என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஸ்னாப்சாட் செயலியில் டிக்டொக் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. #SnapChat
ஸ்னாப்சாட் செயலியில் லென்ஸ் சேலஞ்சஸ் என்ற பெயரில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் மற்ற பயனர்களுடன் சவால்களில் பங்கேற்க முடியும்.
புதிய அம்சத்தை பயன்படுத்துவோர் ஸ்னாப்களை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்னாப்களில் பாடல்கள், நடனம், விடுமுறை அல்லது ஏதேனும் நிகழ்வை பயன்படுத்த வேண்டும். விடுமுறையொட்டிய நிகழ்வுக்கு, சவால் அம்சமாக ஜிவென் ஸ்டீஃபானியின் ஜிங்கிள் பெல் பாடலை உடன் சேர்ந்து பாட வேண்டும்.

இந்த அம்சம் ஸ்னாப்சாட் மற்றும் லென்ஸ் க்ரியேட்டர்களின் கற்பனை, திறமை மற்றும் சுய வெளிப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்த வாய்ப்பாக அமையும் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது. புதிய சேலஞ்சர் அம்சம் பயன்படுத்துவோர் லென்ஸ் ஸ்டூடியோவை பயன்படுத்துவார்கள் என ஸ்னாப்சாட் எதிர்பார்க்கிறது.
லென்ஸ் சேலஞ்ச் அம்சத்தின் முதல் சவாலாக மறைந்து போகச் செய்வது இருந்தது. இந்த லென்ஸ் ஜை ட்ரூடிங்கர் மூலம் உருவாக்கப்பட்டது. இது பயனர்கள் இரண்டு புகைப்படங்களை சூப்பர்இம்போஸ் வகையில் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது புகைப்படத்தினுள் இருக்கும் பொருள் மறைந்து போகும்.
நுபியா நிறுவனம் ரெட் மேஜிக் என்ற பெயரில் புதிய கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #NubiaRedMagic #gaming
நுபியா நிறுவனம் இந்தியாவில் ரெட் மேஜிக் கேமிங் போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட் மேஜிக் கேமிங் போன் முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், புதிய வெக்டார் வடிவமைப்பு, ஏர்-கூல்டு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஸமார்ட்போனின் பின்புறம் மெட்டல் பாடியில் ஒன்பது ஏர் ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளது. இது ஸ்மார்ட்போனில் கேமிங் செய்யும் போது மொபைல் சூடாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்த ஸ்மார்ட்போன் மும்மடங்கு அனோடைஸ் செய்யப்பட்ட ஏவியேஷன்-கிரேடு அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரத்யேக கேமிங் பட்டனை க்ளிக் செய்யும் போது, ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்ட் நெட்வொர்க்கை குறைத்து, அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., நோட்டிஃபிகேஷன் உள்ளிட்டவற்றை பிளாக் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நுபியா ஸ்மார்ட்போனிற்கென 128 கேம்களை ஆப்டிமைஸ் செய்து, கேமின் லோடிங் வேகத்தை 50% வரை அதிகப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நுபியா ரெட் மேஜிக் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
- 2.45 ஜிகாஹெர்ட்ஸ் 835 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் நுபியா ரெட் மேஜிக் ஓ.எஸ்.
- டூயல் சிம் ஸ்லாட்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 6P லென்ஸ், டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், TAS2555 ஆம்ப்ளிஃபையர், டி.டி.எஸ். ஆடியோ
- பிரத்யேக கேமிங் பட்டன்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போனினை முதலில் வாங்கும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரெட் மேஜிக் நெர்ட்ஸ் இயர்போன்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட டிஸ்ப்ளேக்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Samsung #hologram
சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் வழங்க புதிய ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலோகிராம் தொழில்நுட்பம் முப்பரிமான முறையில் படங்களை பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாகும். ஸ்டார் வார்ஸ் ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
தென் கொரிய நிறுவனமான சாம்சங் சார்பில் சர்வதேச காப்புரிமை அலுவலகம் (World Intellectual Property Office) மற்றும் அமெரிக்க காப்புரிமை அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் காப்புரிமைகளில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளது. சாம்சங் பதிவு செய்திருக்கும் காப்புரிமை ‘hologram reproducing apparatus and method therof’ என்ற தலைப்பு கொண்டுள்ளது.
நவம்பர் 29, 2018 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த காப்புரிமையில் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் இருந்தபடி 3D படம் காற்றில் ஒளிபரப்ப முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
காப்புரிமை விவரங்களின் படி சாம்சங் நிறுவனம் மொபைல் போன் டிஸ்ப்ளேவில் இருக்கும் பல்வேறு மைக்ரோலென்ஸ்களின் உதவியோடு 3D புகைப்படத்தை காற்றில் ஒளிபரப்புவதற்கான சாத்தியக்கூறுகளை முயற்சித்து வருவதாக தெரிகிறது.

புகைப்படம் நன்றி: LetsGoDigital
இந்த தொழில்நுட்பம் ஹாலோகிராம் ரீப்ரோடியூசிங் டிஸ்ப்ளே (Hologram Reproducing Display) என அழைக்கப்படுகிறது. இந்த காப்புரிமையில் வெளியாகி இருக்கும் தொழில்நுட்பம் எதிர்கால சாதனங்களில் வழங்கப்படலாம் என்ற வாக்கில், இந்த விவரங்கள் தொழில்நுட்பத்தின் ஆரம்பக்கட்ட பணிகளின் போதே வெளியாகியிருக்கிறது.
அதிநவீன ஹாலோகிராம் டிஸ்ப்ளேவானாது, 3D படங்களை பிரத்யேக ஸ்பேஷியல் லைட் மாட்யூலேட்டர் (SLM) மற்றும் ஃபில்ட்டர் உள்ளிட்டவற்றின் உதவியோடு மிகவும் நேர்த்தியாக ஒளிபரப்பும் என்றே தெரிகிறது. இந்த காப்புரிமைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சாம்சங் இவற்றை தனது கேலக்ஸி எஸ் சீரிஸ் பத்தாவது ஆண்டு ஸ்மார்ட்போன்களில் வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இதுவரை இதுபோன்ற தொழில்நுட்பத்தை வழங்கும் ஒற்றை ஸ்மார்ட்போன் மாடலாக ரெட் ஹைட்ரஜன் ஒன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3D ஹாலோகிராம் படங்களை ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மூலம் தேர்வு செய்யப்பட்ட சில செயலிகளில் மட்டும் வழங்குகிறது.
மைக்ரமேக்ஸ் நிறுவனம் என்11 மற்றும் என12 என்ற பெயரில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #MicroMax #Smartphones
மைக்ரோமேக்ஸ் இன்ஃபோமேடிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 மற்றும் இன்ஃபினிட்டி என்12 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏ.ஐ. வசதி, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்12 சிறப்பம்சங்கள்:
- 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்

மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 சிறப்பம்சங்கள்:
- 6.19 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 18:9:9 ரக டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- 13 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ஏ.ஐ.
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் 4ஜி வோல்ட்இ
- ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் இன்ஃபினிட்டி என்11 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 என்றும், இன்ஃபினிட்டி என்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வொய்லா, புளு லகூன் மற்றும் வெல்வெட் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றின் விற்பனை டிசம்பர் 26ம் தேதி முதல் ஆஃப்லைன் சந்தையில் கிடைக்கும். புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
ஹூவாய் ஹானர் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் அம்சங்களுடன் புதிய ஹானர் பேன்ட் 4 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. #HonorBand4
ஹுவாய் நிறுவனத்தின் துணை பிரான்டு ஹானர் இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஹானர் பேன்ட் 3 சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் ஹானர் பேன்ட் 4 மாடலில் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5D வளைந்த கிளாஸ் தொடு திரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன், தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார் மற்றும் ஸ்விம் ஸ்டிரோக் அங்கீகார வசதியுடன் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
ஹானர் பேன்ட் 4 சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சி.பி.சி. (cardiopulmonary coupled dynamics) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்துவோரின் உறக்கத்தை முழுமையாக டிராக் செய்து உறக்க முறை பற்றிய முழு விவரங்களை வழங்கும். ஆழ்ந்த உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்து அதற்கு ஏற்ப பரிந்துரை வழங்கும்.
இத்துடன் ஹூவாய் ட்ரூசீன் 2.0 இதய துடிப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின் இதய துடிப்புக்களை 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கும்.

ஹானர் பேன்ட் 4 சிறப்பம்சங்கள்:
- 0.95 இன்ச் AMOLED தொடு திரை டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2 LE, ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும்
- பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்டரி ரிமைன்டர்
- 6-ஆக்சிஸ் சென்சார், இன்ஃப்ராரெட் வியரிங் டிடெக்ஷன் சென்சார்
- தொடர் இதய துடிப்பு சென்சார்
- கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன், இன்கமிங் கால் மியூட் வசதி
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
- என்.எஃப்.சி. வசதி
- 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் பேன்ட் 4 சாதனம் மெடியோரைட் பிளாக், மிட்நைட் நேவி மற்றும் தஹிலா பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 விலை ரூ.2,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 18) முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #HonorBand4
ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளம் மூலம் தெரியவந்துள்ளது. #Honor8A #smartphone
ஹுவாய் ஹானர் பிரான்டு விரைவில் தனது ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஹானர் 8ஏ பட்ஜெட் ஸ்மார்ட்போன் JAT-TL00 மற்றும் JAT-AL00 என்ற மாடல் நம்பர்களுடன் TENAA வலைதளத்தில் சான்று பெற்றுள்ளது.
சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஹானர் 8ஏ ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே, மெல்லிய பெசல்கள், டூ-டோன் டிசைன் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படம் நன்றி: TENAA
ஹானர் 8ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. + 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஹானர் 8ஏ ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கோல்டு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம். #Honor8A #smartphone
சியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில், மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சான்று பெற்றுள்ளன. #Redmi7 #Smartphones
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகி ஒருமாதம் நிறைவுறாத நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை வெளியிட் தயாராகி வருகிறது.
நேஷ்வில் சேட்டர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேட் வலைதளத்தில் M1901F7C, M1901F7E, மற்றும் M1901F7T என்ற மாடல் நம்பர்களுடன் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் சான்று பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி பிரபலமாக இருக்கும் நிலையில், மூன்று ஸ்மார்ட்போன்களும் ரெட்மி சீரிஸ் ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் M18 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன்கள் M19 என துவங்குவதை வைத்து பார்க்கும் போது மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் 2019 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு, விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyS10 #Smartphones
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்களின் வெளியீடு, ஸ்டோரேஜ் விவரம், ஸ்கிரீன் அளவுகள், சில அம்சங்கள் மற்றும் லண்டன் விலை உள்ளிட்ட தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
அதன்படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2019 மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன், அதாவது பிப்ரவரி 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்சமயம் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு அதே நாளில் துவங்கி, மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
Few preliminary Galaxy S10 details:
— Evan Blass (@evleaks) November 13, 2018
- "Punch hole" style selfie cam cutout (sounds like Infinity-O display).
- Ultrasonic, in-display FPS
- Three rear cameras (standard/wide/tele)
- One UI over Android Pie
கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள்: வழக்கமான மாடல், பிளஸ் மற்றும் ஃபிளாட் என மூன்று வித வேரியன்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இவற்றில் வழக்கமான 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படும் என்றும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹூவாய் மேட் 20 ப்ரோ போன்றே கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனிலும் மற்ற சாதனங்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஐரிஸ் ஸ்கேனர் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
A case manufacturer's expectations for the Galaxy S10 lineup: pic.twitter.com/lrExjvalcb
— Evan Blass (@evleaks) December 8, 2018
ஸ்கிரீன் அளவுகளை பொருத்த வரை கேலக்ஸி எஸ்10 மாடலில் 6.1 இன்ச், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.4 இன்ச் மற்றும் ஃபிளாட் வெர்ஷனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான கேலக்ஸி எஸ்10 ஃபிளாட் வெர்ஷனில் 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என்றும் இதன் விலை 669 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.60,730) என தெரிகிறது.
இதேபோன்று 6.1 இன்ச் ஸ்கிரீன் கொண்ட கேலக்ஸி எஸ்10 வழக்கமான வளைந்த எடிஷன் 128 ஜி.பி. அல்லது 512 ஜி.பி. என இருவித ஆப்ஷன்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. இவற்றின் விலை முறையே 799 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.72,517) என்றும் 999 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.90,668) என கூறப்படுகிறது. #GalaxyS10 #Smartphones
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #OnePlus6TMcLaren
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் 10 ஜி.பி. ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. புதிய ராப் சார்ஜ் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனினை 20 நிமிடங்களில் ஒரு நாள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது.

மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பெட்டியில் இருநிறுவனங்களின் வரலாற்றை கொண்டாடும் சிறிய புத்தகம் இடம்பெற்றுள்ளது.
இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெக்லாரெனின் பிரத்யேக ஸ்டைல் மற்றும் வரலாற்றை பரைசாற்றும் வகையில் பிரத்யேக மென்பொருள் அனிமேஷன்கள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:
- 6.41 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 10 ஜி.பி. ரேம்
- 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7, 1/2.6″ சோனி IMX519 சென்சார், 1.22μm பிக்சல், OIS, EIS
- 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், f/1.7, 1.0μm பிக்சல்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX 371 சென்சார், f/2.0, 1.0μm பிக்சல்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங்
ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 13) முதல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோரில் கிடைக்கும். #OnePlus6TMcLaren #smartphone
விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #VivoNEX #smartphone
விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் சீரிஸ்-இல் புது ஸ்மார்ட்போனினை டூயல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. புது நெக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் பின்புறம் 5.49 இன்ச் FHD ரெசல்யூஷன் கொண்ட இரண்டாவது டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
புது நெக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.5 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 2 எம்.பி. நைட்விஷன் கேமரா, 2.9μm பிக்சல், 3D சென்சிங் வசதியுடன் வழங்கப்படுகிறது.
புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கைரேகை சென்சார் முந்தைய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இருப்பதை விட 0.29 நொடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் என விவோ தெரிவித்துள்ளது. இத்துடன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் சிறப்பம்சங்கள்:
- 6.39 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
- 5.49 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 630 GPU
- 10 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஃபன்டச் ஓ.எஸ். 4.35 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. டூயல் பி.டி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.79
- 2 எம்.பி. நைட்விஷன் கேமரா, f/1.8, 2.9μm பிக்சல், 3D TOF கேமரா, f/1.3
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், AK-4377A ஆம்ப்ளிஃபையர்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் போன் ஐஸ் புளு, ஸ்டார் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் டிசம்பர் 29ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #AsusZenFoneMaxM2
அசுஸ் நிறுவனம் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போனுடன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
மெட்டல் பேக் மற்றும் பிளாஸ்டிக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இஷ பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 சிறப்பம்சங்கள்
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, EIS, ப்ரோ மோட்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.9,999 என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 20ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. #GalaxyA8s
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8எஸ் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இன்ஃபினிட்டி-ஒ ரக டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவினை சாம்சங் இன்ஃபினிட்டி-ஒ என அழைக்கிறது.
புது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 6.7 எம்.எம். அளவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
- 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ8எஸ் விலை பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. #GalaxyA8s #smartphone






