என் மலர்

  நீங்கள் தேடியது "Honor Band 4"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹூவாய் ஹானர் நிறுவனம் இந்தியாவில் அசத்தல் அம்சங்களுடன் புதிய ஹானர் பேன்ட் 4 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது. #HonorBand4  ஹுவாய் நிறுவனத்தின் துணை பிரான்டு ஹானர் இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 என்ற பெயரில் புதிய ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. 

  ஹானர் பேன்ட் 3 சாதனத்தின் மேம்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் ஹானர் பேன்ட் 4 மாடலில் 0.95 இன்ச் AMOLED கலர் 2.5D வளைந்த கிளாஸ் தொடு திரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன், தொடர்ச்சியான இதய துடிப்பு சென்சார் மற்றும் ஸ்விம் ஸ்டிரோக் அங்கீகார வசதியுடன் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

  ஹானர் பேன்ட் 4 சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சி.பி.சி. (cardiopulmonary coupled dynamics) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்துவோரின் உறக்கத்தை முழுமையாக டிராக் செய்து உறக்க முறை பற்றிய முழு விவரங்களை வழங்கும். ஆழ்ந்த உறக்கம் உள்ளிட்டவற்றை டிராக் செய்து அதற்கு ஏற்ப பரிந்துரை வழங்கும்.

  இத்துடன் ஹூவாய் ட்ரூசீன் 2.0 இதய துடிப்பு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனரின் இதய துடிப்புக்களை 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கும்.  ஹானர் பேன்ட் 4 சிறப்பம்சங்கள்:

  - 0.95 இன்ச் AMOLED தொடு திரை டிஸ்ப்ளே
  - ப்ளூடூத் 4.2 LE, ஆண்ட்ராய்டு 4.4 அல்லது ஐ.ஓ.எஸ். 9.0 இயங்குதளத்தை சப்போர்ட் செய்யும்
  - பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், எக்சர்சைஸ் டிராக்கர், செடன்டரி ரிமைன்டர்
  - 6-ஆக்சிஸ் சென்சார், இன்ஃப்ராரெட் வியரிங் டிடெக்ஷன் சென்சார்
  - தொடர் இதய துடிப்பு சென்சார்
  - கால் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன், இன்கமிங் கால் மியூட் வசதி
  - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
  - என்.எஃப்.சி. வசதி
  - 100 எம்.ஏ.ஹெச். பேட்டரி

  ஹானர் பேன்ட் 4 சாதனம் மெடியோரைட் பிளாக், மிட்நைட் நேவி மற்றும் தஹிலா பின்க் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் பேன்ட் 4 விலை ரூ.2,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (டிசம்பர் 18) முதல் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #HonorBand4
  ×