என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    எல்.ஜி. நிறுவனம் 16 கேமரா லென்ஸ் கொண்ட ஸமார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #smartphone



    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று, நான்கு கேமராக்களை வழங்கி வருகின்றன.

    இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில் 16 பிரைமரி கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் உருவாக்க இருப்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் 20, 2018 தேதியில் எல்.ஜி. நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பெற்று இருக்கிறது. 



    16 லென்ஸ்களும் ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட்ரிக்ஸ் வடிவில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த லென்ஸ்கள் வெவ்வேறு பரிணாமங்களை கொண்டிருக்கும் என்றும் இவற்றில் பயனர்கள் தேர்வு செய்யும் லென்ஸ்கள் மட்டும் பயன்படுத்த முடியும். வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை ஒன்றிணைத்து அசையும் படமாகவும் மாற்ற முடியும்.

    வெவ்வேறு லென்ஸ்களில் எடுக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தின் ஒரு பகுதியை மற்ற லென்ஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையோ அல்லது புகைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் ஒன்றாக இணைக்க முடியும். இதனை பயனர்கள் எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்ய முடியும்.



    கேமராக்களின் பின்புறம், கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது, இதனை செல்ஃப்-போர்டிரெயிட் ஃபேஷனாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதே காப்புரிமையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் காப்புரிமை விவரங்களில் தெரியவந்துள்ளது.

    எனினும், காப்புரிமை வரைபடங்களில் இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை. ஸ்மார்ட்போனில் ஸ்பீக்கர் கிரில் பின்புறம் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்பீக்கர் ஸ்மார்ட்போனின் முன்புற ஸ்பீக்கருடன் இணைந்து ஸ்டீரியோ சவுன்ட் வழங்கும்.
    ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. #OppoA7



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஒப்போ ஏ7 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்டது. புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் நேபால் மற்றும் சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 1520x720 பிக்சல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பேக்கப் வழங்கும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ஏ7 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
    - டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி செல்ஃபி கேமரா
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் கிளேரிங் கோல்டு, கிளேஸ் புளு நிறங்களில் கிடைக்கும் நிலையில் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
    ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #HuaweiMate20Series #Smartphones




    ஹூவாய் நிறுவனம் போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போனினை இந்தியாவில் நவம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே தினத்திள் ஹூவாய் நிறுவனம் தனது மேட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    புதிய போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 20 ஆர்.எஸ். மாடல் பிரத்யேக ஆடம்பர வடிவமைப்புடன் இந்தியாவில் வெளியாக இருக்கும் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் ஆகும்.



    போர்ஷ் வடிவமைப்பு மற்றும் ஹூவாய் இணைந்து முற்றிலும் அழகிய ஸ்மார்ட்போனினை கச்சிதமாக வடிவமைத்துள்ளன. அதிகளவு உறுதியுடன், அதேசமயத்தில் அழகாக காட்சியளிக்கும் படி புதிய ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    போர்ஷ் பிரான்டிங்கிற்கு ஏற்ற ஆடம்பரம், ஹூவாயின் நேர்த்தியான வடிவமைப்பு இணைந்து ஸ்மார்ட்போனின் தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

    ஆடம்பர மொபைல் அம்சங்களுடன், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தலைசிறந்த கேமரா, ஒட்டுமொத்த செயல்திறன் உள்ளிட்டவை புதிய மேட் 20 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருக்கும். 



    போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 20 ஆர்.எஸ். ஸ்மார்ட்போன் ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஹூவாயின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக மேட் 20 சீரிஸ் இருக்கிறது.

    ஹூவாய் மேட் 20 சீரிஸ் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி மெமரி வேரியன்ட் விலை 1,695 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,44,000) என்றும் மேட் 20 ஆர்.எஸ். 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை 2,095 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,78,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் இந்திய விலை இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
    எல்.ஜி. நிறுவனம் உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான பெயர்களை காப்புரிமை செய்து வருகிறது. #LG #foldablephone
     


    எல்.ஜி. நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வாங் ஜியோங் வான் சமீபத்தில் அறிவித்தார். புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை எல்.ஜி. நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    எனினும், இதுவரை எல்.ஜி.யின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் பெயர் அறியப்படாமலே இருந்தது. சமீபத்தில் எல்.ஜி. பதிவு செய்து இருக்கும் காப்புரிமைகளில் எல்.ஜி. நிறுவனம் தனது மடிக்கக்கூடிய மொபைல் போன் மாடல்களில் வழங்க பரிசீலனை செய்து வைத்திருக்கும் பெயர்கள் தெரியவந்துள்ளது.

    எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் ஐரோப்பிய காப்புரிமை அலுவலத்தில் நவம்பர் 21, 2018 தேதியன்று பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் புதிய பிரான்டு பெயர்கள் இடம்பெற்றுள்ளது.



    அதன்படி புதிய ஸ்மார்ட்போன்களில் ஃபிளெக்ஸ், ஃபோல்டி மற்றும் டூப்லெக்ஸ் உள்ளிட்ட பெயர்களை சூட்ட இருப்பது தெரியவந்துள்ளது. மூன்று காப்புரிமை விண்ணப்பங்கள் படிவம் 9 என குறிப்பிடப்பட்டு இருப்பதால், இவை ஸ்மார்ட்போன் மாடல்களில் சூட்டப்படுகிறது.  

    எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என எல்.ஜி. பதிவு செய்திருந்த பல்வேறு காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருந்தது. இவை வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருந்ததால், இறுதி வடிவம் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. 

    இரண்டு டிஸ்ப்ளேவுடன் டூப்ளெக்ஸ் என்ற பெயரில் எல்.ஜி. நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை பதிவு செய்திருந்தது. டூப்ளெக்ஸ் என்றால் இரண்டு என அர்த்தம் ஆகும். எல்.ஜி. ஃபிளெக்ஸ் மற்றும் எல்.ஜி. ஃபோல்டி பெயர் அடிப்படையில் ஒன்றாக தெரிகிறது, ஃபோல்டி என்றால் மடிக்கக்கூடியதாகும்.

    2014ம் ஆண்டில் எல்.ஜி. நிறுவனம் எல்.ஜி. ஜி ஃபிளெக்ஸ் ஸ்மார்ட்போனினை வளைந்த ஸ்கிரீனுடன் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்துள்ளார். #mimix3 #5G



    சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. Mi மிக்ஸ் 3 அறிமுகமானதும், இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது. அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் சோதனை செய்யப்படுவதாக அந்நிறுவன தலைவர் லின் பின் தெரிவித்தார்.

    லின் பின் தனது வெய்போ அக்கவுன்ட்டில் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் Mi மிக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு பை இயங்குதளத்தின் ஸ்டாக் வெர்ஷனை கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் வலது புற மேல்பக்கம் 5ஜி நெட்வொர்க் காணப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: Weibo

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் அறிமுகமாகும் போது ஆன்ட்ராய்டு 9 பை மற்றும் சமீபத்திய MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும். புதிய 5ஜி வேரியன்ட் புதிய சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்குமா அல்லது, பழைய சிறப்பம்சங்களுடன் வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனையும், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேம்படுத்தப்பட்ட Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், Mi மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் அதிக சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் Mi மிக்ஸ் 3 5ஜி வேரியன்ட் Mi மிக்ஸ் 3 போன்ற வடிவமைப்புடன், புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம்.
    சியோமி நிறுவனத்தின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #RedmiNote6Pro #Xiaomi



    இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ மாடலில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், நாட்ச், 19:9 ரக டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி மற்றும் டூயல் செல்ஃபி கேமரா யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு கேமரா யூனிட்களிலும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமி இந்தியாவின் நான்கு கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடலாக அமைந்துள்ளது. அதன்படி 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப், புகைப்படங்களை அழகாக்கும் விசேஷ ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. + 2 எம்.பி. டூயல் செல்ஃபி கேமரா சென்சார், 1.8μm பிக்சல் சென்சார் 
    கொண்டிருக்கிறது.



    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9, 1.4μm பிக்சல், டூயல் பிடி ஃபோக்கஸ், EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.0, 1.8μm
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளாக், புளு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைதளம், பிளிப்கார்ட் தளங்களில் நாளை (நவம்பர் 23) மதியம் 12.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. 



    அறிமுக சலுகைகள்:

    புதிய ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் ஃபிரைடே சிறப்பு விற்பனையில் 4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.12,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது கூடுதலாக ரூ.5,00 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்துவோருக்கு ரூ.2,400 வரை உடனடி தள்ளுபடி மற்றும் அதிகபட்சம் 6000 ஜி.பி. அதிவேக 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்களும் இணையத்தில் லீக் ஆகி வருகிறது. #GalaxyS10



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட அடுத்த தலைமுறைய M9 டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் டயோட் பம்ப்டு சாலிட் ஸ்டேட் (DPSS) செல்ஃபி கேமர மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்களுக்கென லேசர் டிரில் செய்யப்பட்டிருக்கும்.

    சாம்சங் டிஸ்ப்ளே தரம் உறுதியாக இருக்கும் என்பதால், இவ்வகை டிஸ்ப்ளே பேனல்களை சாம்சங் வழங்க இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் மூன்று நாட்ச் கொண்ட ஸ்கிரீன்களை அறிமுகம் செய்தது. அவற்றில் ஒன்று இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே, அதாவது செல்ஃபி கேமராவுக்கென வட்ட வடிவ கட்-அவுட் கொண்டிருக்கிறது. 

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் பேனலில் இரண்டு ஓட்டைகள் இருக்கும் என்றும், இதில் ஒன்று செல்ஃபி கேமராவிற்கும் மற்றொன்று இன்ஃப்ராரெட் சென்சாருக்கானது என கூறப்படுகிறது. இரண்டு ஓட்டைகளும் லேசர் டிரில் மூலம் டயோட் பம்ப் செய்யப்பட்டிருக்கும்.


    புகைப்படம் நன்றி: Wcftech

    இதற்கென சாம்சங் நிறுவனம் எஸ்.எஃப்.ஏ., ஃபில் ஆப்டிக்ஸ் மற்றும் வொனிக் ஐ.பி.எஸ். லேசர் உபகரணங்களை கொண்டு டிரில் செய்யும் என கூறப்படுகிறது. எனினும், இந்த வழிமுறையில் திருப்தி ஏற்படாத பட்சத்தில் மாற்று வழிமுறையை பயன்படுத்தலாம் என தெரிகிறது.

    கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிற்கான OLED பேனல்கள், சாம்சங் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேக்களை விட அதிக தரமுள்ளதாக இருக்கும். தனது கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களில் சாம்சங் நிறுவனம் M9 என அழைக்கப்படும் OLED பேனல்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. தற்போதைய எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் M8 ரக பேனல்களை கொண்டிருக்கிறது.
    ஒப்போவின் ரியல்மி பிரான்டு புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீடு, விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RealmeU1 #smartphone



    ரியல்மி பிரான்டு மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை யு சீரிஸ் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய ஸமார்ட்போன் ரியல்மி யு1 என அழைக்கப்படும் என்றும், இது நவம்பர் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதில் ரியல்மி 2 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என்றும், அதிகபட்சமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 

    இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.



    அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

    ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும். 

    இவ்வாறு வீடியோ பார்க்கும் போது அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெசஞ்சரின் புது அம்சம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்து வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஃபேஸ்புக்கில் இருந்து யு.ஆர்.எல். முகவரியை பதிவு செய்ய முடியும் என்றும், மெசஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி மெசேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடியூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை விவரங்களைத் தொடர்ந்து பார்ப்போம். #Huawei #foldablephone



    ஹூவாய் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக ராயோல் நிறுவனம் ஃபிலெக்ஸ்பை என்ற பெயரில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பின் தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எவ்வாறு இருக்கும் என்பதை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் நிறுவனத்தின் மேற்கு ஐரோப்பிய பகுதிக்கான தலைவர் வின்சென்ட் பேங் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹூவாயின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனே அந்நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஐரோப்பியர்களுக்கு 5ஜி சேவைகள் அதிவேகமாக வழங்குவதில் ஐரோப்பியா தீவிரம் காட்டுவதாக தெரிகிறது என ஹூவாய் நுகர்வோர் வியாபாரக் குழு தலைவர் வால்டர் ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனத்தின் வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் புதிய பேட்டரி மற்றும் போட்டோ தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஹூவாய் அதிகளவில் முதலீடு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆய்வு மற்றும் உற்பத்தி துறையில் மட்டும் சுமார் 1300 முதல் 1800 கோடி யூரோக்களை முதலீடு செய்யும் மிகப்பெரும் தனியார் நிறுவனமாக ஹூவாய் இருப்பதாக சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஹூவாயின் மடிக்கக்கூடிய 5ஜி சாதனம் எவ்வாறு அழைக்கப்படும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எனினும், ஹூவாய் மடிக்கக்கூடிய சாதனம் அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என பேங் தெரிவித்திருக்கிறார்.
    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லைவ் படங்களைத் தொடர்ந்து முதல் முறையாக பிரெஸ் ரென்டர்கள் வெளியாகி இருக்கிறது. #motorola



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் ஆக்ஸடு மாத வாக்கில் இணையத்தில் லீக் ஆகியிருந்தது. இம்முறை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் பிரெஸ் ரென்டர்கள் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் XT-1965 என்ற மாடல் நம்பருடன் அமெரிக்காவின் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது.

    அந்த வகையில் புது ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ ஜி6 போன்றே, மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனிலும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. டூயல் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படும் மோட்டோரோலா லோகோவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் கீழ் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: MR Gizmo

    மோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் என மூன்று வித நிறங்களில் வெளியாகலாம் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாத வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ள புது அப்டேட் மூலம் உங்களது பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியின் புது அப்டேட் மூலம் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தினமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. எனினும் மியூட் செய்யும் வசதி சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டா செயலியை பயனர்கள் அதிகளவு இயக்குவதற்கான வசதிகள் சேர்க்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய வசதி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் போன்ற அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனமும் அறிவித்து இருந்தது, எனினும் இதற்கான அப்டேட் அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை.



    “ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்,” என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் வெல்-பீயிங் பிரிவு தலைவர் அமீத் ரனடைவ் தனது வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.

    புது வசதிகளை இயக்க விரும்பும் பயனர்கள் தங்களது ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும், இனி ஹேம்பர்கர் ஐகானை கிளிக் செய்தால் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் காணப்படும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செயலியை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

    டேஷ்போர்டின் கீழ் தினசரி ரிமைன்டர் செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம். பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும், இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும். எனினும், இந்த ஆப்ஷனை எந்நேரமும் நிராகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

    இதேபோன்று நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் சென்றால் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் செட்டிங் காணப்படும். இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷன்கள் நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.
    ×