என் மலர்
புதிய கேஜெட்டுகள்
டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா சென்சார் கொண்ட ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனின் புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. #Huawei #HuaweiNova4
டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா சென்சார் கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போனின் புது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசர் வீடியோவின் படி இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா சென்சார் ஸ்மார்ட்போனின் இடதுபுற ஓரமாக பொருத்தப்பட்டு இருப்பது தெரிகிறது. ஹூவாய் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டிருந்தது.
அதில் ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போன் டிசம்பர் 17ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என ஹூவாய் அறிவித்திருந்தது. அந்த வகையில் டிஸ்ப்ளேவில் சிறிய துளை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் நிறுவனமாக ஹூவாய் இருக்கும்.

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் நாட்ச் டிஸ்ப்ளேவிற்கு மாற்றாக, டிஸ்ப்ளேவில் சிறிய துளையிட்டு அதில் செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. ஹூவாய் போன்றே சாம்சங் நிறுவனமும் டிஸ்ப்ளேவில் துளை கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹூவாய் நோவா 4 மாடலில் கேமராவிற்கான துளை வெறும் 4.5 எம்.எம். அளவு கொண்டிருக்கும் என்றும், இதில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் மற்றும் 92% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது. டீசர் புகைப்படத்தின் படி ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல் கீழ்புறமாக காணப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனில் கிரின் 980 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Huawei #HuaweiNova4
விவோ நிறுவனத்தின் நெக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக டூயல் ஸ்கிரீன் இருக்கிறது. #Vivo #smartphone
விவோ நிறுவனம் தனது நெக்ஸ் 2 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டுள்ளது. புது நெக்ஸ் 2 ஸ்மார்ட்போன் டிசம்பர் 11ம் தேதி சீனாவில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய டீசரின் படி நெக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் முற்றிலும் பெசல் இல்லா ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது ஸ்கிரீன் மற்றும் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகின்றன. பின்புறம் பிரைமரி கேமராவை சுற்றி வளையம் ஒன்று காணப்படுகிறது.

புது நெக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் டூயல் கேமராவை சுற்றி வளையம் இருக்கும் நிலையில், மூன்றாவது கேமரா ஒன்று ஸ்மார்ட்போனின் வலது புற ஓரமாக பொருத்தப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனில் செல்ஃபி எடுக்க முன்புறம் கேமரா எதுவும் வழங்கப்படவில்லை என்பதால், முற்றிலும் முழுமையான டிஸ்ப்ளே காணப்படுகிறது.
சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி எளிய ஜெஸ்ட்யூர் மூலம் ஸ்மார்ட்போனின் பின்புறம் இருக்கும் இரண்டாவது ஸ்கிரீனை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், இரண்டாவது மைக்ரோபோன் மற்றும் ஆன்டெனாவிற்கென சிறு கட்-அவுட்கள் இடம்பெற்று இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றொரு டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பதால் பிரைமரி கேமராக்களை அழகிய செல்ஃபிக்களை எடுக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புது நெக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 10 ஜி.பி. வரை ரேம் மற்றும் இன்-ஸ்கிரீன் ஸ்பீக்கர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #Vivo #smartphone
மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்களும் அமெரிக்க வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #motorola
மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.
FCC வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1962 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலின் படி என்.எஃப்.சி. வசதி கொண்ட மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ஐரோப்பியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமாகும் என தெரிகிறது.
கூடுதலாக XT1862-6 மாடல் நம்பர் கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: 91mobiles
மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் எலெக்டிரானிக் காம்பஸ், என்.எஃப்.சி. (சில பகுதிகளில் மட்டும்), டூயல் பேன்ட் வைபை, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதனுடன் 6.0 இன்ச் 19:5:9 ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 12 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் மோட்டோ லோகோவில் கைரைகே சென்சார் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. #motorola #smartphone
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #oneplus #5G
குவால்காம் ஸ்னாப்டிராகன் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்தார். லண்டனில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை 2019ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் இஇ சேவையுடன் ஒன்பிளஸ் 5ஜி சேவையை வழங்க இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் 5ஜி சேவையை வழங்குவதற்காக ஒன்பிளஸ் நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2018ல் ஒன்பிளஸ் 5ஜி ஆராய்ச்சியில் புது சாதனையை படைக்கும் விதமாக முதல் 5ஜி ட்விட் பதிவிட்டது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து 5ஜி சேவையை வழங்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.

2019ம் ஆண்டில் 5ஜி சேவையை வணிக ரீதியாக வழங்குவதற்கான வடிவமைப்பு மற்றும் சாதனங்களை உருவாக்க ஒன்பிளஸ் மற்றும் குவால்காம் பணியாற்றி வருகின்றன.
இதுகுறித்து குவால்காம் தொழில்நுட்ப மாநாட்டில் ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ கூறும் போது,
ஒன்பிளஸ் வெறும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை மட்டுமே உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மட்டுமே எங்களது தேர்வாக இருக்கிறது. இந்த பிராசஸரின் சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் 5ஜி வசதிகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரை சிறப்பான தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் தொடர்ந்து வழங்கும்.
என தெரிவித்தார். #oneplus #5G #Snapdragon855
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. #NokiaMobile #smartphone
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக நோக்கியா X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வசதி கொண்டிருக்கும் இந்த கேமரா புகைப்படங்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.
செல்ஃபி எடுக்க 20 எம்.பி. கேமரா, f/2.0, 1.8μm பிக்சல், ஏ.ஐ. பியூட்டி, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ. ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல் வியூ மோட் கொண்டிருக்கிறது. 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 8.1 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:
- 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 9.0 (பை)
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
- 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர், ஸ்டீல்/காப்பர், ஐயன்/ஸ்டீல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. நோக்கியா 8.1 சர்வதேச எடிஷன் விலை 399 யூரோக்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.31,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #NokiaMobile #smartphone
மெய்சூ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஃபிளாக்ஷிப் மாடலான 16த் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #meizu16th
மெய்சூ ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மெய்சூ 16த் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 91.18% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
மெய்சூ 16த் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, 20 எம்.பி. இரண்டாவது டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
3D கிளாஸ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-67% வரை சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்களே ஆகும்.

மெய்சூ 16த் சிறப்பம்சங்கள்
- 6-இன்ச் 1080x2160 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி (UFS 2.1)
- டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபிளைம் ஓ.எஸ். (Flyme OS)
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX380 சென்சார், 1.55μm பிக்சல், f/1.8, PDAF
- 20 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், சோனி IMX350 சென்சார், f/2.6
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- எம் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புது மெய்சூ ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. #meizu16th #smartphone
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #OPPOR17Pro
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
புது ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே, 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனினை 0.41 நொடிகளில் அன்லாக் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்டுள்ளது. இத்துடன் 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.5 மற்றும் f/2.4 வேரியபிள் அப்ரேச்சர், OIS, மற்றும் 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் 0-40% சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் சார்ஜ் செய்த 40 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் 0-100% சார்ஜ் ஆகிவிடும்.

ஒப்போ ஆர்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
- 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை டிசம்பர் 7ம் தேதி துவங்குகிறது.
அறிமுக சலுகைகள்
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% கேஷ்பேக்
- பேடிஎம் மால் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது
- ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,900 மதிப்புள்ள 3200 ஜி.பி. கூடுதல் டேட்டா
- ரூ.990 மதிப்புள்ள ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும் வசதி
- வட்டியில்லா மாத தவணை முறை வசதி
- பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. #OPPOR17Pro #smartphone
ஹூவாய் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #HuaweiNova4
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஹூவாய் நோவா 4 என்ற மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போன் டிசம்பர் 17ம் தேதி சீனாவில் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அறிவிப்புடன் புது ஸ்மார்ட்போனின் புகைப்பட போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
ஹூவாய் வெய்போ அக்கவுண்ட் மூலம் ஹூவாய் நோவா 4 வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்படும் என்றும், இதில் நாட்ச் இன்றி பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் செல்ஃபி கேமராவிற்கென ஸ்கிரீனில் சிறிய துளையிடப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: Twitter/ Ben Geskin
சில தினங்களுக்கு முன் பென் ஜெஸ்கின் வெளியிட்ட கான்செப்ட் ரென்டரில் புது ஸ்மார்ட்போன் செங்குத்தாக பொருத்தப்பட்ட மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் கிரேடியன்ட் பேக் பேனல் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹூவாய் நோவா 4 ஸ்மார்ட்போனில் கிரின் 980 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் போன்றே சாம்சங் நிறுவனமும் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை டிசம்பர் 10ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் அமெரிக்காவின் எஃப்.சி.சி. வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புது ஸ்மார்ட்போன் வித்தியாச டிஸ்ப்ளே கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. #GalaxyA8s #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமெரிக்காவின் எஃப்.சி.சி. (FCC) வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் கிடைத்திருக்கும் விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 19:5:9 ரக டிஸ்ப்ளே மற்றும் போனின் இடது புற ஒரமாக டிஸ்ப்ளேவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க வலைதளத்தில் SM-G8870 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போனில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி (5V-2A/9V-1.67A) வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதே போன்ற வசதி சாம்சங் நிறுவனம் தனது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனினை இம்மாதம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் வரும் வாரங்களில் தெரியவரும். #GalaxyA8s #smartphone
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #Nokia7plus
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. ஏ.ஐ. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முக அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.
புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
- 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.19,99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க முன்னணி மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் டிசம்பர் 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுக சலுகை:
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 4 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் டேட்டா, மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இத்துடன் நோக்கியா 7.1 மாத தவணையில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பைன்லேப் மூலம் பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது புதிய யு1 ஸ்மார்ட்போன் மாடலுடன் ரியல்மி ப்ட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeBuds
ரியல்மி பிரான்டு தனது புதிய யு1 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனத்தின் முதல் இயர்போன்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன் மாடல்களில் 11 எம்.எம். ஆடியோ டிரைவர்கள், 160% வரை அதிக பேஸ் வெளிப்பாடு இருக்கும்.
மேக்னெடிக் லாக்கிங் வசதி கொண்ட இந்தியாவின் முதல் வயர்டு இயர்போன் மாடலாக ரியல்மி பட்ஸ் இருக்கிறது. இதன் மூலம் புதிய இயர்போன்களை எளிமையாக பயன்படுத்த முடியும். கெவ்லர் ஃபைபர் கார்டு வழங்கப்பட்டு இருப்பதால் வையரிங் கிழியாமல் இருக்கச் செய்வோதோடு பார்க்கவும், பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.
நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளில் வலி ஏற்படாமல் இருக்க ஏதுவாக இயர் டிப்கள் 45 டிகிரி வரை வளைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் சிறப்பம்சங்கள்:
- 11 எம்.எம். டிரைவர்கள்
- இம்பென்டென்ஸ்: 32Ω
- ஒலி அழுத்த அளவு: 106dB
- ஹார்மோனிக் டிஸ்டார்ஷன்: <1% (1KHz, 1mW)
- ஃபிரீக்வன்சி ரேட்: 20-20,000Hz
- ரேட்டெட் பவர்: 3mW
- இன்-இயர் ஹெட்போன்
- இன்-லைன் ரிமோட்
- 1.25 எம் கேபிள்
- எடை: 13.5 கிராம்
ரியல்மி பட்ஸ் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹூவாய் மேட் ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தபடி அறிமுகம் செய்யப்பட்டது. #HuaweiMate20Pro
இந்தியாவில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஹூவாய் மேட் 20 ப்ரோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறி்ப்பிடத்தக்கது.
புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சஎன்சார், 10-லெவல் டைனமிக் பிரெஷர் சென்சிங் தொழில்நுட்பம், 3D ஃபேஸ் அன்லாக், 3D லைவ் எமோஜி மற்றும் ஏ.ஐ. லைவ் மாடல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் ஸ்மார்ட்போன்களில் மூன்று பிரைமரி கேமரா மேட்ரிக்ஸ் சிஸ்டம் மற்றும் OIS வழங்கப்பட்டுள்ளது.
மேட் 20 ஸ்மார்ட்போனில் லெய்கா அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ டிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 3120x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- 720 MHz ARM மாலி-G76MP10 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 40 வாட் சூப்பர்சார்ஜ், 15 வாட் வயர்லெஸ் க்விக் சார்ஜ்
ஹூவாய் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் புளு, பிளாக், டுவிலைட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளி்ட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் மேட் 20 ப்ரோ விலை ரூ.69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ டிசம்பர் 3ம் தேதி முதல் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அறிமுக சலுகையாக புதிய ஹூவாய் மேட் 20 ப்ரோ மற்றும் சென்ஹெய்சர் PXC550 வயர்லெஸ் ஹெட்போன்கள் (விலை ரூ.29,990) இணைந்து ரூ.71,990 விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #HuaweiMate20Pro #smartphone






