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் கனெக்ஷன்களை மெசன்ஜரில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியும்.

    மேலும் இந்த சாதனம் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஏழு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இத்துடன் போர்டல் சாதனத்தில் அமேசான் அலெக்சா சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் விளையாட்டு நிகழ்வுகள், வானிலை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதோடு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

    வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், போர்டல் சாதனத்தின் கேமராவை முழுமையாக டிசேபிள் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் ஒற்றை கிளிக் மூலம் கேமரா இயக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியும்.



    போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்களில் கேமரா கவர் வழங்கப்பட்டு இருப்பதால், கேமரா லென்ஸை எப்போது வேண்டுமானாலும் மறைக்க முடியும். கேமரா லென்ஸ் மறைக்கப்பட்ட நிலையிலும் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தொடர்ந்து வரும். போர்டல் பயன்பாட்டை கண்கானிக்கும் வகையில், குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 12 இலக்க கடவுச்சொல் கொண்டு ஸ்கிரீன் லாக் செய்ய முடியும்.

    கடவுச்சொல் மாற்றும் போது ஃபேஸ்புக் கடவுச்சொல் வழங்க வேண்டும். போர்டல் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புகளை ஃபேஸ்புக் கேட்கவோ, பார்க்கவோ செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்டல் அழைப்புகள் பயனர் மட்டும் சம்மந்தப்பட்டது ஆகும். இத்துடன் போர்டல் வீடியோ கால்கள் அனைத்து முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.



    கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் சவுன்ட் போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் போர்டலில் இயங்குவதால், ஃபேஸ்புக் சர்வர்களுக்கு இதில் தொடர்பு இருக்காது. போர்டல் சாதனம் முக அங்கீகார வசதி கொண்டிருக்கவில்லை. மேலும் போர்டல் கொண்டு இசையை கேட்பது, விரும்பிய நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

    அமெரிக்காவில் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனர்கள் ஃபேஸ்புக்கின் portal.facebook.com மற்றும் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விநியோகம் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.

    போர்டல் ஹோம் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,717) என்றும் போர்டல் பிளஸ் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.25,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoG7



    மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக மோட்டோ ஜி6 சீரிஸ் இந்தியாவில் வெளியான நிலையில், அடுத்து மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ் மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

    மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள் வெளியான நிலையில் ஸ்மார்ட்போனின் வீடியோ லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே வெளியான விவரங்களை பொருத்த வரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருப்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் லீக் ஆன வீடியோவை கீழே காணலாம்..,


    சாம்சங் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை புதிய நிறத்தில் வெளியிட்டுள்ளது. #GalaxyS9Plus #GalaxyNote9



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனினை புதிய பர்கன்டி ரெட் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு, மிட்நைட் பிளாக், கோரல் புளு மற்றும் லிலாக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 பிளஸ் போன்றே கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக லேவென்டர் பர்பிள் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது.



    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் லேவென்டர் பர்பிள் மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் பர்கன்டி ரெட் நிற வேரியன்ட்கள் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள், ஆன்லைன் போர்டல் மற்றும் சாம்சங் ஷாப் மையங்களில் கிடைக்கிறது. 

    இத்துடன் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.24,990 மதிப்புள்ள கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலைக்கு வழங்குகிறது. மேலும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் நோட் 9 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    ×