search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியுடன் ஃபேஸ்புக் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்
    X

    அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியுடன் ஃபேஸ்புக் வீடியோ காலிங் சாதனம் அறிமுகம்

    ஃபேஸ்புக் நிறுவனம் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் பெயர்களில் புதிய வீடியோ காலிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. #Facebook #Portal



    ஃபேஸ்புக் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் என அழைக்கப்படும் இரண்டு சாதனங்களும் வீடியோ கால் மேற்கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டிருக்கும் புதிய சாதனங்களில் மிக எளிமையாக வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.  

    போரடல் சாதனத்தில் 10 இன்ச் ஹெச்.டி. 1280x800 பிக்சல் டிஸ்ப்ளே, போர்டல் பிளஸ் சாதனத்தில் 15 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. போர்டல் ஸ்மார்ட் கேமரா மற்றும் ஸ்மார்ட் சவுன்ட் தொழில்நுட்பம் சாதனத்தை தொடாமல் பயன்படுத்த முடியும்.



    ஸ்மார்ட் கேமரா திரையில் உள்ள அனைவரும் தெரியும் படி தானாக சூம் மற்றும் அசைந்து கொள்ளும். ஸ்மார்ட் சவுன்ட் அம்சம் பின்னணி சத்தத்தை குறைத்து, குரல் ஒலி அளவை உயர்த்துகிறது. போர்டல் சேவை கொண்டு ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் கனெக்ஷன்களை மெசன்ஜரில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியும்.

    மேலும் இந்த சாதனம் க்ரூப் கால் மேற்கொள்ளும் வசதியும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஏழு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இத்துடன் போர்டல் சாதனத்தில் அமேசான் அலெக்சா சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் விளையாட்டு நிகழ்வுகள், வானிலை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதோடு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இயக்க முடியும்.

    வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், போர்டல் சாதனத்தின் கேமராவை முழுமையாக டிசேபிள் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் ஒற்றை கிளிக் மூலம் கேமரா இயக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியும்.



    போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்களில் கேமரா கவர் வழங்கப்பட்டு இருப்பதால், கேமரா லென்ஸை எப்போது வேண்டுமானாலும் மறைக்க முடியும். கேமரா லென்ஸ் மறைக்கப்பட்ட நிலையிலும் அழைப்புகள் மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் தொடர்ந்து வரும். போர்டல் பயன்பாட்டை கண்கானிக்கும் வகையில், குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 12 இலக்க கடவுச்சொல் கொண்டு ஸ்கிரீன் லாக் செய்ய முடியும்.

    கடவுச்சொல் மாற்றும் போது ஃபேஸ்புக் கடவுச்சொல் வழங்க வேண்டும். போர்டல் சாதனத்தில் மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புகளை ஃபேஸ்புக் கேட்கவோ, பார்க்கவோ செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்டல் அழைப்புகள் பயனர் மட்டும் சம்மந்தப்பட்டது ஆகும். இத்துடன் போர்டல் வீடியோ கால்கள் அனைத்து முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது.



    கூடுதல் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் சவுன்ட் போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் போர்டலில் இயங்குவதால், ஃபேஸ்புக் சர்வர்களுக்கு இதில் தொடர்பு இருக்காது. போர்டல் சாதனம் முக அங்கீகார வசதி கொண்டிருக்கவில்லை. மேலும் போர்டல் கொண்டு இசையை கேட்பது, விரும்பிய நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

    அமெரிக்காவில் போர்டல் மற்றும் போர்டல் பிளஸ் சாதனங்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. பயனர்கள் ஃபேஸ்புக்கின் portal.facebook.com மற்றும் அமேசான் வலைதளத்தில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விநியோகம் நவம்பர் மாதத்தில் துவங்குகிறது.

    போர்டல் ஹோம் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.14,717) என்றும் போர்டல் பிளஸ் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.25,810) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×