என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் கே1 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #OppoK1 #Smartphone
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புதிய கே1 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள கே1 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபி எடுக்க 25 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.

ஒப்போ கே1 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மோக்கா ரெட் மற்றும் கோ புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிமுக சலுகைகள்:
- புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10% உடனடி தள்ளுபடி
- ப்ளிப்கார்ட் வழங்கும் மொபைல் பாதுகாப்பு வசதி
- ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வாங்கிய முதல் எட்டு மாதங்களுக்கு 90% வரை பைபேக் சலுகை ரூ.1 கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. #RelianceJio #Jio5G
இந்தியாவில் 5ஜி சேவைகளை வழங்கும் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருக்கும் என தெரிகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் 5ஜி தொழில்நுட்ப வசதி கொண்ட மொபைல் போன்களுடன் 5ஜி சேவைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
5ஜி சேவைகளுடன் அதற்கான சாதனங்களை வழங்குவது பற்றிய விவாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா மற்றும் சீனாவில் 5ஜி சேவைகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
5ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் ஜூலை மாதத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனங்கள் தரப்பில் உபகரணங்களை சோதனை செய்யும் பணிகளும் ஏற்கனவே நிறைவுற்றுவிட்டது. 5ஜி சேவை அறிமுகமானதும் அவற்றுக்கான சாதனங்கள் மற்றும் மொபைல் டெலிபோன் சேவை விரிவடையும்.

முதற்கட்டமாக 5ஜி சேவைகள் ஃபிளாக்ஷிப் சாதனங்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ பட்ஜெட் விலை சாதனங்களிலும் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் போதுமான சாதனங்கள் இதுவரை வெளியாகாததால் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. மத்திய அரசு சார்பில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளுடன் புதிய தொழில்நுட்பத்தை இயக்கும் திறன் கொண்ட சாதனங்களையும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று சாம்சங், ஹூவாய், எல்.ஜி. போன்ற நிறுவனங்களும் தங்களது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #XiaomiMi9 #Smartphone
சியோமி நிறுவன சாதனங்களுக்கான தலைவர் தனது வெய்போ அக்கவுண்ட்டில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பின் அதனை உடனடியாக அழித்துவிட்டார். எனினும், அவர் அதனை தனது அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கும் முன் சில வாடிக்கையாளர்கள் அந்த புகைப்படத்தினை டவுன்லோடு செய்துவிட்டனர்.
வெய்போவில் அவர் பிதிவிட்டு பின் அவசர அவசரமாக நீக்கிய புகைப்படம் சியோமியின் ஃபிளக்ஷிப் Mi9 ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. வெய்போவில் வெளியான புகைப்படத்தின் படி புதிய சியோமி ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில் மூன்று பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ரெட்மி பிராண்டு தலைவராக நியமிக்கப்பட்ட லு வெய்பிங் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்றும் அந்நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.
இந்த ஸ்மார்ட்போன் Mi9 மாடலாக இருக்கும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் எதிர்பார்க்கலாம். சோனி IMX586 சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸருடன் உருவாகும் சியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் X50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என்றும் இது Mi மிக்ஸ் 3 மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் நான்கு நாட்களில் அதிகபட்சமாக 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #EnergizerMobile #MWC 2019
எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்களும் அடங்கும். புதிய மொபைல் போன்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எனெர்ஜைசர் மெபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்ச பேட்டரி கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழா நடைபெறும் பார்சிலோனாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

புகைப்படம் நன்றி: GSMArena
புதிய ஸ்மார்ட்போன்கள் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல், ஸ்கேனிங் வசதி மற்றும் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என எனெர்ஜைசர் மொபைல் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. புதிய எனெர்ஜைசர் மொபைல்கள் நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாக இருக்கின்றன.
இவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ இணையத்தில் தவறுதலாக வெளியாகி பின் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது. #Samsung #MWC2019
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பொது வெளியில் அறிமுகம் செய்தது.
அந்த வகையில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ விளம்பர வீடியோ தவறுதலாக வெளியாகிவிட்டது. இந்த வீடியோவில் காணப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளிப்புறம் பெரிய டிஸ்ப்ளே மற்றும் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் உள்புறம் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 7.3 இன்ச் 1536x2152 பிக்சல் டிஸ்ப்ளேவும், மடிக்கப்பட்ட நிலையில் வெளிப்புறம் 4.6 இன்ச் 840x1960 பிக்சல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் சோனி IMX374 சென்சார் வழங்கப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செய்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் புதிய சாதனத்தின் உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதாக கூறப்பட்டது. மேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் வீடியோவை பார்க்கும் போது சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் வெளியாகி பின் நீக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோவை கீழே காணலாம்.,
ஹூவாய் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Huawei #MWC2019
ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்விழா சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வுக்கான ஹூவாய் அரங்கில் நடைபெற இருக்கிறது.
முன்னதாக நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவுக்கான முன்னோட்ட நிகழ்வில் ஹூவாய் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருந்தது. 5ஜி தொழில்நுட்பத்துடன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.
Come with us to explore #ConnectingTheFuture LIVE from #MWC@GSMA. Are you ready to reveal the unprecedented? #HuaweiMWC#MWC2019pic.twitter.com/ErPD7eKMh1
— Huawei Mobile (@HuaweiMobile) February 1, 2019
கடந்த ஆண்டு ஹூவாய் நிறுவனம் மேட் எஃப், மேட் ஃபிளெக்ஸ், மேட் ஃபிளெக்சி மற்றும் மேட் ஃபோல்டி போன்ற பெயர்களுக்கு ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை பெற்றிருந்தது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 8-இன்ச் டிஸ்ப்ளேவும் மடிக்கப்பட்ட நிலையில் 5-இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது.
2017 ஆம் ஆண்டு முதல் ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு வெளியான காப்புரிமை விவரங்களில் ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் சிறிய இடைவெளி கொண்டிருப்பது தெரியவந்தது.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் ஹூவாய் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் தேதி மதியம் 2 மணி (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) துவங்குகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. #OPPOK1 #Smartphone
ஒப்போ நிறுவனத்தின் கே1 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருப்பதை ப்ளிப்கார்ட் உறுதிசெய்துள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது. 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 AIE, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி.செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

ஒப்போ கே1 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜி.பி. ரேம் / 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் கலர் ஓ.எஸ். 5.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ கே1 ஸ்மார்ட்போன் வேன் கோ ப்ளு, மோக்கா ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய கே1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் என ஒப்போ ஏற்கனே அறிவித்திருந்தது.
சோனி நிறுவனத்தின் புதிய XZ4 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 52 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் உடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #XperiaXZ4 #Smartphone
சோனி நிறுவனம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய எக்ஸ்பீரியா XZ4 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது.
புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
மூன்று பி்ரைமரி கேமராக்களில் 16 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.6, 52 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.6 மற்றும் 0.3 எம்.பி. ToF சென்சார் வழங்கப்படுகிறது. சமீபத்தில் அறிமுகமான ஹானர் வியூ20 மற்றும் ரெட்மி நோட் 7 போன்ற ஸ்மார்ட்போன்களில் 48 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருந்ததால் புதிய எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனி்ல் 52 எம்.பி. கேமரா வழங்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: sumahoinfo
புதிய எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் ToF சென்சார் புகைப்படம் எடுக்கும் போது ஆட்டோஃபோகஸ் வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டிருக்கிறது. சோனியின் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் CAD சார்ந்து வெளியாகியிருக்கிறது.
மேலும் எக்ஸ்பீரியா XZ4 ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் ToF சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை கிடைத்திருக்கும் விவரங்கள் பல்வேறு தளங்களில் இருந்து வெளியாகி இருப்பதால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SmartTV
இந்தியாவின் விலை குறைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி.யை டெல்லியை சேர்ந்த சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சமி SM32-K5500 ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. விலை இந்தியாவில் ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெலிவரி மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணங்கள் சேர்க்கப்படவில்லை.
32-இன்ச் ஸ்மார்ட் டி.வி. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இதனால் இதில் அனைத்து ஸ்மார்ட் செயலிகளும் சீராக இயங்கும். இந்த எல்.இ.டி. டி.வி.யில் 32-இன்ச் 1366x786 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் 10 வாட் ஸ்பீக்கர்கள், எஸ்.ஆர்.எஸ். டால்பி டிஜிட்டல் மற்றும் 5 பேண்ட் சவுண்ட் தரம் வழங்குகிறது.
இந்த டி.வி.யில் வழங்கப்பட்டிருக்கும் அனைத்து பாகங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதால் சுமார் 200 பேருக்கு வேலை கிடைத்திருப்பதாக சமி இன்ஃபர்மேடிக்ஸ் தெரிவித்திருக்கிறது. மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு டி.வி.யில் 512 எம்.பி. ரேம், 4 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.
சமி 32 இன்ச் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் செயலிகளை கூகுள் பிளேயில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கனெக்டிவிட்டியை பொருத்தவரை ஆண்ட்ராய்டு டி.வி.யில் இரு ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் யு.எஸ்.பி. போர்ட்கள், ஒரு ஏ.வி. அவுட் போர்ட் மற்ரும் வீடியோ இன்புட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருப்பதை போன்று சமி SM32-K5500 ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடலின் விலை ரூ.4,999 தான். எனினும் இந்த டி.வி.யை சமி ஆப் கொண்டு தான் வாங்க வேண்டும். சமி செயலியில் டி.வி.யை முன்பதிவு செய்யும் போது டி.வி.யை டெலிவரி செய்ய உங்களது இருப்பிட விவரங்களை கேட்கும்.
இந்தியா முழுக்க சமி ஸ்மார்ட் டி.வி.யை டெலிவரி செய்வதற்கான கட்டணம் ரூ.1,800 என்றும் இதனுடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி கூடுதலாக செலுத்த வேண்டும். அந்த வகையில் டி.வி.யை வாங்கும் போது மொத்த கட்டணம் ரூ.8,000 ஆகும்.
“இந்தியாவின் ஊரக பகுதிகளில் வசிக்கும் நடுத்தர மற்றும் ஏழ்மை குடும்பங்களை சேர்ந்தவர்களும் ஸ்மார்ட் டி.வி. அனுபவத்தை பெறச் செய்யும் நோக்கில் ரூ.4,999 விலையில் வழங்க முடிவு செய்தோம்,” என சமி இன்ஃபர்மேடிக்ஸ் நிறுவன தலைவர் அவினாஷ் மேத்தா தெரிவித்தார். #SmartTV
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி கோ என அழைக்கப்படுகிறது. #RedmiGo #Smartphone
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி கோ என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் இயங்கும் என தெரிகிறது. இதுபற்றி ரெட்மி தரப்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன், குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரிகிறது. அந்த வகையில் ரெட்மியின் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாக இது இருக்கும். சியோமி ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஒன் தளத்தில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கிறது.

ரெட்மி கோ சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. ஸ்கிரீன்
- குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர ரெட்மி கோ பற்றிய இதர விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கும் என சியோமி பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் தெரிகிறது. ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஜெர்மனியை சேர்ந்த வலைதளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி ரோ ஸ்மார்ட்போனின் இதர சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. அதன் படி ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், வைபை, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ. வழங்கப்படுகிறது. ஐரோப்பாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாத துவக்கத்தில் விற்பனைக்கும் வரும் என்றும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் துவக்க விலை ரூ.7990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyM10 #GalaxyM20
சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 என இரண்டு ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்தது.
கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 ஆக்டா-கோர் 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் வைட்வைன் எல்1 சான்று பெற்றிருக்கிறது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்களில் ஹெச்.டி. வீடியோக்களை எவ்வித சிரமமும் இன்றி சீராக ஸ்டிரீம் செய்ய முடியும். புதிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5 யு.எக்ஸ். சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இரு ஸ்மார்ட்போன்களிலும் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9, 5 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்களில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்10 சிறப்பம்சங்கள்:
- 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3430 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்20 சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 TFT டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 14 என்.எம். பிராசஸர்
- மாலி-G71 GPU
- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.5
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.9
- 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் ஓசன் புளு மற்றும் சார்கோல் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் 2 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.7,990 என்றும் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம் விலை ரூ.10,990 என்றும் 4 ஜி.பி. ரேம் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இவற்றின் விற்பனை பிப்ரவரி 5 ஆம் தேதி துவங்குகிறது. #GalaxyM10 #GalaxyM20 #Smartphones
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய இயர்போனான 'ஜெப்-ஜர்னி' யை அறிமுகம் செய்துள்ளது. #Zebronics #earphones
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஜெப் ஜர்னி என்ற பெயரில் இந்த இயர்போன் அறிமுகமாகி இருக்கிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 13 மணி நேரங்களுக்கு தடையில்லா இசையை கேட்டு மகிழுலாம். வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் 'ஜெப்-ஜர்னி' மூலம் குரலால் நீங்கள் விரும்புவதை செய்யலாம்.
'ஜெப்-ஜர்னி' இயர்போன்கள் பயனரின் கழுத்தில் சரியாக பொருந்தும் வகையில் வளைவாக உருவாக்கப்பட்டுள்ளது இது நடைப்பயிற்சி அல்லது ஒட்டப்பயிற்சி செய்யும் போது மிகவும் சௌகரியத்தைக் கொடுக்கிறது; இந்த இயர்போன்களின் பட்கள் மென்மையாகவும் காதுதுளையில் எளிதாக பொருந்தி் கொள்கிறது.

வயர்லெஸ் வசதியை தவிர்த்து இந்த 'ஜெப்-ஜர்னி' இயர்போனில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களுக்கான வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இது உங்களின் ஒலி/கேட்கும் திறனை மேம்படுத்துகிறது. கேள்விகளை கேளுங்கள், பல வழிகளை தேடுங்கள் அல்லது பாடலைக் கேளுங்கள், இந்த குரல் உதவி தொழில்நுட்பம் இவை அனைத்தையும் மேற்கொள்ள உதவி செய்யும்.
இரட்டை தொடர்பு வசதியைக் கொண்ட இந்த இயர்போன் தொலைபேசி அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இதில் இசை மற்றும் அழைப்புகளின் ஒலியைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் அழைப்புகள் வந்தால் அதிர்வலைகளை ஏற்படுத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வசதியும் உள்ளது. இதனுள் ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது.
புதிய இயர்போன்கள் பற்றி ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறும் போது,
"வயரில்லா தொழில்நுட்ப புரட்சியை தவிர்த்து, அதைவிட விட ஒரு சிறந்த, வயர் இல்லாத போன்கள் தொழிநுட்பத்தில் உச்ச கட்டமாக இது கருதப்படுகிறது. எங்களுடைய இந்த 'ஜெப்-ஜர்னி' என்னும் புதிய படைப்பில், வாய்ஸ் அசிஸ்டண்ட் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் அதிகமாக செயல்படலாம். மேலும் இது அதிக நேரம் இயங்கக்கூடிய வல்லமை கொண்டது. இசை பிரியர்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது.
என தெரிவித்தார்.






