என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில அறிமுகமாக இருக்கிறது. இதனை ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #RedmiNote7 #ԀW8ᔭ



    சியோமியின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக 48 எம்.பி. கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியோமி நிறுவன துணை தலைவர் மனு ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் ஆகியோர் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் புகைப்படம் தலைகீழாக பதிவிடப்பட்டிருக்கிறது.





    ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - க்விக் சார்ஜ் 4

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் லின் பின் மடிக்கக்கூடிய ஸ்மாரட்போனின் வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை அதிராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவினை சியோமி இணை நிறுவனரும், தலைவருமான லின் பின் சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    வீடியோவில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஏற்கனவே வெளியான விவரங்களுடன் ஒற்றுப் போகும் படி காட்சியளிக்கிறது. ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இருபுறங்களிலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என சியோமி தெரிவித்துள்ளது.



    இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாகி இருக்கும் சியோமி ஸ்மார்ட்போன் டேப்லெட் மற்றும் மொபைல் போன் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் வரை ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணிகளை எதிர்காலத்தில் துவங்குவது பற்றி முடிவு செய்ய இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    பிப்ரவரி 23 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவிற்கு (MWC 2019) சியோமி 20 வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அழைத்து செல்ல இருக்கிறது. அந்த வகையில் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வீடியோவினை கீழே காணலாம்..,

    விவோ நிறுவனம் வி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கியுள்ளது. #vivoy89 #smartphone



    விவோ நிறுவனம் வை89 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வை89 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 626 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 4.0, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் கேமரா, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் பியூட்டி, ஃபேஸ் அன்லாக் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் மற்றும் கிளாஸ் மூலம் உருவாகி இருக்கும் விவோ வை89 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள், பின்புறம் கைரேகை சென்சார், 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வை89 சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் + 19:9 IPS டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 626 பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வை89 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை சீனாவில் 1396 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,660) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய 7 சீரிஸ் சிப்செட் அந்நிறுவன பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் மூன்று கேமரா பயன்படுத்த வழி செய்யும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக ஆக்டா-கோர் மொபைல் சிப்செட் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. எக்சைனோஸ் 7 சீரிஸ் - எக்சைனோஸ் 7904 என்ற பெயரில் புதிய சிப்செட் அறிமுகமாகி இருக்கிறது.

    சாம்சங் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய சிப்செட் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 7904 சிப்செட் மல்டி-மீடியா மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.



    இதன்மூலம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் சீரான வேகத்தில் மல்டி-டாஸ்கிங் செய்ய முடியும். புதிய எக்சைனோஸ் 7904 சிப்செட்டை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. எனினும், இந்த சிப்செட் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    எட்டு கோர்களில் 14 என்.எம். வழிமுறையில் சாம்சங் புதிய சிப்செட் உருவாகி இருக்கிறது. இதில் இரண்டு கார்டெக்ஸ் ஏ73 கோர்கள் 1.8 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆறு கார்டெக்ஸ் ஏ53 கோர்கள் 1.6 ஜிகாஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. 

    மல்டி டாஸ்கிங் மட்டுமின்றி புதிய எக்சைனோஸ் சிப்செட் மூன்று கேமரா சென்சார்களை சப்போர்ட் செய்யும். இதனால் உயர் ரக புகைப்படங்களுடன், வீடியோக்களையும் படமாக்க முடியும். கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சாம்சங் எக்சைனோஸ் 7904 சிப்செட் எல்.டி.இ. மோடெம் வசதி கொண்டிருக்கிறது.
    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #RedmiNote7Pro #Smartphone



    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் கடந்த வாரம் சீனாவில் அறிமுகமானதை தொடர்ந்து விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளன. ரெட்மி நோட் 7 அறிமுக விழாவிலேயே ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    மேலும் ரெட்மி நோட் 7 போன்றே புதிய நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் டீசர் சீனாவின் வெய்போ தளத்தில் லீக் ஆனது. அதில் நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சோனி IMX586 பிரைமரி சென்சார் வழங்கப்படுகிறது. 

    ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சாம்சங் ISOCELL GM1 சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரெட்மி நோட் 7 ப்ரோ இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.



    முன்னதாக குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. இத்துடன் ஆக்டா-கோர் க்ரியோ 675 சி.பி.யு. மற்றும் அட்ரினோ 612 GPU வழங்கப்படுகிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்டின் மேம்பட்ட வடிவில் 11 என்.எம். தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கிறது. 

    இந்த பிராசஸரில் குவால்காமின் க்விக் சார்ஜ் 4 பிளஸ் தொழில்நுட்பத்திற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் அல்ட்ரா-ஹெச்.டி. (4K @ 30fps) தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் வசதியும் உள்ளது. 

    ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 1499 (இந்திய மதிப்பில் ரூ.15,800) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை CNY 999 (இந்திய மதிப்பில் ரூ.10,500) என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் CNY1199 (இந்திய மதிப்பில் ரூ.12,600) என்றும் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி விலை CNY 1399 (இந்திய மதிப்பில் ரூ.14,700) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு சீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்டுள்ளது. #Samsung



    சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் கேலக்ஸி எஸ்10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகாமக இருக்கிறது.

    இந்நிலையில், சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் சான்று பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. சீன வலைதளத்தில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்கள் வெளியாகவில்லை.

    சீன வலைதளத்தில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் SM-F900 என்ற மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் சோதனைகளிலும் SM-F900 என்ற மாடல் நம்பர் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் வசதி மற்றும் 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.



    சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை ஏற்கனவே சோதனை செய்ய துவங்கிவிட்டது. முன்னதாக நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்தான விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை சில வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. 

    இந்த ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இணையத்தில் லீக் ஆன தகவல்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 7.3-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா செட்டப் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    விலையை பொருத்த வரை சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியன்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,37,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இதன் டாப் என்ட் வேரியன்ட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,83,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. #HONOR10Lite #smartphone



    ஹுவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த EMUI 9.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    செல்ஃபி எடுக்க 24 எம்.பி. முன்பக்க கேமரா, பின்புறம் கிரேடியன்ட் ஃபினிஷ், கைரேகை சென்சார் மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 10 லைட் சிறப்பம்சங்கள்:

    - 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி G54 MP4 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - EMUI 9.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், வைட், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 4 ஜி.பி. ரேம் கொண்ட ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஹானர் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2200 கேஷ்பேக் மற்றும் ரூ.2800 மதிப்புள்ள க்ளியர்ட்ரிப் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது.
    மொபிஸ்டார் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. #Mobiistar #smartphone



    மொபிஸ்டார் நிறுவம் இந்தியாவில் எக்ஸ்1 நாட்ச் எனும் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், ஃபேஸ் அன்லாக் வசதி, டூயல் 4ஜி வோல்ட்இ வசதி, 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1498x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் விஆர் ரோக் GE8300
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஷைன், மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. மொபிஸ்டார் எக்ஸ்1 நாட்ச் 2 ஜி.பி. ரேம் விலை ரூ.8,499 என்றும், 3 ஜி.பி. ரேம் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் சி.இ.எஸ். 2019 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. #Samsung #5G



    தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ். 2019) இருக்கிறது. 2019 ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதுவித சாதனங்கள் மற்றும் கான்செப்ட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. கண்ணாடி பெட்டியினுள் வயர்லெஸ் சார்ஜர் / டாக் மீது இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Business Insider

    ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கிறது. எனினும், ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் காணப்படவில்லை. அந்த வகையில் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை செயல்படுத்தக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,

    5ஜி தொழில்நுட்பத்தின் பயன்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு மாடலில் மட்டும் 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    ஹூவாய் நிறுவனத்தின் புதிய வை9 2019 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HuaweiY9 #smartphone



    ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் வை9 2019 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2 இயங்குதளம், 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இரு கேமரா சென்சார்களிலும் ஏ.ஐ. அ்சஙங்கள் வழங்கப்பட்டுள்ளது. வளைந்த 3D ஆர்க் வடிவமைப்பு கொண்டிருக்கும் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    ஹூவாய் வை9 2019 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
    - ARM மாலி-G51 MP4 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 13 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் வை9 2019 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    கலிபோர்னியாவை சேர்ந்த விங் எனும் ஆப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆப் கொண்டு ஸ்மார்ட்போனில் வீடியோ ரிங்டோன் செட் செய்து கொள்ள முடியும். #app



    கலிபோர்னியாவை சேர்ந்த வீடியோ ரிங்டோன் செயலி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலி வழங்கப்படுகிறது.

    இந்தியா முழுக்க டவுன்லோடு செய்யக்கூடிய வகையில் விங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை கொண்டு ஒவ்வொரு அழைப்பிலும் வீடியோவினை ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம். இதன் இந்திய பதிப்பில் பயனர்கள் பாலிவுட் வீடியோக்களை தங்களது ஸ்மார்ட்போனில் ரிங்டோனாக செட் செய்யலாம்.



    பயனர் விரும்பும் வீடியோக்களை தங்களது ரிங்டோனாக செட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட வீடியோக்களை ரிங்டோனாக செட் செய்யவோ அல்லது தங்களது நண்பர்களுக்கென பிரத்யேக ரிங்டோன்களை செட் செய்யலாம்.

    இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம், நேபால், நைஜீரியா, கானா, இந்தோனேசியா என உலகம் முழுக்க 174 நாடுகளில் விங் செயலி பயன்படுத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விங் செயலியில் உலகம் முழுக்க இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான விங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    ஒப்போ நிறுவனத்தின் ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. இதன் விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக நடைபெறுகிறது. #OppoR15Pro #smartphone



    ஒப்போ நிறுவனம் தனது மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான ஆர்15 ப்ரோ மாடலை இந்தியாவில் வெளியிட்டது. முன்னதாக அந்நிறுவனம் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. 

    அமேசான் வலைத்தளத்தில் இன்று (ஜனவரி 9) முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் முதல் முறையாக வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு வழங்கியிருக்கிறது. 

    புதிய ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ. பியூட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ஆர்15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஆன்-செல் OLED டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
    - 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7
    - 16 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.0
    - 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபிளாஷ் சார்ஜிங் வசதி

    இந்தியாவில் ஒப்போ ஆர்15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுவதோடு, எக்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    ×