search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google Home Hub"

    கூகுள் நிறுவனத்தின் ஹோம் ஹப் சாதனம் கூகுளின் மேட் பை கூகுள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. #googlehub



    கூகுள் ஹோம் ஹப் சாதனத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம் ஹப் சாதனத்தில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் சேவையை கொண்டு யூடியூப், கூகுள் போட்டோஸ், காலென்டர், மேப்ஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை கூகுள் ஹப் டிஸ்ப்ளேவில் இருந்தபடி இயக்க முடியும்.

    கூகுள் அறிமுகம் செய்திருக்கும் ஹோம் ஹப் சாதனத்தில் 7 இன்ச் டஸ் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் கேமரா வழங்கப்படவில்லை, இதனால் வீட்டினுல் நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கலாம். ரொட்டின்ஸ் எனும் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், கூகுள் ஹப் உங்களது அடுத்த நாள் திட்டங்களை வழங்கும்.



    இதில் வழங்கப்பட்டுள்ள வாய்ஸ் மேட்ச் அம்சம் மூலம் வீட்டில் அதிகபட்சம் ஆறு பேருக்கான தனித்துவ திட்டங்களை அறிந்து கொள்ள முடியும். தொழில்நுட்ப சந்தையில் கிடைக்கும் 1000-க்கும் அதிகமான பிரபல பிரான்டுகளில் சுமார் 10,000க்கும் அதிக ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

    ஹோம் ஹப் சாதனத்தை டிஜிட்டல் போட்டோ ஃபிரேம் போன்று செட் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட நேரத்தில் தானாக புகைப்படங்கள் மாறும், இதில் உங்களது சிறப்பான புகைப்படங்கள் மற்றும் தேர்வு செய்யப்படும். இத்துடன் ஸ்பாட்டிஃபை, பன்டோரா, ஐஹார்ட் ரேடியோ மற்றும் இதர இசை சார்ந்த சேவைகளை கூகுள் ஹோம் ஹப் சப்போர்ட் செய்கிறது.



    அலாரம் செட் செய்வது, மின்விளக்குகள், தொலைகாட்சிகள் மற்றும் முன்பக்க கதவை பூட்டுவது போன்ற அம்சங்களையும் கூகுள் ஹோம் ஹப் சப்போர்ட் செய்கிறது. கூகுள் ஹோம் ஹப் வாங்குவோருக்கு ஆறு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவை வழங்கப்படுகிறது.

    கூகுள் ஹப் சேன்ட், அக்வா, சாக் மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 149 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11,035) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×