என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #VivoV15Pro #Smartphone



    விவோ நிறுவனம் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. விவோ தனது வி15 ப்ரோ ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய விவோ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    அதன்படி விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் சந்தையில் கிடைக்கும் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன்களில் விவோ நிறுவனத்தின் முதல் மாடலாக இது இருக்கும். புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது.



    இத்துடன் ஸ்மார்ட்போனில் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் சூப்பர் AMOLED அல்ட்ரா ஃபுல்வியூ டிஸ்ப்ளே, FHD பிளஸ், 2340x1080 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 11 என்.எம். சிப்செட், அட்ரினோ 612 GPU, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி., 8 எம்.பி. மற்றும் 5 எம்.பி. சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த சென்சார்கள் 4K தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதியை வழங்கும். இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படும் என தெரிகிறது. செல்ஃபிக்களை எடுக்க முன்புறம் 32 எம்.பி. பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இதில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    சோனி நிறுவனத்தின் புதிய எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #XperiaL3 #Smartphone



    சோனி நிறுவனம் எக்ஸ்.ஏ.3 மற்றும் எக்ஸ்.ஏ.3 பிளஸ் ஸ்மார்ட்போன்களை தவிர புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சோனியின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் எல்3 என்று அழைக்கப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் 18:9 ஹெச்.டி. 720 பிக்சல் எல்.சி.டி. டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, போர்டிரெயிட் வசதியுடன் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களிடையே பொருத்தப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: winfuture

    ஸ்மார்ட்போன் முழுவதும் பிளாஸ்டிக் கேஸ் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் சில்வர், கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போன் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    சோனி எக்ஸ்பீரியா எல்3 ஸ்மார்ட்போனின் விலை பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாத நிலையில், இதன் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.16,020) என நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனினை சோனி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. #Samsung



    சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புதிய கேலக்ஸி டேப்லெட் சாதனத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. புதிய டேப்லெட் SM-P205 என்ற மாடல் நம்பரில் உருவாகி வருகிறது. 

    சமீப காலங்களில் புதிய டேப்லெட் பற்றி விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் புதிய கேலக்ஸி டேப்லெட் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. கீக்பென்ச் மூலம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய டேப்லெட் எக்சைனோஸ் 7885 சிப்செட், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் புதிய டேப்லெட் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் இது பிளாக் மற்றும் கிரே என இருவித நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. கீக்பென்ச் தளத்தின் சிங்கிள் கோரில் 1329 புள்ளிகளையும், மல்டி-கோர் சோதனையில் 4150 புள்ளிகளை பெற்றிருந்தது.



    தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி டேப்லெட்களுக்கு SM-P205 என்ற மாடல் நம்பர் பொருந்தவில்லை என்பதால், புதிய சாதனத்தின் அறிமுகம் பற்றி எவ்வித தகவலும் இல்லை. கீக்பென்ச் தளத்தில் வெளியாகி இருப்பதாக சாம்சங் புதிய டேப்லெட் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய கேலக்ஸி டேப்லெட் பற்றி இதுவரை அதிகப்படியான விவரங்கள் வெளியாகவில்லை என்பதால், கேலக்ஸி அன்பேக்டு விழாவில் இந்த டேப்லெட் அறிமுகமாகாது என்றே கூறப்படுகிறது. சாம்சங்கின் கேலக்ஸி அன்பேக்டு விழா பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பிராண்டு இரு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO #Smartphone



    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆஃப்லைன் பிராண்டாக விளங்கும் டெக்னோ இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

    டெக்னோ கேமான் ஐஏஸ் 2 மற்றும் ஐஏஸ் 2 எக்ஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். சிப்செட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை கைவிரல்கள் ஈரமாக இருக்கும் போதும், சீராக வேலை செய்யும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ மற்றும் 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    டெக்னோ கேமான் ஐஏஸ் 2 / ஐஏஸ் 2 எக்ஸ் சிறப்பம்சங்கள்

    - 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
    - IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
    - 2 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ்.2)
    - 3 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ். 2 எக்ஸ்) 
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் HIOS 4.1
    - டூயல் சிம்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - ஃபேஸ் அன்லாக்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3050 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. கேமான் ஐ.ஏஸ்.2 ஸ்மார்ட்போன் சிட்டி புளு நிறத்திலும் கேமான் ஐ.ஏஸ்.2எக்ஸ் நெபுலா பிளாக் கிரேடியன்ட் நிறத்தில் கிடைக்கிறது.

    டெக்னோ கேமான் ஐ.ஏஸ்.2 மற்றும் கேமான் ஐ.ஏஸ். 2 எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.6,699 மற்றும் ரூ.7,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #Nubia #FoldableSmartphone



    நுபியா நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் டீசர்களை வெளியிட்டு வந்த நுபியா தற்சமயம் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து நுபியா தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்ற அறிவித்திருக்கிறது. நுபியாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீனா யுனிகாம் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி இருப்பது உறுதியாகியிருக்கிறது.

    புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நுபியா நிறுவனம் நுபியா α என அழைக்கிறது. ஏற்கனவே 2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் நுபியா தனது அதிநவீன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக நுபியா α இருக்கும் என்றும் இதில் வளைந்த OLED ஸ்கிரீன் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்திருந்தது.



    நுபியா நிறுவன தலைமை செயல் அதிகாரி நி ஃபெய் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனினை அதன் ப்ரோடோடைப் சார்ந்த வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் புதிய சாதனம் அன்றாட பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

    பார்சிலோனாவில் அடுத்த வாரம் துவங்க இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் சாம்சங், ஹூவாய், சியோமி போன்ற நிறுவனங்களும் தங்களது மடிக்கக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றன. அந்த வரிசையில் தற்சமயம் நுபியாவும் இணைந்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் தவிர 5ஜி தொழில்நுட்பமும் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8 தின்க் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. #LGG8ThinQ #Smartphone



    எல்.ஜி. நிறுவனம் தனது அடுத்த ஃபிளாஇக்‌ஷிப் ஸ்மார்ட்போனான எல்.ஜி. ஜி8 தின்க் மாடலை 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுதம் செய்ய இருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா சீரிஸ் மாடலின் 4K டிஸ்ப்ளேவுக்கு அடுத்தப்படியாக எல்.ஜி.யின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்டபோனின் தோற்றம், சில அம்சங்கள் தெரியவந்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ் எல்.ஜி. ஜி8 தின்க் மாடலின் விவரங்களை தனது ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா, 3.5 எம்.எம். உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூலின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் இடம்பெற்றிருக்கிறது. இவற்றின் கீழ் எல்.ஜி. ஜி8 தின்க் பிராண்டிங் செய்யப்பட்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் ஒற்றை செல்ஃபி கேமரா, மெட்டல் ஃபிரேம் வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், வலதுபுறம் பவர் பட்டன் மற்றும் சிம் டிரே இடம்பெற்றிருக்கிறது.



    எல்.ஜி. ஜி8 தின்க் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    - நாட்ச் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
    - 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - டூயல் பிரைமரி கேமரா (ToF லென்ஸ்)
    - ஒற்றை செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மினி 5 டேப்லெட் சிறப்பம்சங்களும் அதன் அறிமுக விவரங்களும் வெளியாகியுள்ளது. #Apple #iPadMini



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடல்களை 2019 ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஐபேட்களில் ஒன்று ஐபேட் மினி 5 என அழைக்கப்படும் என்றும் இதன் வடிவமைப்பு பார்க்க ஐபேட் மினி 4 என அழைக்கப்படுகிறது.

    ஐபேட் மினி 5 மாடல் 6.1 எம்.எம். அளவு தடிமனாகவும், 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் லைட்னிங் கனெக்டர், டச் ஐ.டி. மற்றும் 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட்களில் பின்புற மைக்ரோபோன் மேல்பக்கத்தின் மத்தியில் பொருத்தப்படுகிறது.

    புதிய ஐபேட் மினி 5 மாடலில் ஏ10 ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா அல்லது ஏ10எக்ஸ் ஃபியூஷன் சிப் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும் இந்த ஐபட் ஆப்பிள் பென்சில் வசதியை சப்போர்ட் செய்யுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.



    ஏற்கனவே வெளியான தகவல்களில் 9.7 இன்ச் ஐபேட் (2018) மாடலின் மேம்பட்ட மாடல் 10 இன்ச் அளவில் அறிமுகமாகும் என்றும் இத்துடன் குறைந்த விலையில் ஐபேட் மாடல் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. 

    புதிய ஐபேட் அறிமுகம் செய்வது பற்றி ஆப்பிள் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஐபேட் மினி 5 மற்றும் குறைந்த விலை ஐபேட் மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகலாம்.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக சமீபத்திய காப்புரிய தகவல்களில் தெரியவந்துள்ளது. #Xiaomi #Smartphone



    சியோமி நிறுவனம் சாம்சங் உடனான போட்டியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. வடிவமைப்பில் சாம்சங்கை எதிர்கொள்ள சியோமி நிறுவனம் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களில் வளைந்த டிஸ்ப்ளேக்களை 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

    சாம்சங் தனது கேலக்ஸி நோட் எட்ஜ் ஸ்மார்ட்போனில் முதல்முறையாக எட்ஜ் டிஸ்ப்ளேக்களை வழங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வளைந்திருக்கும் படி உருவாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போனில் இருபுறமும் வளைவுகளை கொண்டிருந்தது.

    பின் சாம்சங் அறிமுகம் செய்யு்ம ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு கொண்டே இருந்தது. சாம்சங்கை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது ஸ்மார்ட்போன்களில் வழங்க தொடங்கின். அந்த வரிசையில் தற்சமயம் சியோமியும் இணைந்திருக்கிறது. சியோமி உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் நான்கு முனைகளிலும் வளைந்திருக்கிறது.


    புகைப்படம் நன்றி: LetsGoDigital

    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே முழுமையாக நான்கு முனைகளிலும் வளைந்திருக்கும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகளை பெற சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. 

    இதுகுறித்து லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா வழங்க சியோமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமராக்கள் மற்றும் எல்.இ.டி. மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் காப்புரிமையை மட்டும் பெற்றிருப்பதால் சியோமி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் என்பது உறுதியாகவில்லை. எனினும் மெய்சூ சீரோ மற்றும் விவோ அபெக்ஸ் 2019 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சியோமி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #OppoF11Pro #Smartphone



    ஒப்போ நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்கள் 2019 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்கள் ஒப்போ எஃப்11, எஃப்11 ப்ரோ மற்றும் ஆர்17 நியோ என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரென்டர் வெளியாகியுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் கேமரா பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மா்ட்போனின் ரென்டர்களை 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கிறது.

    அதில் ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஃபுல் ஸ்கிரீன், பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முன்புறம் செல்ஃபி கேமரா காணப்படவில்லை என்பதால் விவோ நெக்ஸ் போன்று ஒப்போ ஸ்மார்ட்போனிலும் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: 91Mobiles

    ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் புளு மற்றும் பர்ப்பிள் நிறங்களை தழுவியிருக்கிறது.

    ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 எம்.பி். சிமாஸ் கேமரா வழங்கப்படுகிறது. இதேபோன்ற கேமரா ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒப்போ தவிர விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. கேமரா சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

    புதிய ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. #GalaxyM30 #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 சிப்செட், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்20 போன்று கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பல்வேறு சீன ஸ்மார்ட்போன்களை போன்று சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லாஷ்லீக்ஸ் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2220 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.



    இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 16 எம்.பி. கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் புளு, பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் SM-M305F என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyS10e #Smartphone



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகின. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வளைந்த ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய கேலக்ஸி எஸ்10இ மாடலில் ஃபிளாட் ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: winfuture

    இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டன் கூடுதலாக கைரேகை சென்சார் போன்று இயங்கும். அந்த வகையில் கேலக்ஸி எஸ்10இ மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெறவில்லை. ஏற்கனவே கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போனிலும் கைரேகை சென்சார் பக்கவாட்டில் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனுடன் பிக்ஸ்பி சேவையை இயக்க பிரத்யேக பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், வைட் மற்றும் எல்லோ உள்ளிட்ட நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.
    ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #WirelessHeadphone



    இந்திய சந்தையில் ஆடியோ சாதனங்கள், வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக அறியப்படும் ஸ்டஃப்கூல் நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

    ஸ்டஃப்கூல் மாண்டி என அழைக்கப்படும் புதிய ஹெட்போனில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஹெட்போனினை ஒரே சமயத்தில் இருசாதனங்களுடன் இணைக்க முடியும். நெக்பேன்ட் வடிவமைப்புடன் உருவாகி இருக்கும் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை சுற்றி சிறிய கேபிள்கள் இயர்பட்களுக்கு வழங்கப்படுகிறது.



    மைக்ரோபோன் மற்றும் ரிமோட் கொண்டிருப்பதால் ஸ்டஃப்கூல் மாண்டி ஹெட்போனை தொடாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளவும், இசையை கேட்டு அனுபவிக்கலாம். இத்துடன் இந்த ஹெட்போனில் காந்த வசதி வழங்கப்பட்டிருப்பதால் ஹெட்போனை பயன்படுத்தாத போது இயர்பட்கள் இரண்டும் ஒட்டிக் கொள்ளும்.

    ஸ்டஃப்கூல் மாண்டி வயர்லெஸ் இன்-இயர் ஹெட்போன்களில் 180 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஹெட்போனினை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். ஹெட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரம் ஆகும்.

    இந்தியாவில் ஸ்டஃப்கூல் மாண்டி இன்-இயர் வயர்லெஸ் ஹெட்போனின் விலை ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வ விற்பனை ஸ்டஃப்கூல் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
    ×