என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சியோமி நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கி வருகிறது. இது பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. #Xiaomi #Wireless
சியோமி நிறுவனம் புதிதாக வயர்லெஸ் இயர்பட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சியோமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏர்டாட்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்த வயர்லெஸ் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது, எனினும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் சியோமி மற்றொரு புதிய வயர்லெஸ் இயர்பாட்களை அறிமுகம் செய்யவிருக்கிறது. சியோமியின் புதிய வயர்லெஸ் இயர்பட்கள் பற்றிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இதுவும் பார்க்க ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கிறது.
இணையத்தில் வெளியாகி இருக்கும் சியோமி ஏர்டாட்ஸ் ரென்டர்களின் படி வயர்லெஸ் பட்களைத் தொடர்ந்து சிறிய ஸ்டெம் ஒன்று காணப்படுகிறது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் சாதனத்தை விட தடிமனாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதில் பேட்டரி மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: mysmartprice
புதிய இயர்பட்கள் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இதுபோன்ற சாதனங்கள் பெரும்பாலும் இவ்வாறே உருவாக்கப்படுகிறது.
இயர்பட்களின் மவுத் பகுதியில் சிலிகான் கொண்டு மறைக்கப்பட்டிருப்பதும் ரென்டர்களில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் புதிய இயர்பட்கள் பயன்படுத்த சௌகரியமாக இருக்கும். இவற்றுடன் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.
சார்ஜிங் கேஸ் பார்க்க ஏர்டாட்ஸ் போன்று இல்லையென்றாலும், இதன் வடிவமைப்பு அம்சங்கள் ஆப்பிளின் ஏர்பாட்ஸ்-க்கு வழங்கப்படும் கேஸ் போன்று காட்சியளிக்கிறது. முந்தைய ஏர்டாட்ஸ் போன்றே புதிய வயர்லெஸ் இயர்பட்களிலும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயர்லெஸ் இயர்பட்களில் ப்ளூடூத் 5.0 மற்றும் தொடுதிரை வசதி வழங்கப்படுகிறது. இவற்றை கொண்டு பிளே / பாஸ் ஆடியோ, எனேபிள் / டிசேபிள் அசிஸ்டண்ட் மற்றும் அழைப்புகளை ஏற்கும் / நிராகரிக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முந்தைய ஏர்டாட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய இயர்பட்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.
ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Honor #Smartphone
ஹூவாய் துணை பிராண்டு ஹானர் இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, ஹூவாய் கிரின் 710 பிராசஸர் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் உண்மையாகும் பட்சத்தில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட ஹானர் பிராண்டின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வடிவமைப்பு காரணமாக ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மற்றும் EMUI 9.0 சார்ந்த இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மற்றும் முன்பக்க கேமராக்களில் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் சீன் டிடெக்ஷன் வசதி வழங்கப்படலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகமான ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக புதிய ஹானர் 10 லைட் வெளியாக இருக்கிறது. முன்னதாக ஹூவாய் நிறுவனத்தின் புதிய சாதனத்திற்கான காப்புரிமை விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஹானர் 10 லைட் சார்ந்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் வை9 (2019) ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹானர் 10 லைட் போன்றே ஹூவாய் வை9 சீரிஸ் ஸ்மார்ட்போனும் பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கிறது.
ஹூவாய் வை9 சிறப்பம்சங்களை பொருத்த வரை 6.5 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல் ஸ்கிரீன், கிரின் 710 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. #Redmi #Smartphone
சியோமி நிறுவனம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
ரெட்மி சீரிசில் அறிமுகாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சீன வலைத்தளத்தில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்கள் M1901F7C, M1901F7T மற்றும் M1901F7E மாடல் நம்பர்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் வாட்டர்டிராப் நாட்ச் கொண்ட ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ரெட்மி பை சியோமி பிராண்டிங் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: Tenaa
அந்த வகையில் போகோ போன்று ரெட்மி தனி பிராண்டாக இருக்கும் என தெரிகிறது. பின்புறம் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனில், ஒரு கேமராவில் 48 எம்.பி. சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரெட்மி ஸ்மார்ட்போனில் சோனியின் IMX586 1/2-டைப் (8.0 எம்.எம். டயகோனல்) சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். பிராசஸர் கொண்டிருக்கும். இதனை சியோமி ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி 7 என அழைக்கப்படலாம்.
புதிய ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10 #smartphone
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கின்றன. சாம்சங்கின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. எனினும், ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது.
இந்த குறையை தீர்க்கும் வகையில் கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 லைவ் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே எதிர்பார்க்கப்படுவதை போன்று கேலக்ஸி எஸ் 10 சீரிஸ் இன்ஃபினிட்டி ஒ ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் சிறு துளையினுள் செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இதனால் டிஸ்ப்ளேவுக்கு அதிக இடம் கிடைக்கிறது. ஹூவாய் நிறுவனத்தின் மேட் 20 ப்ரோ போன்று கேலக்ஸி எஸ்10 பியான்ட் 1 மாடலிலும் மற்ற கைப்பேசி அல்லது வாட்ச்களை வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படலாம்.
Samsung Galaxy S10 "Beyond 1," in the wild. pic.twitter.com/EMquh59Kln
— Evan Blass (@evleaks) January 3, 2019
கேலக்ஸி எஸ் 10 சீரிசின் பேஸ் மாடலாக பியான்ட் 1 இருக்கும் என்பதால், இதில் ஒற்றை செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இதன் பிளஸ் வேரியன்ட்டில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் மேல்பக்கம் மற்றும் கீழ்புறங்களில் முந்தைய கேலக்ஸி எஸ்9 மற்றும் நோட் 9 மாடல்களை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.4 இன்ச் என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் குவால்காம் நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் எக்சைனோஸ் 9820 சிப்செட், டிரை-கிளஸ்டர் சி.பி.யு, இன்டகிரேட் செய்யப்பட்ட என்.பி.யு., அதிகபட்சம் நொடிக்கு 2 ஜி.பி. (2Gbps) எல்.டி.இ. மேம்படுத்தப்பட்ட ப்ரோ மோடெம் வழங்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoZ4Play #Smartphones
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ்: மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோ ஜி7 பிளே உள்ளிட்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மோட்டோரோலாவின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மோட்டோ இசட் 4 பிளே என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் லீக் ஆகியுள்ளது.
அதன்படி மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வால்யூம் ராக்கர் பட்டன்கள் போனின் வலதுபுறம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பின்புறம் ஒற்றை கேமரா யூனிட் மற்றும் மோட்டோ மாட் வசதிக்கான கனெக்டர்கள் காணப்படுகிறது.

3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போன் 6.2 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனினும், உயர் ரக பிரிவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் மோட்டோ இசட் 4 பிளே ஸ்மார்ட்போனில் ஃபிளாக்ஷிப் பிராசஸர் வழங்கப்படலாம்.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி மோட்டோரோலா தனது மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. முதற்கட்டமாக மோட்டோ ஜி7 சீரிஸ் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
சோனி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. #Sony #CES2019
2019 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ்.) அடுத்த வாரம் துவங்குகிறது. இதையொட்டி சோனி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5.00 மணி (இந்திய நேரப்படி ஜனவரி 8 ஆம் தேதி மாலை 6.30 மணி) அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கிறது.

வழக்கமாக சோனி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி மாதம் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யும்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் சோனி நிறுவனம் தனது எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ.2, எக்ஸ்.ஏ.2 அல்ட்ரா மற்றும் எல்2 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

புகைப்படம் நன்றி: OnLeaks
அந்த வகையில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் சோனி நிறுவனம் தனது புதிய என்ட்ரி-லெவல் மற்றும் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்யலாம்.
அப்படியாக சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3, எக்ஸ்.ஏ.3 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்3 போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருப்பதால், சோனியின் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பும் ஜனவரி 7 ஆம் தேதி எதிர்பார்க்கலாம்.
சியோமி நிறுவனத்தின் இரண்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. #Xiaomi #smartphones
சியோமி நிறுவனத்தின் Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Mi 9 ஸ்மார்ட்போன் சியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதைத் தொடர்ந்து Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. அந்த வகையில் Mi 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்திலும், Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்திலும் அறிமுகமாகலாம்.
புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து சீன வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய Mi 9 மூன்று பிரைமரி கேமரா கொண்ட சியோமியின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களில் மூன்று அல்லது நான்கு கேமரா செட்டப் வழங்க துவங்கிவிட்ட நிலையில், சியோமி இதுவரை டூயல் கேமராவை வழங்கி வருகிறது.

Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் மூன்று கேமராக்களில் ஒன்று, பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஒப்போ இதேபோன்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒப்போ நிறுவனம் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது இரு ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன்களில் ஒப்போ அதிகபட்சம் 10X வரையிலான ஹைப்ரிட் சூம் வசதியை வழங்கலாம். அந்த வகையில் சியோமி ஸ்மார்ட்போனிலும் இதே போன்ற வசதியை எதிர்பார்க்கலாம். மற்ற அம்சங்களை பொருத்த வரை சியோமி Mi 9 மற்றும் Mi மிக்ஸ் 4 ஸ்மார்ட்போன்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வழங்கப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் Mi பிளே ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், ஆக்டா-கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. #GalaxyA50 #Smartphone
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்கிறது.
புதிய கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி ஓ அல்லது இன்ஃபினிட்டி யு நாட்ச், எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, உயர் ரக மாடலில் 6 ஜிபி. / 8 ஜி.பி. ரேம் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 24 எம்.பி. பிரைமரி கேமரா, கேலக்ஸி ஏ7 மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்ற சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ50 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் சாம்சங் எக்சைனோஸ் 9610 சிப்செட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ., வயர்லெஸ் சார்ஜிங், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனலாம். யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் முற்றிலும் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் 2019, பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ புதிதாக வோ வைபை சேவையை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. #Jio #WiFi
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை சோதனை செய்கிறது. புதிய வைபை சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை சேவையை சோதனை செய்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் சோதனை துவங்கியிருப்பதால் இதன் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கலாம். ஜியோவின் வோ வைபை சேவை மத்திய பிரதேச மாநிலத்தில் சோதனை செய்யப்படுவதாக டெலிகாம் டாக் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலும் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை சோதனை செய்வதாக கூறப்படுகிறது. ஜியோ வைபை சேவையை பயன்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் ஜியோ வைபை சேவை தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் ஜியோ விரைவில் வோ வைபை சேவையை வெளியிடலாம்.
2019 ஆம் ஆண்டு வாக்கில் ரிலையன்ஸ் ஜியோ தனது வோ வைபை சேவையை வணிக ரீதியில் வெளியிட திட்டமிட்டிருக்கலாம். முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஜியோபோன்களிலும் இந்த சேவை வழங்கப்படலாம்.

இந்திய ஃபீச்சர் போன் சந்தையில் மூன்றில் ஒரு பங்கு ஜியோபோன்கள் விற்பனையாவதால், வோ வைபை சேவை வெளியீட்டுக்கு பின் ஜியோபோன் விற்பனை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வோ வைபை சேவையை பரிந்துரை செய்தது. இதன் மூலம் பயனர்கள் வைபை இணைப்பை கொண்டே வாய்ஸ் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதனால் மொபைல் நெட்வொர்க் வசதியில்லா சூழல்களிலும் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
ரிலையன்ஸ் ஜியோ போன்றே பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் வோ வைபை சேவையை இந்தியாவில் சோதனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூவாய் நிறுவனம் இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஹானர் வி20 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. #HonorV20 #smartphone
ஹூவாய் ஹானர் பிரான்டு வி20 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய வி20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.
கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். வசதி கொண்டுள்ளது.

இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.
கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் வி20 சிறப்பம்சங்கள்
- 6.4 இன்ச் 1080x2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
- மாலி-G76MP10 GPU
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
- TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செ்ஃபி கேமரா, f/2.0
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹானர் வி20 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,428) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் மொஷினோ (MOSCHINO) எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய Mi பிளே ஸ்மார்ட்போனில் டூயல் ஏ.ஐ. கேமரா, வாட்டர் டிராப் நாட்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. #MiPlay #smartphone
சியோமி நிறுவனத்தின் Mi பிளே ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை மற்றும் ஏ.ஐ. போர்டிரெயிட் மோட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போனின் பின்புறம் மிளிரும் கிளாஸ் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் Mi பிளே ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi பிளே சிறப்பம்சங்கள்
- 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P35 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 10
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2, 1.25μm பிக்சல், PDAF, EIS
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி Mi பிளே ஸ்மார்ட்போன் பிளாக், டிரீம் புளு மற்றும் ட்விலைட் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,155) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ நிறுவனத்தின் வை சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்டர் டிராப் வடிவில் நாட்ச் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் வை93 என அழைக்கப்படுகிறது. #VivoYSeries #smartphone
விவோ நிறுவனம் வை சீரிசில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சத்தமில்லாமல் அறிமுகமாகி இருக்கும் வை93 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
விவோ வை93 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் 720x1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க விவோ வை93 ஸ்மார்ட்போனில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக், ஏ.ஐ. பியூட்டிஃபிகேஷன் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

விவோ வை93 சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 720x1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
- மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் பிராசஸர்
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13 எம்.பி. பிரைமரி கேமரா
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, PDAF, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட்
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஃபேஸ் அன்லாக்
- 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி. வசதி
- ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.5
இந்தியாவில் விவோ வை93 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ வை93 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கிறது.






