என் மலர்

  தொழில்நுட்பம்

  இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்
  X

  இணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளது. #GalaxyM30 #Smartphone  சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7904 சிப்செட், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. கேலக்ஸி எம்20 போன்று கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  பல்வேறு சீன ஸ்மார்ட்போன்களை போன்று சாம்சங் தனது புதிய ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்லாஷ்லீக்ஸ் மூலம் வெளியாகியிருக்கும் தகவல்களில் சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

  அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் 6.38 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2220 பிக்சல் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7904 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே பிராசஸர் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.  இதில் 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.9 லென்ஸ், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2 லென்ஸ் வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 16 எம்.பி. கேமரா, F/2.0 லென்ஸ் வழங்கப்படுகிறது. வடிவமைப்பை பொருத்தவரை புதிய கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் ஃபினிஷ் மற்றும் புளு, பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

  கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் SM-M305F என்ற மாடல் நம்பருடன் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மாடல்களுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
  Next Story
  ×